செப்டம்பர் 01, 2012

தமிழ் கோப்புகளை PDF கோப்புகளாக மாற்றம் செய்ய



convert tamil document to pdf
இணையத்தில் PDF கோப்புகளாக மாற்ற நிறைய இணைதளங்கள் இருக்கின்றன. அவற்றில் நம்முடைய கோப்புகளை Upload செய்து அவற்றை PDF கோப்பாக மாற்றி அதனை மீண்டும் Download செய்து பெறுவோம். இதுதான் வழக்கமான நடைமுறை.
ஒரு சிலர் PDF கோப்புகளாக மாற்ற PDF convertor மென்பொருள்களையும் தரவிறக்கி வைத்துக்கொண்டு அதில் கோப்புகளை ஏற்றி வேண்டிய கோப்புகளை PDF வடிவில் பெறுவோம்.

ஆங்கில கோப்புகளை இம்முறையில் மாற்றிவிடலாம். ஆனால் தமிழில் உருவாக்கி வைத்த கோப்புகளை PDF கோப்புகளாக மாற்ற முடியுமா? அவ்வாறு மாற்றினால் சரியான முறையில் மாற்றப்படுமா? என்பது கேள்விக்குறிதான்.

தமிழில் எழுதிய கோப்புகளை PDF கோப்புகளாக மாற்றினால் அந்த கோப்புகளில் தமிழானது சரியாக தெரியாது. அவ்வாறு மாற்றிய PDF கோப்புகளை படிக்கும்போது அதில் எழுத்துகள் கட்டம் கட்டமாகவோ.. அல்லது எழுத்துகள் சிதறியோ இருக்கும். இதனால் வார்த்தைகள் முழுமைப்பெறாமல் எழுத்துச் சிதறலுடன் இருக்கும்.

cute pdf writer for tamil documents

உலகில் உள்ள பெரும்பாலான மொழிகளில் முன்னேற்றம் ஏற்பட்டு இணையத்தில் பயன்படுத்தும்போது, தமிழ் மொழி மட்டும் ஒரு சில பயன்பாட்டு மென்பொருள்களில் பயன்படுத்த முடியாமை கண்டு வருத்தப்பட வேண்டியிருக்கிறது. இக்குறைப்பாட்டை நீக்கும் வகையில் தமிழில் உருவாக்கிய கோப்புகளை அப்படியே வார்த்தை மாறாமல் எழுத்துகள் பிசகாமல் PDF கோப்புகளாக மா'ற்ற இந்த மென்பொருள் உதவுகிறது. மென்பொருளின் பெயர் Cute PDF Writer என்பது.

  • இம் மென்பொருளானது Microsoft Windows 98/ME/2000/XP/2003/Vista/7 (x86/x64) ஆகிய இயங்குதளங்களை ஆதரிக்கிறது.
  • 32-bit and 64-bit Windows 7 ஆகியவைகளிலும் இயங்குகிறது.
  • 32-bit and 64-bit Windows Vista விலும் தொழிற்படுகிறது.
  • 64-bit Windows XP/2003 லும் ஆதரிப்பதால் அனைத்துவித இயங்குதளிலும் பயன்படுத்த ஏற்ற மென்பொருளாகும்.

இம்மென்பொருள் முழுவதும் சரியாக இயங்க Ghostscript போன்ற PS2PDF converter என்ற மென்பொருளும் கட்டாயம் தேவை. முதலில் இந்த மென்பொருளைத் தரவிறக்கி நிறுவிக்கொள்ளுங்கள்.

மென்பொருள் தரவிறக்கச் சுட்டி: Download GPL Ghostscript 8.15
http://www.cutepdf.com/download/converter.exe
பிறகு இரண்டாவதாக இந்த Cute PDF Writer மென்பொருளைத் தரவிறக்கி இன்ஸ்டால் செய்துகொள்ளவும்.

Cute PDF Writer தரவிறக்கச் சுட்டி: Download Cute PDF Writer.
http://www.cutepdf.com/download/CuteWriter.exe
செய்முறை:

  • நீங்கள் PDF ஆக மாற்ற வேண்டிய தமிழ்க் கோப்புகளை (Ms-word, wordpad)திறந்துகொள்ளுங்கள். அதில் File சென்று Print என்பதை கிளிக் செய்யவும்,
  • தோன்றும் Print window-ல் உள்ள Dropdown பட்டியில் Cute PDF Writer என்பதைத் தேர்வு செய்து Print கிளிக் செய்யவும்.
  • இப்போது நீங்கள் தேர்ந்தெடுத்த கோப்பானது PDF கோப்பாக மாற்றப்படும்.
  • இறுதியில் சேமிக்க வேண்டிய இடத்தைத் தேர்ந்தெடுத்தால் போதுமானது. உங்கள் தமிழ் கோப்புகள் நீங்கள் தேர்ந்தெடுத்த இடத்தில் PDF கோப்பாக சேமிக்கப்பட்டுவிடும்.
  • இப்போது உங்களுடைய PDF கோப்பைத் திறந்து பாருங்கள். அச்ச அசலாய் உங்களுடைய கோப்புகள் MS-word, word pad -ல் இருந்தது போலவே எழுத்துகள் சிதறாமல் அழகாக காட்சியளிக்கும்.


PDF கோப்புகளை உங்கள் கணினியில் திறந்து பார்க்க .. PDF reader , PDF viewer போன்ற ஏதேனும் ஒரு மென்பொருள் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும் என்பதை மறவாதீர்கள்.

நன்றி: தங்கம் பழனி