செப்டம்பர் 12, 2012

"ஹிர்ஹேனஸ் II"

 
"ஹிர்ஹேனஸ் II"
(Hyrcanus II)

"ஹிர்ஹேனஸ் II"  தன்னை இராஜாவாக அறிவித்தான். ஆனால், 'அரிஸ்டோபிளஸ் II' தனது மூத்த சகோதரனான "ஹிர்ஹேனஸ் II"  க்கு எதிராக படையெடுத்தான். சதுசேயர்கள் 'அரிஸ்டோபிளஸ் II' ஐ ஆதரித்தார்கள். பாலஸ்தீனாவில் குழப்பங்கள் ஏற்பட்டது.

"ஹிர்ஹேனஸ் II" அரசியல் வாழ்வில் இருந்து விலகத் தயாரானான். ஆனால், இவனுக்கு சிலர் உதவி செய்து திரும்பவும் ஆட்சியில் இருக்கத் தூண்டினர். இரண்டு சகோதரர்களும் உதவிக்காக ரோம நாட்டை அணுகினர். இந்நேரத்தில் ரோமத் தளபதி "பாம்பீ" கிழக்கில் 'பொந்து இராஜா' மில்ற்டேட்ஸிற்கு (Miltridates)  எதிராக படையெடுத்து வந்தான். அந்நேரத்தில் ரோமத் தளபதியான பாம்பீ, ஹிர்ஹேனஸ் II க்கு உதவி செய்ய முன் வந்தான். காரணம்?


 
'அரிஸ்டோபிளஸ்'

"அரிஸ்டோபிளஸ் ஆபத்துக்குரியவன்" என்ற எண்ணம் இருந்து வந்தது. அரிஸ்டோபிளஸ் தனது இரண்டு மகன்களுடன் ரோமருக்கு சிறைக் கைதியாகப் பிடிக்கப்பட்டான். இது கி.மு.63 - ல் நடந்தது. ரோமத் தளபதியான பாம்பீ, மகா பரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசித்தான். இச் செயல் யூதருக்கு பரிசுத்தக் குலைச்சலாகவும், அவமானமாகவும், பெரிய குற்றமாகவும் இருந்தது.

"ஹிர்ஹேனஸ் II" பிரதான ஆசாரியனாக நியமிக்கப்பட்டான். இவன் கி.மு.63 முதல் கி.மு.40 வரை பிரதான ஆசாரியனாக இருந்தான். கி.மு.64 லிருந்து ரோமர் யூதேயாவை ரோம ஆட்சிக்குக் கீழ் கொண்டு வந்தது. சீரியர் முழுவதுமாக மறைந்து போனார்கள். இதற்கு இடைப்பட்ட காலத்தில் ரோமில் பல குழப்பங்கள் ஏற்பட்டது.

'அரிஸ்டோபிளஸ் II' வினுடைய மகன் "ஆண்டிஹேனஸ்" ரோமச் சிறைச்சாலையிலிருந்து தப்பி, பார்த்தியரோடு சேர்ந்து எருசலேமுக்கு எதிராக அணிவகுத்தான். "ஹிர்ஹேனஸ் II" வினுடைய இரண்டு காதுகளையும் வெட்டியெடுத்தான். காரணம்? காதில்லாதவன் பிரதான ஆசாரியனாக இருக்க முடியாது - என்பதினால்.

ஆண்டிஹேனஸ் பிரதான ஆசாரியனாகவும், இராஜாவாகவும் இருந்தான். இச் செயல்கள் ரோம அரசாங்கத்திற்கு கோபத்தை தூண்டி விட்டது. ரோம சம்ராஜ்ஜியம் ஏரோதுவை யூதருக்கு இராஜாவாக கி.மு.38-கி.மு.40 ல் நியமித்தது. 

கி.மு.37 ல் 'ஆண்டோனி', 'ஆக்டோவியன்' என்ற இருவரும் எருசலேமுக்கு எதிராக அணிவகுத்தார்கள். அப்படி அணிவகுத்து ஆண்டிஹேனஸைக் கொன்று யூதருக்கு இராஜாவாக 'ஏரோது' வை நியமித்தார்கள்.

ஆண்டிஹேனசோடு  ஹாஸ்மோனியரின் ஆட்சி நிறைவு பெற்றது. ஹாஸ்மோனியர்கள் ஏறக்குறைய 100 ஆண்டுகள் ஆட்சி செய்தனர். இதனிடையே ரோமாவில் ஆக்டோவியனுக்கும், ஆண்டனிக்கும் இடையில் யார் பெரியவன்? என்ற யுத்தம் நடந்தபோது, ஏரோது ஆண்டனிக்கு ஆதரவாக இருந்தான். அந்நேரத்தில் ஆக்டோவியன் வெற்றி பெற்றதால், ஏரோது தந்திரமாக சென்று மன்னிப்பு கேட்டு, தனது ஆட்சியை நிலைப்படுத்திக் கொண்டான்.