ஜூலை 22, 2015

சிறுசிறு செய்தி தொகுப்புகள் - 3




ஆகஸ்ட் மாதம் போராடி ஜெபிக்கும் உபவாச ஜெபக் குறிப்புகள்

ஆகஸ்ட் மாதம் போராடி ஜெபிக்கும் உபவாச ஜெபக் குறிப்புகள்

1.   நாமகிரிப்பேட்டையின் மொத்த மக்கள் தொகை 1,09,963 பேர்
(ஒரு லட்சத்து ஒன்பதாயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்து மூன்று பேர்)
பத்தில் ஒன்று தசமபாகமாக 10,907 பேர் தேவை. (பத்தாயிரத்து தொள்ளாயிரத்து ஏழு பேர்)

2.   மையப்பகுதி மக்கள் தொகை 12,675 பேர். (பன்னிரெண்டாயிரத்து அறுநூற்றி எழுபத்தைந்து பேர்)
பத்தில் ஒன்று தசமபாகமாக 2007 பேர் தேவை. (இரண்டாயிரத்து ஏழு பேர்)

3.   2020 க்குள் 2000 பேர் சபை அங்கத்தினர்களாக (இரண்டாயிரம் பேர்)

4.   வருடந்தோறும் 400 புதிய ஆத்துமாக்கள் சபை அங்கத்தினர்களாக, இரட்சிப்புப் பெற, சபையில் சேர்க்கப்பட

5.   76 கிராம மக்களின் மீட்பிற்காக இரட்சிப்பிற்காக

*எங்கள் ஊழியரை நம்பி ஆத்துமாக்களைத் தாரும்! எங்கள் சபையை நம்பி ஆத்துமாக்களைத் தாரும்! எங்களை நம்பி ஆத்துமாக்களைத் தாரும்! அவர்களை நல்ல முறையில் பராமரிக்க, வழி நடத்த கிருபையைத் தாரும்!

*மக்கள் உம்மை ஏற்றுக்கொள்கிற இருதயபக்குவத்தை தாரும். இரட்சிப்பைத் தாரும். இயேசுவுக்கு இருதயத்தில் இடங்கொடுக்கிற ஜனமாக மாற்றும். திறந்த மனதோடு இயேசுவை ஏற்றுக் கொள்கிற கிருபையைத் தாரும்!

*எல்லாருடைய இருதயங்களிலும் இயேசுவின் அன்பு ஊற்றப்படுவதாக! இரட்சிப்பு வெளிப்படுவதாக! மீட்பு உண்டாவதாக!

*நாமகிரிப்பேட்டையின் மேலும் 76 கிராமங்கள் மேலும் ஆவியானவர் அசைவாடுவீராக!

6. இவ்வாண்டு (2015) தரிசன முகாம்கள் மூலம் சந்திக்கப்பட்ட ஆத்துமாக்களின் மீட்பிற்காக ஜெபிப்போம் ….

v  மே மாதம் நடந்த சிறுவர் முகாம் மூலம் சந்திக்கப்பட்டோர்       70 பேர்
v  மே மாதம் நடந்த மாணவர் முகாம் மூலம் சந்திக்கப்பட்டோர்     70 பேர்
v  ஜீன் மாதம் நடந்த ஆண்கள் முகாம் மூலம் சந்திக்கப்பட்டோர்    16 பேர்
v  ஜீலை மாதம் நடந்த பெண்கள் முகாம் மூலம் சந்திக்கப்பட்டோர்  82 பேர்

சந்திக்கப்பட்ட அனைவரும் தொடர்ந்து ஞாயிறு ஆராதனைக்கு ஆவியானவர் அழைத்து வரும்படி ஜெபிப்போம்

7. ஆராதனைக்கு ஆத்துமாக்கள் வர இயலாதபடிக்கு தடை செய்யும் கிரியைகள் அகலும்படி ஜெபிப்போம் …

Ø  சமுதாய, பாரம்பரியக் கட்டுகள், குடும்ப உறவுகளால், நண்பர்களால் வரும் தடைகள் நீங்கும்படி
Ø  மூடநம்பிக்கைகள், வீண் சந்தேகங்கள், வீண் வதந்திகளால் வரும் தடைகள் நீங்கும்படி
Ø  பாவ, சாப, விக்கிரகக் கட்டுகள், பில்லி சூனியக் கட்டுகள், அறியாமை இருள் தடைகள் நீங்கும்படி
Ø  சாத்தானின் அமைப்புகள், பிசாசின் கிரியைகள், அந்திக்கிறிஸ்துவின் ஆவிகள் செயலிழக்க
Ø  துர்உபதேசக்காரர், கள்ள ஊழியர், பின்மாற்றக்காரர்களால் வரும் தடைகள் நீங்கும்படி
Ø  மனுஷீக வல்லமைகள், தந்திரங்கள், சூழ்ச்சிகள் செயலிழந்து போகும்படி
Ø  நொண்டிசாக்குபோக்குகள், உலக கவலைகள், அவசர காரியங்கள், லௌகீக காரியங்களிலிருந்து விடுபட
Ø  மாம்ச சிந்தை, பொருளாசை, பகை, பொறாமை, கசப்பு, வெறுப்பு, மேட்டிமை, அகந்தை, இறுமாப்பு, கர்வம் நீங்க

8. இப்படிப்பட்ட ஊழியங்கள் சபையில் நடக்க ஜெபிப்போம்

ü  சிறுவர்/ வாலிபர்/ மாணவர்/ ஆண்கள்/ பெண்கள்/ - ஐக்கியங்கள் மற்றும் தரிசன முகாம்கள்; ஆசீர்வாத கூடுகைகள்
ü  தொழில் வியாபாரிகள், அரசு ஊழியர்கள் – தரிசன முகாம்கள்; ஆசீர்வாத கூடுகைகள்
ü  சுகமளிக்கும் நற்செய்தி கூட்டங்கள், உயிர்மீட்சி கூட்டங்கள், எழுப்புதல் கூட்டங்கள்
ü  தனித்தாள் ஊழியம், பின்தொடர் ஊழியம், மருத்துவமனை ஊழியம், பள்ளி, கல்லூரி ஊழியம்
ü  கடித ஊழியம், வீடு சந்திப்பு ஊழியம், இரத்தக் கோட்டை சுகம் தரும் ஜெப ஊழியம்
ü  கிராம ஊழியம், கிளை சபை ஊழியம், தெருப்பிரசங்கம், திறந்தவெளிக் கூட்டங்கள், வீட்டுக்கூட்டம்
ü  ஜெபக்குழு, படைமுயற்சிக் கூட்டம், 16ம் தேதி சுவிசேஷக் கூடுகை, இணையதள ஊழியம், சீஷத்துவப் பயிற்சி
ü  கைப்பிரதி ஊழியம் – வருடத்திற்கு 40,000 கைப்பிரதிகள் விநியோகிக்க… தேவைகள் சந்திக்கப்பட…

·          கர்த்தாவே! மேற்கண்ட ஊழியங்கள் அனைத்தும் எங்கள் மூலம் நிறைவேற கிருபை செய்யும்! இரக்கமாய் இரும்!

·          மேற்கண்ட ஊழியங்கள் மூலம் ஆத்துமாக்கள் சந்திக்கப்பட, சபைக்கு கடந்து வர இரக்கம் தாரும்! இரட்சிப்பு தாரும்!

·          சின்னவன் ஆயிரமும் சிறியவன் பலத்த ஜாதியுமாவான் என்று சொன்னீரே! உமது வசனத்தை உறுதிப்படுத்தியருளும்!

·          ஊழியங்களை நிறைவேற்ற ஆத்துமாக்களை அனல்மூட்டி எழுப்பி விடும்! ஆத்தும பாரத்தை தாரும்! தாரும்!

·          அர்ப்பணிப்போடு, பாரத்தோடு, தாகத்தோடு ஊழியங்களை செய்ய வருவோரை சபையில் எழுப்புங்க ஆண்டவரே!

·          சபையின் தரிசனமும், ஊழியமும் நிறைவேற தங்களை அர்ப்பணிக்கிறவர்களை சபையில் எழுப்புங்க ஆண்டவரே!

·          எங்கள் சபையின் மேலும், நாமகிரிப்பேட்டையின் மேலும் மனமிரங்கும் ஆண்டவரே! ஆத்துமாக்களைத் தாரும்!

·          சபையில் இருக்கிற ஒவ்வொருவரும் கர்த்தருடைய ஊழியத்தை தங்கள் ஊழியமாக கருதி மனதார செய்ய எழுப்பும்!

·          “கர்த்தருடைய பட்டயம்; கிதியோனுடைய பட்டயம்” என்ற ஆர்ப்பரிப்போடு விசுவாசத்தோடு செய்ய எழுப்பி விடும்!

·          ஊழியங்களுக்காக ஜெபிப்போரை, கொடுப்போரை, தாங்குவோரை, செயல்படுவோரை, தியாகம் செய்வோராய் மாற்றும்!

·          ஊழியங்களை செய்வதிலும், கொடுப்பதிலும் மக்கள் மகிழ்ச்சியடைய, உற்சாகப்பட ஊக்கமருளும்! ஆசீர்வதியும்!

9. இப்படிப்பட்ட ஜெபங்கள் சபையில் நடக்க ஜெபிப்போம் …

o    உபவாச ஜெபம், 40 நாள், 30 நாள், 21 நாள், 15 நாள், 7 நாள், 3 நாள் மற்றும் வாராந்திர உபவாச ஜெபங்கள், ஒய்கோஸ்

o    இரவு ஜெபம், ஜாமக்காரன் முழு இரவு ஜெபம், ஆகஸ்ட் மாதம் வாரம் 3 நாள் இரவு ஜெபம் (திங்கள், புதன், வெள்ளி)

o    வியாதிப்பட்டோருக்கான ஜெபம், காத்திருப்பு ஜெபம், அதிகாலை ஜெபம், 12 மணிநேர ஜெபம், 24 மணி நேர ஜெபம்

o    12 மணி நேர ஆராதனை, 24 மணி நேர ஆராதனை மற்றும் 12 மணி நேர துதிபலிகள், 24 மணி நேர துதிபலிகள்
o    அமாவாசை ஜெபம், பெளர்ணமி ஜெபம், ஜெப நடை,

o    ஆடித்தள்ளுபடி ஜெபம் (பாவங்களை தாளில் எழுதி, குற்ற உணர்வு நீங்க, அறிக்கையிட்டு தீ வைத்து எரித்தல்)

10. ஞானஸ்நானம்: வருடத்திற்கு 400 பேர் எடுக்க தேவன் கிருபை செய்யும்படியாய் ஜெபிப்போம் …

§   ஜனங்கள் கர்த்தரை அறிகிற அறிவினால் நிரப்பப்பட்டு ஞானஸ்நானத்திற்கு அர்ப்பணிக்க
§   தடைகள் விலக, பயங்கள் விலக, உடனடி இரட்சிப்புப் பெற (கந்தாகே நாட்டு மந்திரி, சிறைச்சாலைக்காரன்)
§   யோவான்ஸ்நானகனைத் தேடி மக்கள் அணியணியாய் வந்ததுபோல மனந்திரும்பி ஸ்நானம் பெற கடந்து வர
§   புதிய ஆத்துமாக்கள் ஞானஸ்நானத்திற்குள் வழிநடத்தப்பட, சபைமக்கள் ஆலோசனை கொடுக்க…

§   புது ஆத்துமாக்கள் மனந்திரும்புதலையும், பாவமன்னிப்பின் நிச்சயத்தையும், ஞானஸ்நானத்தையும் பெற வாஞ்சிக்க

§   குடும்பம் குடும்பமாக, திரள்திரளாக மக்கள் ஞானஸ்நானம் எடுக்க ஆவியானவர் அநுக்கிரகம் செய்ய

11. பரிசுத்தாவியின் அபிஷேகத்திற்காக …

v  தாகமுள்ள யாவர் மேலும் ஆவியானவர் ஊற்றப்படும்படியாக, பரிசுத்தாவியானவரின் அன்பு ஊற்றப்பட
v  பரிசுத்தாவியானவரை துக்கப்படுத்தாதபடி, விரோதமாக பேசாதபடி, ஆவியை அவித்துப் போடாதபடி இருக்க
v  ஆவியின் கனிகளால், வரங்களால் நிரப்பப்பட, பக்திவிருத்திக்கேதுவாக பயன்படுத்த, நவமான பாஷைகளால் பேச
v  அபிஷேகத்தின் நோக்கமறிய… பிசாசுகளை துரத்த/ வியாதியை குணமாக்க/ நற்செய்தி அறிவிக்க/ சாட்சியாக வாழ
v  பரிசுத்தவான்கள் சீர்பொருந்த, மாம்சத்தின் கிரியைகளை அழித்துப்போட, இயேசுவில் நிலைத்திருந்து கனி கொடுக்க

12. வேதவாசிப்பிற்காக …

Ø  அனைவர் கைகளிலும் வேதம் வைத்திருக்க… தினந்தோறும் வேதம் வாசிக்கிற தியானிக்கிற பழக்கம் உண்டாக
Ø  ஒரு ஆண்டிற்குள்ளாக வேதம் முழுவதையும் வாசித்து முடிக்க தீர்மானம் எடுக்க/ முழங்காலில் நின்று வாசிக்க
Ø  வசனத்தின்படி வாழ அர்ப்பணிக்க, கீழ்படிய, வசனத்திற்கு பயப்பட

13. விசுவாச வாழ்விற்காக… விசுவாசத்தில் வளர

o    குறைவுகளில் தேவனை சார்ந்திருக்க/ இழப்புகளில் பின்வாங்காதிருக்க/ உபத்திரவங்களில் சோர்வுராதிருக்க
o    கிறிஸ்துவினிமித்தம் வரும் துன்பங்களில் மகிழ்ந்திருத்தல்/ வசனத்திலும், ஜெபத்திலும் நிலைத்திருத்தல்
o    சுவிசேஷத்திற்காக பயப்படாமல் தீங்கநுபவித்தல்/ பாடுகளை சகித்தல்/ மனிதனுடைய தூஷிப்பில் கவலையற்றிருத்தல்
o    எந்த நிலைமையிலும் கர்த்தரை மறுதலியாமலிருத்தல்/ விசுவாச நம்பிக்கை துரோகங்களை சகித்தல்
o    இரத்த சாட்சியாக மரிக்கவும் ஆயத்தமாயிருத்தல்/ பரலோக நம்பிக்கையில் உறுதிப்பட/ சத்தியத்தில் முதிர்வடைய

14. ஆவிக்குரிய தலைவர்கள் எழும்பும்படியாக ஜெபிப்போம் …

*        ஆராதனை தலைவர்கள்/ பாடகர்கள், பாடகிகள்/ இசைக்கலைஞர்கள்/ துதி செய்யும் குழுக்கள்
*        ஜெபக்குழுத் தலைவர்கள்/ ஜெபக்குழுத் தலைவிகள்/ நற்செய்திப் பணியாளர்கள்/ உதவியாளர்கள்
*        மூப்பர்கள்/ மூப்பிகள்/ நிர்வாகிகள்/ பராமரிப்பாளர்கள்/ பொறுப்பாளர்கள்/ கண்காணிகள்/ உடன் ஊழியர்கள்
*        வரவேற்பாளர்கள்/ உபசரிப்பாளர்கள்/ அலுவலகப் பணியாளர்கள்/ பகல்,இரவு காவலர்கள்/ பணிவிடையாளர்கள்

15. ஊழியம் செய்பவர்களுக்காக …

·          தனிப்பட்ட வாழ்வில் பரிசுத்தம்/ ஜெபம், வேதவாசிப்பில் கிரமமாக செயல்பட/ சாட்சியாக வாழ
·          குடும்பத்தில் வரும் தடைகள் விலக/ குடும்பத்தை நன்கு பேண/ உண்மை, கீழ்படிதலுள்ளவர்களாயிருக்க
·          சரீர சுகம் பெலன் பாதுகாப்பிற்காக/ தரிசனம், ஆத்துமபாரம் பெருக/ கிருபை நிறைந்த சத்தியவார்த்தை நாவிலிருக்க

16. வாலிபர்களுக்காக …

Ø  பரிசுத்தத்தில், தேவபயத்தில் வளர/ ஜெபம், வேதவாசிப்பு, விசுவாசத்தில் வளர/ சாட்சி, கனி, வரம், தாலந்துகளில் வளர
Ø  காதலில் விழாதபடி சாத்தானுக்கு எதிர்த்து நிற்க/ வார்த்தை, கற்பு, அன்பு, கீழ்படிதலில் முன்மாதிரியாக காணப்பட
Ø  ஊழியங்களில் ஆத்துமபாரமடைய, முழுநேர ஊழியத்திற்கு அர்ப்பணிக்க, உபவாசம், ஜெபம், ஆராதனையில் பிரியப்பட
Ø  தாலந்து வரங்களை தேவனுக்காக பயன்படுத்த/ வாலிபர் ஐக்கியத்தில் பங்குபெற/ சபை பொறுப்புகளில் பங்குபெற

17. விசுவாச குடும்பங்களுக்காக …

v  குடும்பங்களில் அனைவரும் இரட்சிக்கப்பட/ குடும்ப ஜெபம் ஏறெடுக்கப்பட/ குடும்ப பொருளாதாரம் உயர
v  செய்யும் தொழில், வேலை, வியாபாரம் ஆசீர்வதிக்கப்பட/ திருமண காரியங்கள் வாய்க்க/ குழந்தைபாக்கியம் உண்டாக
v  குழந்தைகள் நலன், பள்ளி, கல்லூரி தேவைகள் சந்திக்கப்பட/ சுகவீனங்கள் நீங்க/ சமாதானம் பெருக/ பாதுகாப்பிற்காக
v  வீடு தவறாது ஜெபக்குழு, பராமரிப்புக்குழு நடத்தப்பட/ சத்துருக்களின் பொறாமை, போராட்டம் தாக்காமலிருக்க

18. புது நபர்களுக்காக …

§   தொடர்ந்து வர/ குடும்பமாக வர/ தேவைகள் சந்திக்கப்பட/ இரட்சிப்பிற்கேதுவான தடைகள் விலக
§   ஆராதனையில் தொடப்பட, விடுதலை பெற/ கர்த்தருடைய மகிமையை ருசிக்க, தேவ பிரசன்னத்தை உணர
§   சத்தியம் விளங்க/ கவனச்சிதறல் ஏற்ப்படாதிருக்க/ சபை ஐக்கியத்தில் நிலைத்திருக்க/ பயம், தயக்கம் நீங்க

19. சபை தேவைகளுக்காக …

ü  மின்இணைப்பு வேலைகள் முற்றுப்பெற/ மின் விசிறிகள் 12 வாங்கப்பட/ உள் அலங்கார வேலைகள்
ü  சபைஅலுவலக கட்டிடவேலை முற்றுப்பெற/ அலுவலக பொருட்கள் வாங்கப்பட
ü  நற்செய்திகூட்டங்கள் நடத்த ஒலிபெருக்கி சாதனங்கள் வாங்க/ ஹாலோஜின் லைட்டுகள் வாங்கப்பட
ü  சமையல் பொருட்கள், தட்டுகள்/ சேர்கள்/ பெஞ்சுகள்/ மைக், ஸ்ட்ரேஞ்சர், ஜெனரேட்டர் வாங்கப்பட
ü  தரிசனமுகாம்கள், நற்செய்தி கூட்டங்கள், கிளை சபை வாடகை, ஊழியத்தேவைகள் அனைத்தும் சந்திக்கப்பட
ü  வருடந்தோறும் 40,000 கைப்பிரதிகள், போஸ்டர், நோட்டீஸ் மற்றும் அச்சக செலவுகள் அனைத்தும் சந்திக்கப்பட
ü  ஆலய நில நிதி/ ஆலய கட்டிட நிதி/ ஏழைகள் நிதி/ மிஷினெரி நிதி/ பராமரிப்பு நிதி சந்திக்கப்பட

20. திருச்சபையின் எழுப்புதலுக்காக …

v  சபை உயிர்மீட்சி அடைய/ ஜெபத்தில் எழுப்புதல்/ பரிசுத்தத்தில் எழுப்புதல்/ வசனத்திற்குசாட்சி கொடுப்பதில் எழுப்புதல்
v  தேவ அன்பில் எழுப்புதல்/ மன்னிப்பதில் எழுப்புதல்/ சமாதானத்தில் எழுப்புதல்/ பக்தி வைராக்கியத்தில் எழுப்புதல்
v  நற்செய்தியை அறிவிப்பதில் எழுப்புதல்/ஐக்கியத்தில் எழுப்புதல்/ அப்பம்பிட்குதலில் எழுப்புதல்/சுகமளிப்பதில் எழுப்புதல்
v  சபை தரிசனத்தில் எழுப்புதல்/ நாமகிரிப்பேட்டை முழுவதும் சுவிசேஷமயமாக்குவதில் எழுப்புதல்
v  பல சபைகள் கட்டப்பட, மிஷினெரிகள் தாங்கப்பட, இந்தியாவின் எழுப்புதலுக்கு காரணமாக விளங்க
v  பல ஊழியர்களை எழுப்ப, பல ஊழியங்களை தாங்குவதில் எழுப்புதல் அடைய
v  தேவ நாமம் மகிமைப்பட, தேவராஜ்யம் கட்டப்பட, தேவசித்தம் நிறைவேற அர்ப்பணிப்பதில் எழுப்புதல்

21. நடக்க இருக்கும் கூட்டங்களுக்காக ஜெபிப்போம் …

Ø  ஆகஸ்டு மாதம் 30 நாட்களும் “போராடி ஜெபிக்கும் உபவாச ஜெபம்”
Ø  வாரத்தில் மூன்று “இரவு ஜெபங்கள்” (திங்கள், புதன், வெள்ளி)
Ø  ஆகஸ்ட் 15 “வாலிபர் கொண்டாட்டம்” (சுமார் 250 வாலிபர்கள் பங்கு பெற விசுவாசத்தோடு ஜெபிப்போம்)
Ø  ஆகஸ்ட் 28,29,30 ஆகிய நாட்களில் நடைபெறும் “நற்செய்தி பெருவிழா” விற்காக
(முதல்நாள் 1000 பேர், 2ஆம் நாள் 2000 பேர், 3ஆம் நாள் 3000 பேர் பங்குபெற விசுவாசத்தோடு ஜெபிப்போம்)
Ø  செப்டம்பர் 24 “தொழில் வியாபாரிகள் ஆசீர்வாத கூடுகை”
Ø  அக்டோபர் 24 “அரசு ஊழியர்கள் ஆசீர்வாத கூடுகை”

வருடந்தோறும் நடக்கும் கூட்டங்களுக்காக … மக்கள் சந்திக்கப்பட … தேவைகள் சந்திக்கப்பட …

ü  பிப்ரவரி மாதம் – 40 நாட்கள் உபவாச ஜெபம்
ü  மே மாதம் – சிறுவர் முகாம் /  மாணவர் முகாம்
ü  ஜீன் மாதம் – ஆண்கள் முகாம்
ü  ஜீலை மாதம் – பெண்கள் முகாம்
ü  ஆகஸ்ட் மாதம் – போராடி ஜெபிக்கும் உபவாசம், வாலிபர் முகாம், நற்செய்தி கூட்டங்கள், வாரத்தில் 3 நாட்கள் இரவுஜெபம்
ü  செப்டம்பர் மாதம் – தொழில் வியாபாரிகள் ஆசீர்வாத கூட்டம்
ü  அக்டோபர் மாதம் – அரசு ஊழியர்கள் கூட்டம்
ü  நவம்பர் மாதம் – 21 நாள் ஒய்கோஷ் ஜெபம்

22. போதகருக்காக ஜெபிப்போம் …

v  ஊழிய பயணப்பாதுகாப்புக்காக/ பயணத்தில் தேவசித்தம் இருக்க/ பயணத்தடைகள் நீங்க/தேவைகள் சந்திக்கப்பட
v  குடும்பத்திற்காக/ உடைமைகளுக்காக/ இளைப்பாறுதலுக்காக/உடல் நலத்திற்காக/உள்ளச்சோர்வுக்காக/எதிர்ப்புகளுக்காக
v  ஸ்தாபனத்தில் தரும் ஊழியபொறுப்புகளுக்காக/ அற்புதஅடையாளங்கள் நடக்கும்படி/குணமாக்கும் வல்லமை வெளிப்பட
v  கர்த்தருடைய வசனத்தை முழு தைரியத்தோடு சொல்ல/ ஜெபத்திலும், போதிப்பதிலும் இடைவிடாமல் தரித்திருக்க
v  பிள்ளைகளுக்காக, கல்விக்காக, ஆவிக்குரிய வளர்ச்சிக்காக, பாஸ்டரம்மாவிற்காக

23. தேசத்திற்காக … 30 மாநிலம்/ 7 யுனியன்/ 1618 மொழிகள்/ 6400 ஜாதிகள்/ 6 இனங்கள்/ 29 பெரிய பண்டிகைகள் – இந்தியா

*        மிஷினெரிகள், மிஷினெரி ஸ்தாபனங்கள், கிறிஸ்தவ சமுதாய சேவை மையங்கள், பள்ளி கல்லூரிகள்
*        தேசத்தில் சுவிசேஷத்திற்கு திறந்த வாசல் ஏற்பட … மதவாதிகள் மனம்மாற… தீவிரவாதம் ஒழிய …
*        கிறிஸ்தவ தொலைக்காட்சிகள், வானொலிகள், பத்திரிக்கைகள், ஊழியர்கள், சுவிசேஷகர்கள், மேய்ப்பர்கள்
*        அரசியல் தலைவர்கள், கட்சித் தலைவர்கள், அதிகாரிகள், தேசிய தலைவர்கள்
*        வேதாகமக் கல்லூரிகள், ஆசிரியர்கள், ஸ்தாபனங்கள், ஸ்தாபனத் தலைவர்கள்
*        இந்தியாவில் தேவன் பின்மாரி மழையை ஊற்ற, மிகப் பெரிய எழுப்புதலைக் கட்டளையிட

24. இஸ்லாமியர்களுக்காக … இஸ்லாமிய நாடுகளுக்காக … ஆதிவாசிகளுக்காக(172) … பழங்குடியின் மக்களுக்காக

25. உலக நாடுகளுக்காக (233)/ இஸ்ரேலுக்காக, எருசலேமுக்காக/ ஐந்து கண்டங்களுக்காக … கம்யுனிச நாடுகளுக்காக