செப்டம்பர் 09, 2012

"சிந்திக்க வேண்டிய சிந்தனைக்குரிய சில கேள்விகள்"

 

"சிந்திக்க வேண்டிய சில கேள்விகள்"

" அவர் உன்னை விசாரிக்கும்போது என்ன சொல்லுவாய்? (எரேமியா: 13:21)

"இப்போதும் சீகோரின் தண்ணீரைக் குடிப்பதற்குப் போகிறதினால் உனக்குப் பிரயோஜனம் என்ன? ஐபிராத்து நதியின் தண்ணீரைக் குடிப்பதற்கு அசீரியாவிற்குப் போகிறதினால் உனக்குப் பிரயோஜனம் என்ன?" (எரேமியா: 2:18)

தேவன் கையிலே நன்மையைப் பெற்ற நாம் தீமையையும் "பெறவேண்டாமோ?" (யோபு: 2:10)

"என் கண்களோடே உடன்படிக்கை பண்ணின நான் ஒரு கன்னிகையின் மேல் நினைப்பாயிருப்பதெப்படி?" (யோபு: 31:1).

"நீங்கள் நம்முடைய தேவனுக்குப் பயந்து நடக்க வேண்டாமோ?" (நெகேமியா: 5:9)

என் ஜனத்தின்மேல் வரும் பொல்லாப்பை நான் எப்படிப் பார்க்கக்கூடும்? என் குலத்துக்கு வரும் அழிவை நான் எப்படி சகிக்கக்கூடும்? (எஸ்தர்: 8:6)

"என் இருதயத்தை சுத்தமாக்கினேன், என் பாவமறத் துப்புரவானேன் என்று சொல்லத்தக்கவன் யார்?" (நீதிமொழிகள்: 20:9)

"கர்த்தருடைய வல்லமையான செய்கைகளைச் சொல்லி, அவருடைய துதியையெல்லாம் பிரஸ்தாபப்படுத்தத்தக்கவன் யார்?" (சங்கீதம்: 106:2)

"கர்த்தருடைய ஆலோசனையில் கூட நின்று, அவருடைய வார்த்தையைக் கேட்டறிந்தவன் யார்? அவருடைய வார்த்தையைக் கவனித்தக் கேட்டவன் யார்?" (எரேமியா: 23:18)

ஒரு பெண் தன் ஆபரணத்தையும், ஒரு மணவாட்டி தன் ஆடைகளையும் மறப்பாளோ? என் ஜனங்களோ எண்ணி முடியாத நாட்களாய் என்னை மறந்து விட்டார்கள்" (எரேமியா: 2:32).