செப்டம்பர் 14, 2012

"பிலிப்பு"

 
"பிலிப்பு"
(Philip)
கி.மு.4 முதல் கி.பி.34

லூக்கா: 3:1 - ல் இவன் இத்தூரியா, திராக்கொனித்தி நாடுகளுக்கு தேசாதிபதி என கூறுகிறது. இவன் ஆண்ட நாடுகளில்  யூதர்கள் மிகச் சிலரே குடியிருந்தார்கள். ஏரோதின் மகன்களில் பிலிப்பு மட்டுமே நேர்மையான ஆட்சி செய்தான் என்று பேர் பெற்றான். இவனது ஆட்சி மூலம் குடிமக்கள் பல நன்மைகளை பெற்றார்கள். எனவே, மக்கள் இவன்மேல் மிகுந்த பற்றுள்ளவர்களாக இருந்தனர். இவன் மனைவி, ஏரோது ஆண்டிபஸின் முன்பு நடனமாடி, யோவான் ஸ்நானகனின் தலையை பரிசாகக் கேட்ட சலோமிதான்.

பிலிப்பு, யோர்தான் நதி துவங்கும் இடத்தில் "செசரியா பிலிப்பு" (Caesarea Philippi) என்ற நகரைக் கட்டினான். யோர்தான் நதி, கெனசரேத்துக் கடலில் விழும் இடத்திலிருந்த பெத்சாயிதா பட்டணத்தைப் புதுப்பித்து, அதற்கு ஜீலியஸ் என்று பேரிட்டான். அது அகஸ்துராயன்  மகனின் பெயர். இவன் வெளியிட்ட நாணயங்களில் ரோநாட்டுப் பேரரசனின் உருவம் பதிக்கப்பட்டிருந்தது.

யூத ஆட்சித் தலைவர்களில் இவ்வாறு உருவங்கள் பதித்த நாணயங்களை முதலாவது வெளியிட்டவன் பிலிப்புதான். இவன் கி.பி.34 - ல் இறந்தான். இவன் ஆண்ட நாடுகள் சீரிய மாநிலப் பகுதியுடன் சேர்க்கப்பட்டன. பின்பு, கி.பி.37 - ல் கலிகுலா அவைகளை அகிரிப்பாவுக்கு கொடுத்தான்.