செப்டம்பர் 07, 2012

மகா அலெக்சாண்டரிலிருந்து கி.பி.70 வரை உள்ள சரித்திரம்



 

"சரித்திரப் பின்னணியம்"

பழைய ஏற்பாடு கடைசியாக கண்ட சாம்ராஜ்யம் "பெர்ஷியா" நெகேமியா: 12:22 - ல் தரியு ராஜாவைப் பற்றிச் சொல்கிறது. அவன் பெர்ஷிய நாட்டு அதிபதி. ஒரு வேளை அவன் கி.மு.336 முதல் கி.மு.331 வரை வாழ்ந்த தரியு III - வதாக இருக்கலாம். புதிய ஏற்பாட்டில் அரசியல் நிலவரம் ரோம சாம்ராஜ்யமாக இருந்தது. இந்த மாறுதல்கள் எப்படி நடந்தது என சுருக்கமாகப் பார்ப்போம்.

மகா அலெக்சாண்டரிலிருந்து கி.பி.70 வரை உள்ள சரித்திரம்:

கி.மு.334 ல் 'இஸ்ஸீஸ்' யுத்தத்தில் மகா அலெக்சாண்டர் பெர்சிய மன்னனை தோற்கடித்தார். மூன்று வருடங்களுக்குள்ளாக எகிப்தையும் கைப்பற்றிக் கொண்டான். கிரேக்கக் கலாச்சாரத்தை மக்களிடம் புகுத்த வேண்டும் என்பதுதான் அவனது இலட்சியம்.

 

கி.மு.332 ல் முழு பாலஸ்தீனா அலெக்சாண்டர் வசம் வந்தது. எருசலேம் பட்டணத்து வாசல்கள் 'ஜாடா' என்ற ஆசாரியன் கீழ், அலெக்சாண்டரை வரவேற்று ராஜாவாக ஏற்றுக் கொண்டார்கள். ஆகவே, அப்பட்டணம் அழிக்கப்படவில்லை. இதனால் யூதர்கள் இரக்கத்துடன் நடத்தப்பட்டனர். கி.மு.323 ல்அலெக்சாண்டர் மரித்தான்.அலெக்சாண்டர் மரித்த பின்பு அவனுடைய சாம்ராஜ்யம் நான்காகப் பிரிக்கப்பட்டு, அவன் தளபதிகளுக்குக் கொடுக்கப்பட்டது.

 1. அந்திக்கோனஸ் என்பவன் - மத்தியதரைக் கடலிலிருந்து மத்திய ஆசியா மட்டுமுள்ள இடங்கள்.

2. செசாண்டர் என்பவன் - மக்கதோனியா

3. தாலமி என்பவன் - லாகி, எகிப்து, தென் சீரியா நாடுகள்

4. லிசிமாக்கஸ் என்பவன் - திரேசி - யின் மேலும் ஆட்சி செய்தனர்.

பாலஸ்தீனாவின் சரித்திரத்தில் இரண்டு இராஜ குலத்தவர்கள் முக்கியமானவர்கள். அவர்கள் 'தாலமியர்கள்' என்றும் அழைக்கப்பட்டனர். தாலமியர்கள் எகிப்திலும், செலுக்கியர்கள் சிரியாவையும் ஆண்டார்கள். பாலஸ்தீனா தாலமியர்களின் ஆதிக்கத்தில் வந்தது. தாலமிகள் மிகுந்த இரக்கத்துடன் நடந்து கொண்டார்கள்.

தாலமிகள் பாலஸ்தீனாவின் மதக் காரியங்களில் தலையிடவில்லை. யூதர்கள் மத்தியில் பல கல்விமான்கள் தோன்றினார்கள். கி.மு.280 ல் 'எபிரேய பழைய ஏற்பாடு' கிரேக்க மொழியில் மொழி பெயர்க்கப்பட்டது. இது "செப்துவஜிந்த்" (Septuagent) என அழைக்கப்பட்டது. இந்த மொழி பெயர்ப்பு வேலையை கிரேக்க மொழி தெரிந்த 70 பேர் செய்தபடியால், இது 'செப்துவஜிந்த்' என்று அழைக்கப்படுகிறது.