செப்டம்பர் 25, 2012

”சேலா” - பொருள் விளக்கம்


“சேலா”  - பொருள் விளக்கம்

“சேலா”  (Celah) - என்ற சொல் வேதத்தில் 71 முறை வருகிறது. இதன் பொருள் “இணைத்துப் பார்த்தல்” என்பதாகும். அதாவது, இரண்டு கருத்துக்களை இணைக்கிறது. 

உதாரணமாக...

”ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி் - நாலும் ரெண்டும் சொல்லுக்கு உறுதி”

நாலும் - நாலடியார்  
ரெண்டும் - திருக்குறள்
சொல்லுக்கு உறுதி.     -  இரண்டு கருத்துக்களையும் இணைக்கிறது - “சேலா”.

“சேலா” என்பதற்கு 7 வித கருத்து விளக்கங்கள் உண்டு. அவை...

1. இரண்டு கருத்துக்களையும் இணைத்தல் - சேலா.

2. பாடிக் கொண்டே இருக்கும்போது இடையில் நிறுத்துவது - சேலா.

3. எப்போதும் அதுதான் உண்மை என்று ஸ்தாபிப்பதற்கு என்று உபயோகப்படுத்துவது - சேலா.

4. திரும்பத் திரும்ப அதையே சொல்லுதல் - சேலா.

5. மெதுவாக பாடுகிறவன் சத்தத்தை உயர்த்திப் பாடுகிறான் - சேலா.

6. ஸ்பிரிதம் விடுதல் அல்லது பரப்பி விடுதல் அதாவது, இராகம் விடுதல் - சேலா. (உ.ம்) “நன்றி ராஜா... நன்றி ராஜா...”

7. பாடிக் கொண்டு இருக்கும்போதே வாத்தியக் கருவியில் ஒரு இடைச் சொருகல் - சேலா.


"சேலா" மற்றும் "இகாயோன்" என்பவை பைபிளில் வரும் பாடல்களில் காணப்படும் குறிப்புகளாகும். 

இதில் சேலா (Selah) என்பது சங்கீதம் (Psalms) மற்றும் ஆபகூக் (Habakkuk) புத்தகத்திலும், இகாயோன் (Higgaion) என்பது சங்கீதத்திலும் வருகின்றது. ஆனால் இவை வரும் எல்லா இடங்களும் பாடல்களில்தான்; ஆபகூக்கிலும் ஒரு பாட்டில்தான் வருகின்றது. அவைகளின் அர்த்தத்தை அறியும் முன்பு, முன்னோட்டமாக...

உங்களில் இசைக்கருவிகள் வாசிக்கத்தெரிந்தவர்களுக்கு குறிப்பாக பியானோ (Piano, Keyboard) வாசிப்பவர்களுக்கு நான் சொல்வது புரியும்.


 இன்று "Sheet Music" என்ற ஒரு தாளில் பாடல்களின் குறிப்புகள்(Notes) மற்றும் அந்த குறிப்புகள் :தாள அளவீடு"களுக்குள் (Measures) வருகின்றன என்றும் காணலாம். 

உதாரணமாக மிகவும் பிரபலமான அளவீடுகளில் ஒன்று 4/4 . அதாவது ஒரு அளவீட்டுக்குள் 4 காற்-குறியீடுகள் வரும், அல்லது இரண்டு அரை-குறியீடுகள் வரும், அல்லது ஒரு முழுக்குறியீடு வரும். 

மேலும் இசையின் அளவின் ஏற்றம் இறக்கங்களும் (Dynamics such as: crescendo, decrescendo [p,f, ppp, mp, mf ... etc] ) வருவதைக் காணலாம் .(http://en.wikipedia.org/wiki/Dynamics_%28music%29  )
 

எபிரெய மொழியில் சேலா என்பதற்கு ( סלה celah ) - A technical musical term probably showing accentuation, pause, interruption(இசைக்குறியீட்டின்படி சற்றே நிறுத்தவும்)- To lift up, exalt ( [தேவனை] உயர்த்தவும்) என்று பொருள்படும்.

எனவே இப்பாடலை வாசிக்கும்போது அல்லது அந்த குழுவினர் (Choir) பாடும்போது அங்கே சற்றே நிறுத்தி அடுத்தவரியை படிக்கவேண்டும். 


சுமார் 3000 வருடங்களுக்கு முன்பே தாவீது இசையில் வல்லவனாகவும் அதை வாசிக்கவும், பாடவும் பெரிய குழுவினரை வைத்திருந்தான் என்றும் அறிவோம். அதில் இப்படி அவன் இசைக்குறியீடுகளைப் பயன்படுத்தியது மிகவும் ஆச்சரியமான விஷயம்!

இகாயோன் என்பதற்கு (הגיון higgayown) - meditation, musing , resounding music (தியானிக்கவும், சிந்தனைக்கு, நிரம்பிய இசை) என்று பொருள்படும்.
சுருக்கமாக சங்கீதம் என்றால் பாடல்; அதை பாட்டாக பாடவேண்டும்; அந்த பாட்டில்:


சேலா என்றால் (இசைக்குறியீட்டின் படி) சற்றே நிறுத்தவும்.


இகாயோன் என்றால் தியானிக்கவும் என்று அர்த்தமாகும்.


சிலர் பழக்கப்பட்டதால், கடகடவென்று வேகமாக சங்கீதத்தை வாசிப்பார்கள். இனிமேல் அந்த இடத்திலாவது ஓடாமல் நிறுத்துங்கள். மீண்டும் அந்த வசனத்தை வாசித்துப் பார்த்து தியானியுங்கள்.