"செலுக்கிய இராஜாவான III ம் அந்தியோகஸ்"
(The Seleucid King Antiochus III )
கி.மு.223 முதல் கி.மு.187 வரை
கி.மு.198 ல் தாலமி இராஜாவின் மேல் "பனேயன்" (Puneian) என்ற இடத்தில் யுத்தம் செய்து வெற்றி கண்டான். இந்த செலுக்கிய இராஜா அலெக்சாண்டர் குடும்பத்தைச் சேர்ந்தவன். அசீரியாவிலிருந்து இவர்கள் ஆண்டபோதிலும், இவர்கள் கிரேக்க அதிகாரிகள். இவர்களின் கீழ் உள்ள ஜனங்கள் கிரேக்கத் தத்துவங்களையும், புராணங்களையும் விரும்பினர். அந்தியோகஸ் படையெடுப்பில் பாலஸ்தீனா செலுக்கியர்களின் கையின் கீழ் வந்தது.
மூன்றாம் அந்தியோகஸ் ராஜா யூதர்களின் மதச் சடங்குகளை ஏற்றுக் கொள்ளாதவனாக இருந்தான். கிரேக்கக் கலாச்சாரத்தை தனது ஆட்சியில் புகுத்த விரும்பினான். இதிலிருந்துதான் "ஹெலனேசஸ்"(Hellenizetion) என்ற பதம் வந்தது. நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ கிரேக்கக் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் மற்ற மக்களிடம் புகுத்துதல் "ஹெலனேசிஸ்" (Hellenizetion)அதாவது "கிரேக்கக் கலாச்சாரம்" என பொருள்படும்.