செப்டம்பர் 04, 2012

வெளிநாடு செல்பவர்கள் பயண விபரம் அறிய



ரோம்2ரியோ என்ற வலைத்தளம் என் கண்ணில் பட்ட பயனுள்ள வலைத்தளம். இது ஒரு டிராவில் ஸ்ர்ச் இஞ்சின் ஆகும். இதன் மூலம் நாம் ஒரு நகரத்தில் இருந்து மற்றொரு நகரத்திற்கு கார்,பஸ்,ரயில்,கப்பல்,விமானம் மூலம் செல்ல எவ்வளவு நேரம் பிடிக்கும் மற்றும் எப்படி செல்ல வேண்டும் என்றும் தகவல் கிடைக்கிறது.

இதன் மூலம் நான் மதுரையில் இருந்து நான் அமெரிக்காவில் வசிக்கும் ஊர் பெயரை மட்டும்தான் டைப் செய்தேன். அது மிக அருமையாக எவ்வளவு நேரம் எப்படி பயணம் மேற்கொள்ள வேண்டும்(கார்,ரயில்,விமானம்) என்று அழகாக தகவல் தருகிறது. இதன் மூலம் எந்த நாள் போகிறோம் & திரும்பி வருகிறோம் என்றும் தகவல் தந்தால் அது விமான டிக்கெட் விலையையும் எந்த எந்த விமானம் மூலம் செல்லலாம் என்றும் அருமையான தகவல்கள் வருகின்றன.

 இது நாடுவிட்டு நாடு செல்பவர்களுக்கு ஒரு ரஃப் ஐடியா கிடைக்கிறது.


www.rome2rio.com


நன்றி: ஈகரை தமிழ் களஞ்சியம்