செப்டம்பர் 08, 2012

"தாலமி"


"தாலமி"
(Ptolemy)

மகா அலெக்சாண்டரின் தளபதிகளில் ஒருவன். அலெக்சாண்டரின் மரணத்துக்குப் பின் இவனது தளபதிகளான தாலமி, லிசிமாக்கஸ், கஸாண்டர், செலுக்கஸ் ஆகிய நான்கு தளபதிகளும் தேசத்தைப் பங்கிட்டுக் கொண்டார்கள். இந்த தாலமி என்பவன் எகிப்தையும் பாலஸ்தீனத்தையும் ஆண்டான். செலுக்கஸ் சீரியரையும் ஏனைய ஆசிய நாடுகளையும் ஆண்டான்.

தாலமியர்களின் ஆட்சியின் கீழ் பாலஸ்தீனாவிலும் எகிப்திலும் வாழ்ந்த யூதர்கள் செழிப்பாக வாழ்ந்தார்கள். 'தாலமி பிலதெள்பிஸ்' என்பவனின் நாட்களில் எகிப்தில் வாழ்ந்த யூதர்கள் பழைய ஏற்பாட்டை கிரேக்க மொழியில் மொழி பெயர்த்தார்கள். அந்த பழைய ஏற்பாட்டு கிரேக்க மொழிபெயர்ப்புக்கு "செப்துவஜிந்த்" (Septugent) என்று பெயர். 

பிலதெள்பிஸ் ஒரு கட்டிடப் பிரியன். இவன் காலத்தில் இவன் கட்டிய கலங்கரை விளக்கின் பெயர் "பாரேஸ்" கலங்கரை விளக்கு ஆகும். இது உலக அதிசயங்களில் ஒன்றாய் விளங்குகிறது. அத்துடன் அலெக்சாண்டிரியா பட்டணத்தில் ஒரு நூலகத்தை கட்டி உலக இலக்கிய நூல்கள் பலவற்றை அதில் சேர்த்து வைத்தான். பாலஸ்தீனா கடற்கரையில் கர்மேல் பர்வதத்தின் வடக்கே 'அக்கோ' அல்லது 'தாலமி' என்ற துறைமுகத்தைக் கட்டினான்.