செப்டம்பர் 25, 2012

தீர்க்கதரிசிகளின் பிரிவுகள்

தீர்க்கதரிசிகளின் பிரிவுகள்

1. புத்தகம் எழுதிய தீர்க்கதரிசிகள் (Canonical)

    புத்தகம் எழுதாத தீர்க்கதரிசிகள் (Non-Canonical)

2. பெரிய தீர்க்கதரிசிகள், சிறிய தீர்க்கதரிசிகள்.

பெரிய தீர்க்கதரிசிகள்: 4 பேர்.

ஏசாயா, எரேமியா, எசேக்கியேல், தானியேல்

சிறிய தீர்க்கதரிசிகள்: 12 பேர்.

ஓசியா, யோவேல், ஆமோஸ், ஒபதியா, யோனா, மீகா, நாகூம், ஆபகூக், செப்பனியா, ஆகாய், சகரியா, மல்கியா.

பெரிய தீர்க்கதரிசி என்றும் சிறிய தீர்க்கதரிசி என்றும் எதனால் அழைக்கப்படுகிறது?

தீர்க்கதரிசிகள் எழுதின புத்தக அளவை வைத்து, பெரிய தீர்க்கதரிசி என்றும் சிறிய தீர்க்கதரிசி என்றும் அழைக்கப்படுகிறது.  அவர்களின் வயதின் அடிப்படையில் அல்ல; இரு சாராரும் சமமானவர்கள்.

தீர்க்கதரிசிகளின் காலம்: (கி.மு.900 - கி.மு.400 வரை)

சுமார் கி.மு.850 க்கும் கி.மு.400 க்கும் இடைப்பட்ட காலத்தில்தான் இந்த 16 தீர்க்கதரிசிகளும் தீர்க்கதரினம் உரைத்தார்கள். அதாவது, கி.மு.9 ஆம் நூற்றாண்டுக்கும் 4 வது நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலம். இப்போது 21 ஆம் நூற்றாண்டு.

தீர்க்கதரிசிகள் மூன்று கால அடிப்படையில் பிரிக்கப்படுகின்றனர்:

1. சிறையிருப்புக்கு முன்பு தீர்க்கதரிசனம் உரைத்தவர்கள்:

நாகூம், ஆபகூக், செப்பனியா, ஏசாயா, எரேமியா, ஒபதியா, ஓசியா, யோவேல், ஆமோஸ், யோனா, மீகா. (கி.மு.850 - கி.மு.586).

2. சிறையிருப்புக்கு பின்பு தீர்க்கதரிசனம் உரைத்தவர்கள்:

ஆகாய், சகரியா, மல்கியா (கி.மு.536 - கி.மு.400).

3. சிறையிருப்பின் காலம் தீர்க்கதரிசனம் உரைத்தவர்கள்:

எசேக்கியேல், தானியேல் (கி.மு.586 - கி.மு.536).

 வேதாகமத்தில் தீர்க்கதரிசிகளின் புத்தகங்கள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள வரிசையில் தீர்க்கதரிசனம் சொல்லவில்லை.

9 ஆம்   நூற்றாண்டில்: கி.மு.900 - 800

ஒபதியா, யோவேல், யோனா

8 ஆம் நூற்றாண்டில்:  கி.மு.800 - 700

ஆமோஸ், ஓசியா, ஏசாயா, மீகா

7 ஆம் நூற்றாண்டில்: கி.மு. 700 - 600

எரேமியா, செப்பனியா, நாகூம், ஆபகூக்

6 ஆம் நூற்றாண்டில்: கி.மு.600 - 500

எசேக்கியேல், தானியேல்

5 ஆம் நூற்றாண்டில்: கி.மு. 500 - 400

ஆகாய், சகரியா, மல்கியா

யாருக்கு, யார் தீர்க்கதரிசனம் சொன்னார்கள்:

1. புறஜாதிகளுக்கு தீர்க்கதரிசனம் உரைத்தவர்கள்:

நாகூம் - அசீரியாவுக்கு விரோதமாகவும், நினிவேயின் அழிவைக் குறித்தும்...

ஒபதியா - ஏதோமின் அழிவைக் குறித்தும்...

2. வடக்கு ராஜ்யத்திற்கு (இஸ்ரவேல்): (எப்பிராயீம், சமாரியா)

ஓசியா, ஆமோஸ், யோனா, மீகா

3. தெற்கு ராஜ்யத்திற்கு ( யூதா): (எருசலேம்)

ஏசாயா, எரேமியா, எசேக்கியேல், தானியேல், யோவேல், ஆபகூக், செப்பனியா, ஆகாய், சகரியா, மல்கியா.

அசீரியா, பாபிலோன், மேதியா,பெர்சியா ஆகிய நாடுகள் உலக வல்லரசுகளாய் இருந்த காலத்தில் இந்த சிறிய தீர்க்கதரிசிகள் தீர்க்கதரிசனம் உரைத்தார்கள். கி.மு.900 முதல் கி.மு.400 க்கும் இடையில்.

இவர்கள் இப்படி அறியப்படுகிறார்கள்:

ஒபதியா - பரியாசக்காரனை கடிந்து கொண்ட தீர்க்கதரிசி

யோவேல் - பெந்தெகொஸ்தே தீர்க்கதரிசி

யோனா - முழு உலக தீர்க்கதரிசி

ஆமோஸ் - நீதியின் தீர்க்கதரிசி

ஓசியா - அன்பின் தீர்க்கதரிசி

ஏசாயா - பழைய ஏற்பாட்டு சுவிஷேசகன்

மீகா - ஏழைகளின் தீர்க்கதரிசி

எரேமியா - கண்ணீரின் தீர்க்கதரிசி

செப்பனியா - மேடைப் பேச்சாளன்

நாகூம் - கவிஞன்

ஆபகூக் - தத்துவ மேதை

எசேக்கியேல் - தரிசன தீர்க்கதரிசி

தானியேல் - ஞானத்தை வெளிப்படுத்தின தீர்க்கதரிசி

மல்கியா - விரிவுரையாளர்

ஆகாய், சகரியா - தேவாலய தீர்க்கதரிசிகள்