செப்டம்பர் 11, 2012

"இராணி சலோமி அலெக்சாண்டிரா"


 

"இராணி சலோமி அலெக்சாண்டிரா"
(Queen Salome Alexandra)

'ஜான் ஹிர்ஹேனஸ் I' மரித்த பின்பு, அவனது மனைவி சலோமி அலெக்சாண்டிரா ஆட்சிக்கு வந்தாள். 'அலெக்சாண்டர் ஜேன்னஸ்' (Alexander Jannaeus)  என்பவனை திருமணம் செய்து கொண்டாள். இவன் கி.மு.103 - முதல் 76 வரை பிரதான ஆசாரியனாகவும், ஆளுகை செய்கிறவனாகவும் இருந்தான். தன் சகோதரன் 'ஜான் ஹிர்ஹேனஸ் I' - ப் போல இவனும் பரிசேயர்களை விரும்பவில்லை. தனது எதிராளிகளைக் கொடூரமாகத் தண்டித்தான். ஒரு முறை 800 பேரை சிலுவை மரத்தில் கொன்றான். அவர்கள் கண்முன்பாக, அவர்களின் மனைவி, பிள்ளைகளைக் கொன்றான். அவன் ஆட்சியை மக்கள் விரம்பவில்லை என்றாலும், வெளியரங்கமாக எதிர்க்கவில்லை. அவன் வாழ்வின் கடைசி நாட்களில் மனைவியிடம் பரிசேயர்களிடம் ஒப்புரவாகும்படி சொன்னான்.

இவனுக்குப் பின் மீண்டும் - இராணி சலோமி அலெக்சாண்டிரா - ராணியாக பதவியெற்றாள். அலெக்சாண்டர் ஜேன்னஸிற்கு சலோமி மூலம் பெற்ற 'ஹிர்ஹேனஸ் II' (Hyrcanus II) பிரதான ஆசாரியனாக இருந்தான்.

சலோமி அலெக்சாண்டிரா புத்தியாய் ஆட்சி செய்து, பரிசேயர்களோடு நல்ல தொடர்பை உருவாக்கினாள். பரிசேயர் சனகெரிம் சங்கத்தில் சேர அனுமதிக்கப்பட்டர்கள். சலோமி அலெக்சாண்டிரா கி.மு.67 - ல் மரித்தாள்.