செப்டம்பர் 22, 2012

தேவாலயம்


தேவாலயம்

பாலஸ்தீனாவில் உள்ள  யூதர்களுக்கும், சிதறியுள்ள யூதர்களுக்கும் தேவாலயம் மிக முக்கியமானதாக அமைந்திருந்தது. இந்த தேவாலயம் மிக அழகாக அமைந்திருந்தது. (மாற்கு 13 . 1). இந்த தேவாலயம், இஸ்ரவேருக்கு தேவன் கொடுத்த தெரிந்தெடுத்தலுக்கு அடையாளமாகவும், தேவனுடைய உடன்படிக்கையை ஞாபகமூட்டுதலுக்கு அடையாளமாகவும் அமைந்திருந்தது.

லேவியர் வழிவரும் ஆசாரியத்துவமும், ஆரோனும், அவன் குமாரர் வழி வருகிற பிரதான ஆசாரியனும் எதிர்பார்க்கப்படும். இந்த ஆசாரியர்கள்  24 குடும்ப குழுக்களாகப் பிரிக்கப்பட்டு , இந்த ஆசாரிய ஊழியர்கள் முதலில் வருவார்கள். (லூக்கா 1.5).

தினமும் பலி கொடுத்தலும், பொதுவான பலியும், தனிப்பட்ட பலிகளும் செய்யப்பட்டு வந்தன. தகனபலி ஒரு தனிப்பட்ட பெயரிலும், கோத்திரங்களின் பெயரிலும் செலுத்தப்பட்டு வந்தது. பிராய்ச்சித்த நாள் ஒரு முக்கியமான நிகழ்ச்சியாக கருதப்பட்டு வந்தது. அதில், பிரதான ஆசாரியன் மகா பரிசுத்த ஸ்தலத்தில் போய் தேவனோடு தொடர்பு கொள்வான். இதை ஆசாரியர்  ஒரு பதவியாகவும் ஒரு பொறுப்பாகவும் எடுத்துச் செல்வார்கள். பிரதான ஆசாரியன் சனகரீம் சங்கத்தின் தலைவராகவும் இருந்தான். இதனால், பிரதான ஆசாரியத்துவம் ஒரு மதிப்புமிக்க பதவியாக காணப்பட்டது. (யோவான் 18.22).

மூன்று முக்கிய பண்டிகைகள் வருடாந்திரமாக தொடர்ந்து ஆசரிக்கப்பட்டு வந்தது. (யாத்திராகமம் 23.14-17  உபாகமம் 16.16,17)

1. பஸ்கா என்கிற புளிப்பில்லா அப்பப் பண்டிகை

2. வாரங்களின் பண்டிகை

3. கூடாரப் பண்டிகை

தேவாலயத்தின் ஆராதனையிலும், அதை பராமரிக்கவும் தேவாலயத்தின் தலைவன் ஒருவன் இருப்பான். எல்லா பலிகளும் சரியாக செலுத்தப்பட்டதா என்பது இவனது பொறுப்பு. செல்வாக்கு மிகுந்த ஆசாரியர்கள் முக்கியமான தலைமை ஆசாரியர்களாக இருப்பார்கள். செல்வம் மிகுந்த ஆசாரியர்களும் உண்டு. ஏழையான ஆசாரியர்களும் உண்டு.