செப்டம்பர் 11, 2012

"ஹாஸ்மோனியனின் ஆட்சி"

 


"ஹாஸ்மோனியனின் ஆட்சி"

இராணுவத்தை உபயோகிக்கும் திறமை பெற்ற சீமோன் எல்லாராலும் அங்கீகரிக்கப்பட்ட  தலைவனாயிருந்தான். இவனுக்கு மூன்று பதவிகள் இருந்தன. 1. பிரதான ஆசாரியன். 2. யூததலைவன்  3. தளபதி ஆகியவை.

சீரியர்களும் இவனை அங்கீகரித்தார்கள். யூதேயா சீரியர்களின் கீழ் இருந்தாலும் சீரியர்களுக்கிடையே பல கருத்து வேறுபாடுகள் இருந்தன. இதனால், ஒவ்வொரு குழுவும் யூதருக்குப் பிரியமாக இருக்க முயற்சி செய்தனர். அத்துடன் ரோமரும், பார்த்தியரும் யூதருக்கு எதிராக இருந்தார்கள். யோப்பா வரை யூதேயாவுடன் சீமோன் சேர்த்துக் கொண்டான்.

கி.மு.134 - ல் சீமோன் மரித்தான். இவன் மகன் (யோவான்) "ஜான் ஹிர்ஹேனஸ்" (John Hyrcanous) அல்லது "ஹிர்ஹேனஸ் I" (Hyrcanous I)என்பவன் ஆட்சிக்கு வந்தான்.

யூதேயாவுக்கு அதிக சுதந்திரம் கிடைத்தது. மோவாப், ஏதோம் போன்ற பகுதிகள் யூதேயாவுடன் சேர்க்கப்பட்டது. இவன் தனது பெயரில் நாணயத்தை அச்சிட்டு வெளியிட்டான். அவன் பிரதான ஆசாரியனாகவும் இருந்தான்.

 
ஹஸிடியர்கள் வழிவந்த பரிசேயர்கள் கிரேக்கக் கலாச்சாரத்தை முற்றிலும் எதிர்க்கிறவர்களாக இருந்தனர். பிரதான ஆசாரியன் பரிசுத்தமாகவும், இரத்தத்தினால் கறைபடாதவனாகவும் இருக்க வேண்டும் என விரும்பினார்கள். யோவான் ஹிர்ஹேனசுக்கு பரிசேயர் கொடுத்து வந்த இராணுவ உதவியை பின் வாங்கிக் கொண்டார்கள். காரணம்? பரிசுத்தமாக வாழ வேண்டும்.

1.  பிரதான ஆசாரியத்துவம் பரிசுத்தமாக இருக்க வேண்டும் என்பதாக இருக்கலாம்.

2. ஜான் ஹிர்ஹேனஸிற்கு ராஜாவாக வேண்டும் என்ற விரப்பம் இருந்தது. அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

3. ஹிர்ஹேனஸிற்கு பிரதான ஆசாரியத்துவம் ஊழியத்தை விட இராணுவத்தில் அதிக ஆர்வமும், கவனமும் இருந்தது. இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

பரிசேயர்களுக்கும், சதுசேயர்களுக்கும் இடையே விருப்பமில்லாமை குழப்பங்கள் இருந்தது. மதச் சடங்குகளை ஒழுங்குபடுத்த ஆசாரிய சட்டங்களை பார்த்து பரிசீலிக்க வேண்டும் என்றும், சதுசேயர்களும் பாரம்பரியங்களைப் பார்த்து பரிசீலிக்க வேண்டும் என்றும் பரிசேயர்கள் வாதாடினார்கள்.

ஹிர்ஹேனஸ் I - கி.மு.104 - ல் மரித்தான். அவன் மூத்த மகன் 'அரிஸ்டோபிளஸ்' (Aristobulus) பதவிக்கு வந்தான். இவன் தன்னை இராஜா என அழைத்தான். ஆனால், இவன் ஒரு வருடம் மட்டுமே ஆட்சி செய்தான்.