எண்ணாகமம் விளக்கவுரைத் தொடர் – 16
எண்ணாகமம்: 3:17 – லேவியின் குமாரர் :
கெர்சோன்
கோகாத்
மெராரி
கெர்சோனின் குமாரர்:
1.
லிப்னீ 2. சீமேயி (எண்ணாகமம்: 3:18)
கோகாத்தின் குமாரர்:
1.
அம்ராம் 2. இத்சேயார் 3. எப்ரோன்
4. ஊசியேல் (எண்ணாகமம்: 3:19)
மெராரியின் குமாரர்:
1.
மகேலி 2. மூசி (எண்ணாகமம்:
3:20)
லேவி கோத்திரத்தில் ஒரு மாதம் முதல்
அதற்கு மேற்பட்ட வயதுள்ள ஆண்பிள்ளைகளை எண்ணி தொகையிட வேண்டும்:
எண்
|
பெயர்
|
தொகை
|
திசை
|
தலைவன்
|
வேலை: ஆசரிப்புக்கூடார காவல்
|
1
|
கெர்சோன்
|
7500 பேர்
|
மேற்கு
|
லாயேலின் மகன் எலயாசாப்
|
3: 25,26
|
2
|
கோகாத்
|
8600 பேர்
|
தெற்கு
|
ஊசியேலின் குமாரன் எல்சாபான்
|
3:31
|
3
|
மெராரி
|
6200 பேர்
|
வடக்கு
|
அபியாயேலின் குமாரன் சூரியேல்
|
3:36>37
|
4
|
மோசே, ஆரோன் அவன் குமாரர்
|
-
|
கிழக்கு
|
-
-
|
3:38 பரிசுத்தஸ்தலத்தை காவல் காக்க
|
ஃஆக மொத்தம்: 22,300 பேர். இவர்கள்
அனைவருக்கும் ஆசாரியனாகிய ஆரோனின் குமாரன் எலெயாசர் என்பவன் லேவியருடைய
தலைவர்களுக்கு தலைவனாய் (சோனல் லீடராக) பரிசுத்த ஸ்தலத்தை காவல் காக்கிறவர்களுக்கு
விசாரிப்புக்காரனாயிருக்க வேண்டும். (எண்ணாகமம்: 3:32)
எண்ணாகமம்: 3:43 – ல் இஸ்ரவேல் புத்திரர்
– 22,273 பேர்
எண்ணாகமம்: 3:39 – ல் லேவியின் புத்திரர்
– 22,000 பேர்
லேவியின் புத்திரரின் தொகைக்குமேல்,
இஸ்ரவேல் புத்திரரின் தொகை அதிகமாக சுமார் 273 பேர் வருகிறார்கள் (எண்ணாகமம்:
3:46). இவர்கள் மீட்கப்பட வேண்டும்.
எண்ணிக்கையில் வித்தியாசம் வரக்காரணம்?:
இதை அறிய … எண்ணாகமம்: 3:39 ஐ 3:46
ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.
எண்ணாகமம்: 3:39
– “மோசேயும் ஆரோனும், கர்த்தருடைய வாக்கின்படி, லேவியரில் ஒரு மாதம் முதல் அதற்கு
மேற்பட்ட வயதுள்ள ஆண்பிள்ளைகளையெல்லாம் அவர்களுடைய வம்சங்களின்படியே எண்ணினார்கள்;
அவர்கள் இருபத்தீராயிரம் பேராயிருந்தார்கள்”.
எண்ணாகமம்:
3:46 – “இஸ்ரவேல் புத்திரருடைய
முதற்பேறுகளில் லேவியரின் தொகைக்கு அதிகமாயிருந்து, மீட்கப்பட வேண்டிய இருநூற்று
எழுபத்து மூன்று பேரிடத்திலும், …”
எண்ணாகமம்: 3:22 – கெர்சோன் – 7500 பேர்
எண்ணாகமம்: 3:28 – கோகாத் - 8600 பேர்
எண்ணாகமம்: 3:34 – மெராரி - 6200 பேர்
மொத்தம் - 22,300 பேர் வர வேண்டும். ஆனால், எண்ணாகமம்:
33:9 – ன் படி மொத்தம் 22,000 பேர்தான் வருகிறது. அப்படியானால் … 300 பேர் கணக்கு
விடுபடுகிறது.
என்ன காரணம்?
அது இதுதான்…
1.
தகுதியற்றவர்களாக மாறியிருப்பார்கள். தகுதியிழப்பிற்கு காரணம்? பாவம்
அல்லது குஷ்டரோகம்
2.
ஒருசிலர் தகுதி இருந்தும் …. ஒருவேளை மரித்துப்போயிருக்கலாம்
3.
இஸ்ரவேலர் எகிப்திலிருந்து புறப்பட்டது முதல் (யாத்திராகமம்:
12:1-12) பதிமூன்று மாதங்களுக்குப் பின், மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு இடைப்பட்ட
காலத்தில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கையாக இருக்கலாம்.
சில சந்தேகங்களும் அதற்கான பதில்களும்:
அ) எண்ணாகமம்: 3:46 – ல் இஸ்ரவேல் புத்திரரில்
லேவியரின் தொகையைவிட அதிகம் இருப்போரின் எண்ணிக்கை 273 பேர் என
குறிப்பிடப்பட்டுள்ளது. எண்ணாகமம்: 3:39 – ன் படி 300 பேரின் கணக்கு விடுபடுகிறது.
300 பேரில் 273 ஐ கழித்தால் 27 பேர். அந்த 300 பேர் கணக்கில்கூட 27 பேர் விடுபடுகிறார்கள்.
காரணம்…. அந்த 27 பேரும் நிச்சயமாக
மரித்துப் போயிருக்கலாம். எனவேதான், இஸ்ரவேல் புத்திரரின் தொகையை லேவியருடன்
ஒப்பிடும்போது 273 பேர் மட்டுமே அதிகம் என குறிப்பிடப்படுகிறது.
ஆ) எண்ணாகமம்: 3:46 – ல் சில விஷயங்களை உற்று
கவனிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. லேவியரின் தொகையைவிட இஸ்ரவேல் புத்திரரின்
தொகை அதிகரிக்கலாம். ஆனால், அதற்கான மீட்புத்தொகை ஆரோனுக்கும் (பிரதான ஆசாரியன்)
அவன் குமாரருக்கும் கொடுக்கப்பட வேண்டும் என வேதம் எண்ணாகமம்: 3:46,48 ல்
கூறுகிறது.
எண்ணாகமம்: 3:46 - “இஸ்ரவேல் புத்திரருடைய முதற்பேறுகளில்
லேவியரின் தொகைக்கு அதிகமாயிருந்து, மீட்கப்பட வேண்டிய இருநூற்று எழுபத்து மூன்று
பேரிடத்திலும், …”
எண்ணாகமம்: 3:48 – “லேவியருடைய தொகைக்கு
அதிகமானவர்கள் மீட்கப்படும் திரவியத்தை ஆரோனுக்கும் அவன் குமாரருக்கும்
கொடுப்பாயாக என்றார்”.
அப்படியானால் … அதன் பொருள் என்ன?
லேவியரைவிட இஸ்ரவேலர் பெருகக் கூடாதா? என்ன? பெருகலாம். ஆனால், அதற்குரிய மீட்பின்
திரவியத்தை ஆரோனுக்கும் (பிரதான ஆசாரியன்) அவன் குமாரருக்கும் கொடுக்கப்பட
வேண்டும். அவ்வளவுதான் விஷயம்.
இ) எண்ணாகமம்: 3:49 – ன் படி “இன்னும் மீட்கப்பட
வேண்டியவர்கள்” – என சொல்லப்படுகிறதே… அதாவது, லேவியரின் தொகையைவிட இஸ்ரவேலரின்
தொகை சுமார் 273 பேர் மட்டுமே. ஒருவேளை “இன்னும்” என்ற வார்த்தை, ஒருசிலர் விடுபட்டு
மீண்டும் கணக்கில் வரும்போது, எண்ணிக்கை கூடியிருக்கலாம்.
எனவே, இப்படிப்பட்டவர்களை “… இன்னும்
மீட்கப்பட வேண்டியவர்களுக்கு ஈடாக … “ என்று இவ்வாறு குறிப்பிட்டிருக்கலாம்.