(கப்பர்நகூம் சிற்றாலயத்தின் உட்புறத் தோற்றம்)
"சிற்றாலயம்"
(Synagogue)
பட்டணத்தை சார்ந்த இடங்களிலும், அதைத் தவிர, எருசலேம் கிராமப்புறங்களிலும் செல்வாக்கு நிறைந்த நிறுவனங்களாக இயங்கி வந்தன. இதனுடைய ஆரம்பம் தெரியாது. பாபிலோனில் இஸ்ரவேலர்கள் சிறையிருப்பில் சிறைக் கைதிகளாக இருந்தபோது, அவர்கள் ஓய்வுநாளில் தொழுதுகொள்ள எருசலேமுக்கு வர இயலா நிலையில் அந்நாட்களில் இச்சிற்றாலயங்கள் எழும்பியிருந்திருக்கலாம்.
இயேசு கிறிஸ்துவின் நாட்களிலும், அப்போஸ்தலர் காலத்திலும், யூதர்கள் வாழ்ந்த பாலஸ்தீனாவிலும், பிரிந்து வாழ்ந்த இடங்களிலும் சிற்றாலயங்கள் இருந்தன. எருசலேமிலும் இது மிக அதிகமாக வளர்ந்திருந்தது. மக்களுடைய தேவைகள் தேவாலயத்தில் சந்திக்கப்படுவதைப் பார்க்கிலும், இந்த சிற்றாலயம் மூலம் அதிகம் சந்திக்கப்பட்டன.
சிற்றாலயத்தின் அமைப்பு:
இந்தச் சிற்றாலயங்கள் மேடான உயர்ந்த இடங்களில் கட்டப்பட்டிருந்தது. இதன் முன்வாசல் எருசலேமை நோக்கியிருக்கும். இந்தக் கட்டிட வடிவங்கள் செவ்வக வடிவத்தில் அமைந்திருந்தது. நடைபாதை ஒன்றிருக்கும். அதன் பின் பகுதியில் அரை வட்ட வடிவ ஒரு அறை இருக்கும். அந்த அறையில் ஒரு பெட்டியில் பழைய ஏற்பாட்டு சுருள்கள் பாதுகாக்கப்பட்டிருக்கும். இந்தக் கட்டிடம் தூண்களால் தாங்கப்பட்டிருக்கும். கட்டிடத்தின் உள்ளே மேடை இருக்கும். அதின் மேலே நின்று ஜெபிக்க, வசனம் வாசிக்கச் செய்வார்கள்.
சிற்றாலயத்தின் ஆளுகை:
ஒவ்வொரு சிற்றாலயமும் மூப்பர்களினால் ஆன குழுவால் ஆளுகை செய்யப்படும். 10 பேர் சேர்ந்த ஒரு குழுவிற்கு ஒரு சிற்றாலயம் அமைத்தனர். தங்கியிருந்து ஊழியம் செய்ய ஆசாரியன் தேவையில்லை. ஆனாலும், சிற்றாலயங்களுக்கருகில் ஆசாரியன் இருந்தால், சிற்றாலயத்தின் ஆராதனை ஒழுங்குகளை இவர்கள் கவனிப்பார்கள்.
வேதத்தை வேதபாரகர்களும், போதகர்களும் மக்களுக்கு போதிப்பதில் முக்கிய பங்கு வகித்தனர். ஜெபாலயத்தலைவன் ஒருவன் மக்கள் கூட்டத்தால் ஏற்படுத்தப்படுவான். (லூக்கா: 8:4; அப்போஸ்தலர்: 18:8,17). இந்த ஜெபாலயத்தலைவன் கட்டிட வேலைகளை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிப்பான். தொழுகை ஆராதனைகளை ஒழுங்குபடுத்துவதிலும், வசனம் வாசிக்கும் ஆட்களை ஒழுங்குபடுத்தவதிலும் இவன் முக்கிய பங்கு வகிப்பான்.
சிற்றாலயத்தின் வேலை:
இது மூன்று முக்கியமான காரியங்களில் ஈடுபட்டிருந்தது. அவை:
1. தொழுகை 2. கல்வி 3. ஆளுகை
சிற்றாலயத்தில் அங்கத்தினராயிருக்கிற ஒவ்வொருவருடைய பிள்ளைகளுக்கும் சிற்றாலயத்தில் கல்வி போதிக்கப்படும். இந்தச் சிற்றாலயம் நீதிமன்றம் போலவும் செயல்பட்டது. தொழுகை இவர்களுக்கு அனுதின நிகழ்ச்சி, ஓய்வுநாள் முக்கிய நிகழ்ச்சியாக இருந்தது. இவர்களுடைய சிற்றாலயத்தின் ஆராதனையில் துதியும், ஜெபமும், போதனையும், ஆராதனையும் மிக முக்கியமான நிகழ்ச்சியாக இருந்தது.
சிற்றாலய ஆராதனை:
1. ஜெபத்திற்கென்று அழைப்பு கொடுக்கப்படும். மக்கள் அதற்கிணங்கி வருவார்கள். உபாகமம்: 6:49 - ல் உள்ள வசனங்கள் பாராமல் சொல்லப்படும்.
2. ஜெபம் ஒருவரால் செய்யப்படும். மக்கள் 'ஆமென்' என சொல்லுவார்கள். பின்பு '18 ஆசீர்வாதங்கள்' சொல்லப்படும். இந்த ஜெபத்தில் அவர்களுடைய பொருளாதார ஆசீர்வாதம் சேர்க்கப்பட்டிருக்கும். (உபாகமம்: 28 அதிகாரம்).
3. வேதவசனம் வாசிக்கப்படும். அதற்கு விளக்கமும் தரப்படும். கூட்டத்திலிருக்கும் எந்த நபரும் வசனத்தை விளக்க அழைக்கப்படலாம். (அப்போஸ்தலர்: 13:14; லூக்கா: 4:21).
இந்த ஆராதனை ஆசீர்வாதங்களுடன் முடியும். சாதாரணமாக ஆசாரியன் அந்த ஆசீர்வாதங்களை சொல்லுவான்.
கிறிஸ்தவர்களின் வாழ்வு இந்த சிற்றாலயம் மிக சிறந்த முறையில் செல்வாக்கு வாய்ந்தது. கிறிஸ்தவகளுடைய ஆராதனை, சிற்றாலய ஆராதனை ஒழுங்குகளை தழுவி வந்தது. துதி, உபதேசம், ஜெபம் போன்றவைகள் சிற்றாலயத்தில் முக்கியமாக ஆராதனைபோல அமைந்திருந்தன. இயேசுவும் அப்போஸ்தலர்களும் சுவிசேஷம் சொல்வதற்காய் உபயோகித்தனர். பல உதாரணம் உண்டு. (மாற்கு: 1:21-28; 3:1-6; அப்போஸ்தலர்: 13:5; 14:1; 17:1; 18:4,19).