தேசப்படம்
(Atlas)
ஒரு மாணவன் பள்ளியில் கல்வி கற்கும்போது, தான் காணமுடியாத பல தேசங்களையும், மலைகளையும், கடல்களையும், ஏரிகளையும், பட்டணங்களையும் தேசப் படத்தின் மூலமாக பார்க்கிறான். அதை அப்படியே நம்புகிறான். அவன் பெரியவனாகிறபோது, அவைகளை நேரில் அப்படியே கண்டு களிக்கிறான்.
அதுபோல தேவனுடைய பிள்ளைகளும் சரீரத்தில் இருக்கும்போது தன்மாம்ச கண்களில் நேரில் காண முடியாத பரலோகம், நரகம், ஆத்துமா ஆகியவைகளை வேதபுஸ்தகத்தின் மூலம் பார்க்கிறார்கள். அதை நம்புகிறார்கள். ஆனால், அவைகளை மறுமையில் நேரில் கண்டு அதிக ஆனந்தமடைகிறார்கள்.
"இப்பொழுது கண்ணாடியிலே நிழலாட்டமாய்ப் பார்க்கிறோம். அப்பொழுது முகமுகமாய்ப் பார்ப்போம்; இப்பொழுது நான் குறைந்த அறிவுள்ளவன். அப்பொழுது நான் அறியப்பட்டிருக்கிறபடியே அறிந்து கொள்ளுவேன்." (1கொரிந்தியர்: 13:12).
"நாமெல்லாரும் திறந்தமுகமாய்க் கர்த்தருடைய மகிமையைக் கண்ணாடியிலே காண்கிறதுபோலக் கண்டு, ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்த சாயலாகத்தானே மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம்." (2கொரிந்தியர்: 3:18).
"பிரியமானவர்களே, இப்பொழுது தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம். இனி எவ்விதமாயிருப்போமென்று இன்னும் வெளிப்படவில்லை; ஆகிலும் அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிறவண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால், அவருக்கு ஒப்பாயிருப்போமென்று அறிந்திருக்கிறோம்." (1யோவான்:3:2).