ஊரீம், தும்மீம்
(Urim, Thummim)
இச்சொற்களின் சரியான பொருள் தெரியாது. “ஜோதிகள்” , ”பரிபூரணங்கள்” என்று பொருள்படும் எனக் கருதப்படுகிறது. மேலும், இது எப்பொருளால் செய்யப்பட்டவை என்பதும் தெரியாது. எந்த வடிவில் செய்யப்பட்டது என்பதும் தெரியாது. ஆனால், இவை ஆசாரியனுடைய ஏபோத்துடன் இணைக்கப்பட்டிருந்த நடுத் தீர்ப்பு மார்பதக்கத்தினுள் வைக்கப்பட்டன என காண்கிறோம். (யாத்திராகமம் 28.16,28-30)
ஆசாரியனுடைய மார்பதக்கம் (ஏபோத்)
இச்சன்னதக் கட்டைகள் இக்கட்டான வேளைகளில் தேவனுடைய சித்தத்தை அறிவதற்காகப் பயன்படுத்தப்பட்டன என அறிகிறோம்.
1. ஆகான் விஷயத்தில் - (யோசுவா 7 அதிகாரம்)
2. சவுல் - யோனத்தான் விஷயத்தில் - (1சாமுவேல் 14 . 41,42)
3. தாவீதின் காலத்தில் - (1சாமுவேல் 23. 9-12., 30 . 7,8)
ஆகியோர் காலத்தில் பயன்படுத்தப்பட்டது. இருப்பினும், இவை பயன்படுத்தப்பட்ட விதம் நமக்குத் தெரியாது.
வேதாகமம் தரும் தகவல்களை வைத்து ஆராய்கையில், இவற்றின் மூலமாக ”ஆம்” ”இல்லை” என்ற விடை மட்டும் தான் கிடைத்தது என்று நாம் அறியலாம். இப்படியாக, ஆகான் விஷயத்தில் குற்றவாளி கண்டுபிடிக்கப்படும் வரை நான்கு முறை இக்கட்டைகள் குலுக்கப்பட்டன என அறியலாம். அப்படியே சவுல், யோனத்தான் விஷயத்திலும் இரண்டுமுறை பயன்படுத்தப்பட்டன.
1இராஜாக்கள் 23. 9-12., 30. 7,8 ஆகிய இடங்களில் சவுல் அபியத்தாரிடம் ஏபோத்தைக் கொண்டு வா என்று கூறுகிறாகப் பார்க்கிறோம். (இங்கு தவறுதலாக ஊரீம், தும்மீம் என்பவைகளுக்குப் பதில் ”ஏபோத்து” என குறிப்பிடப்படுகிறது என்கிறார் மென்டல்சோன் (Mendelsohn) என்ற வேத பண்டிதர். ஏபோத்தினுள் இக்கட்டைகள் காணப்படடிருக்க வேண்டும்)