"மனுஷன் செத்தப் பின்பு பிழைப்பானா?" (யோபு: 14:14)
இந்த கேள்விக்கு உலகம் தரும் பற்பல பதில்கள்:
1. தத்துவ சாஸ்திரம்: "மனிதன் திரும்பவும் பிழைப்பதாக நம்புகிறான்"
2. தர்ம சாஸ்திரம்: " மனிதன் திரும்பவும் பிழைக்க வேண்டும்"
3. நாத்திகம்: "மனிதன் ஒருபோதும் திரும்ப பிழைக்க மாட்டான்"
ஆனால், பரிசுத்த வேதாகமத்தின் பதில் இதுதான்:
"நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான். உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும், மரியாமலும் இருப்பான்..." (யோவான்: 11:25,26).
"கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்தாரென்று பிரசங்கிக்கப்பட்டிருக்க, மரித்தோரின் உயிர்த்தெழுதலில்லையென்று உங்களில் சிலர் எப்படிச் சொல்லலாம்?... ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறது போல, கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள். அவனவன் தன்தன் வரிசையிலே உயிர்ப்பிக்கப்படுவான், முதற்பலனானவர் கிறிஸ்து; பின்பு அவர் வருகையில் அவருடையவர்கள் உயிர்ப்பிக்கப்படுவார்கள்" (1கொரிந்தியர்: 15:12,22,23).
இந்துக்கள் தங்களில் மரித்தவர்களை எரிக்கிறார்கள்.
முஸ்லீம்கள் தங்களில் மரித்தவர்களை புதைக்கிறார்கள்.
நாம் எரிப்பதும் இல்லை; புதைப்பதும் இல்லை. நாமோ கிறிஸ்துவுக்குள் மரித்தவர்களை விதைக்கிறோம். எதிர்பார்ப்போடு விதைக்கிறோம். கிறிஸ்துவின் நாளில் உயிர்த்தெழுவார்கள் என்ற நம்பிக்கையோடு விதைக்கிறோம்.
யோபுவின் மரணத்திலே அவனுக்கு ஒரு நம்பிக்கை இருந்தது. (யோபு: 19:26,27)
யோசேப்புக்கு தன் மரணத்திலே அவனுக்குஒரு நம்பிக்கை இருந்தது. (ஆதியாகமம்: 50:24-26). ரூத்துக்கு தன் மரணத்திலே அவளுக்கு ஒரு நம்பிக்கை இருந்தது. (ரூத்: 1:17).
நாம் பாவத்திலும், அக்கரமத்திலும் நிறைந்தவர்களாக மரிக்கக் கூடாது. நாம் பரிசுத்தமாய் வாழ்ந்து ஜெபத்தோடு மரிக்க வேண்டும்.
(வாசியுங்கள்: நீதிமொழிகள்: 14:32; 1தெசலோனிக்கேயர்: 4:13,14; 1கொரிந்தியர்: 15:43,44; ஏசாயா: 33:17; எண்ணாகமம்: 23:10; சங்கீதம்: 116:15; வெளிப்படுத்தல்: 14:13; ரோமர்: 14:8).