செப்டம்பர் 29, 2012

எபேசு சபை

எபேசு சபை

எபேசு சபை என்பதற்கு "விரும்பப்படத்தக்கது" என்று பொருள். இப்பட்டணத்தில்தான் பரிசுத்த பவுல் ஊழியம் செய்து சபையை ஸ்தாபித்தார். இப்பட்டணத்தில் அநேகர் இயேசுவை ஏற்றுக் கொண்டு பரிசுத்தாவியின் அபிஷேகம் பெற்றனர்.(அப்போஸ்தலர்: 19:5,6). இச்சபையில் அற்புதங்கள் நடைபெற்றன. (அப்போஸ்தலர்: 19:11,12). மாயவித்தைக்காரர் அநேகர் தங்கள் புத்தகத்தை கொண்டு வந்து எரித்தனர். அதன் மதிப்பு அந்நாட்களில் 50,000 வெள்ளிக்காசாக மதிப்பிடப்பட்டது. 

யோவான் அப்போஸ்தலன் தனது கடைசிக் காலத்தில் எபேசுவில் தங்கி இருந்தார். இயேசுவின் தாயும் அவரிடமிருந்தார்கள் எனக் கூறப்படுகிறது. இச்சபைக்கு, தீமோத்தேயு கண்காணிப்பாக இருந்தார் என்றும், தியானாள் கோவிலில் நடைபெற்ற பெரிய பண்டிகை நாளில் அதற்கு விரோதமாய் தீமோத்தேயு பேசினபடியால் அவனை கொன்று போட்டார்கள் என்று பாரம்பரியம் கூறுகிறது.

எபேசு பட்டணம்

சின்ன ஆசியாவில் ஒரு முக்கியமான கடற்கரைப் பட்டணமாய் இருந்தது. இது சிமிர்னாவின் தென் கிழக்கில் 40 மைல் தொலைவில் இருந்தது. இப் பட்டணத்தின் அருகில் 'கெய்ஸ்டர்' என்ற நதி இருந்தபடியினால் வியாபாரத்துக்கு உதவியாக இருந்தது. மூன்று முக்கிய நெடுஞ்சாலைகள் இப்பட்டணத்தின் வழியாக சென்றது. கிழக்கத்திய நாடுகளில் இருந்தும்  சின்ன ஆசியாவிலிருந்தும் இந்த நெடுஞ்சாலைகளின் வழியாய் வியாபாரத் தொடர்பு ஏற்பட்டிருந்தது.


ரோம சாம்ராஜ்யத்திலிருந்த  இராஜ்யங்களில் ஒன்றுக்கு எபேசு தலைமைப் பட்டணமாக இருந்தது. அப் பிரதேசக் கவர்னர் இப் பட்டணத்தில் வசித்து வந்தார். எனவே, இது அரசியல் சம்பந்தப்பட்ட  விஷயங்களிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாய் இருந்தது. ஆதிகாலத்தில் 7 உலக அதிசயங்களில் ஒன்றான 'தியானா'ளின் கோவில் இப் பட்டணத்தில் இருந்தது.(அப்போஸ்தலர்: 19:28,29).

தியானாவின் கோவில் 425 அடி நீளம், 220 அடி அகலம், 60 அடி உயரம் உள்ளதாய் இருந்தது. இக்கோவில் உள்ளே 127 தூண்கள் இருந்தது. இவை பளிங்கு கற்களினால் கட்டப்பட்டிருந்தன. ஒவ்வொரு தூண்களும் ஒவ்வொரு அரசனால் வெகுமதியாய் கொடுக்கப்பட்டது.


உள்ளே மகா பெரிய வெல்வெட் திரையும்,  அதற்குள் மறைக்கப்பட்ட தியானாளின் சிலையும் இருந்தது. ஆர்டிமிஸ் தேவதையின் சிலையும் இருந்தது. இச்சிலை வானத்திலிருந்து விழுந்தது என்று அதன் பக்தர்களினால் நம்பப்படுகிறது.


இக் கோவிலில் ஒழுக்கக்கேடான காரியங்கள் அனுதினமும் நடைபெற்றன. இக்கோவில் குற்றவாளிகளுக்கு புகலிடமாக விளங்கிற்று. குற்றம் செய்த ஒருவன் அதிகாரிகளால் பிடிபடுமுன் இக் கோவிலுக்குள் போய் ஒளித்துக் கொண்டால் அவனைப் பிடிக்க அதிகாரம் இல்லை. எனவே, இக் கோவிலினுள் ஒழுக்கங்கெட்டவர்களும் குற்றவாளிகளுமே நிறைந்திருந்தனர்.

எபேசுவில் இன்றைய நிலை:

14 ஆம் நூற்றாண்டில் துருக்கியரும் மங்கோலியரும் தொடர்ந்து இப்பட்டணத்தை தாக்கினர். எனவே, தியானாள் கோவில் இருந்த இடம் தெரியாமல் அழிந்தது. அந்நாளில் வாழ்ந்த கிறிஸ்தவர்கள் தீர்க்கதரிசனத்தின் நிறைவேறுதலாய் இது அழிந்ததாய் எழுதி வைத்துள்ளனர். ஆங்காங்கே இடிந்து கிடக்கும் மதில்களையும், அஸ்திபாரத்தையும் இன்றும் நாம் காணலாம்.

எபேசு சபைக்கு செய்தி: (வெளிப்படுத்தல்: 2:1-7)

1. கிறிஸ்துவின் வெளிப்பாடு:

 ஏழு நட்சத்திரங்களை தமது கரத்தில் ஏந்திக் கொண்டிருக்கிறார். கிறிஸ்துவின் ஊழியக்காரர்கள் தேவனுடைய வலது கரத்தினால் காக்கப்படுகின்றனர். சபைகளுக்கு மத்தியில் கிறிஸ்து தமது ஆவியானவர் மூலம் அசைவாடிக் கொண்டிருக்கிறார். ஆவியானவரே சபையைக் கண்காணிக்கிறார். ஒரு தோட்டக்காரனுக்கு தன் தோட்டத்தில் உலவுகிறதற்கு எவ்வளவு சந்தோஷமோ, அது போல கிறிஸ்துவும் சபைக்கு மத்தியில் உலவுகிறதற்கு பிரியம் கொள்கிறார்.

2.சபையின் நற்குணங்கள்:  (வெளிப்படுத்தல்: 2:2,3)

இச் சபையில் பல நற்குணங்கள் இருந்தன. அவைகளை குறித்து கிறிஸ்து மெச்சிக் கொள்கிறார். இயேசு நமது நற்கிரியைகளை கவனிக்கிறார். அதற்கு பலனளிக்கிறார்.

3. தீமையான குணங்கள்: (வெளிப்படுத்தல்: 2:4-5)

ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டுவிட்டது. நற்குணங்களைப் புகழ்வதுபோல தீமைகளைக் கர்த்தர் கண்டிக்கிறார். பல நற்குணங்கள் இருப்பதினால் தீய குணமே இல்லை என்பது பொருளல்ல. பல நற்குணங்கள் இருப்பதனால் தீய குணங்களை பாரா முகமாக இருந்து விடுவார் என்று எண்ணி விடக் கூடாது. கர்த்தர் நீதியுள்ளவர்.

இச்சபையில் பெரிய பாவத்தை தேவன் காணவில்லை. அன்பே இல்லை என்று கூறவில்லை. ஆதியிலே கொண்டிருந்த அதே அன்பு இப்போது குறைந்து போனதே இச்சபையின் குறைவு. நாம் தீமை செய்யாமல் இருந்தாலும் கர்த்தரில் அன்பு கூர வேண்டிய அளவிற்கு அன்பு கூராமலிருப்பது குறையாகும்.

4. எச்சரிப்பு: (வெளிப்படுத்தல்: 2:5,6).

"இன்ன நிலையிலிருந்து விழுந்தாய் என்பதை நினை." நம்மிடமுள்ள நற்குணங்களை நினைத்துக் கொண்டிருப்பதனால் பிரயோஜனமில்லை. நமது பெலவீனத்தை, குறையை உணர்ந்து நமது ஆவிக்குரிய ஜீவிய நிலையை நன்கு உணர வேண்டும்.

மனந்திரும்பு: 

 குறையை உணர்ந்தால் மட்டும் போதாது. அதினின்று மனம் திரும்ப வேண்டும். அறிக்கை செய்து விட்டுவிட வேண்டும். (1நாளாகமம்: 7:14).

ஆதியில் செய்த கிரியைகளை செய்: 

மனம் திரும்பினால் மட்டும் போதாது. ஆதியில் செய்த கிரியைகளை செய்ய வேண்டும். அன்பு கிரியையில் வெளிப்பட வேண்டும்.  

விளக்குத் தண்டை நீக்கி விடுதல்:

 மனம் திரும்பாவிடில் என்ன சம்பவிக்கும் என கூறப்பட்டுள்ளது. ஆதி அன்பை விட்டு விட்டபடியால் (எரேமியா: 2:2 - பக்தி, நேசம்) உடனே தண்டனை கொடுக்கப்படவில்லை. மனம் திரும்ப கர்த்தர் சந்தர்ப்பம் கொடுக்கிறார். இது கர்த்தருடைய கிருபையைக் காட்டுகிறது. விளக்குத் தண்டு கிறிஸ்துவின் பிரசன்னத்தைக் காட்டுகிறது. தேவ மகிமையைக் குறிக்கிறது. இது எடுபட்டால் சபையில் இருள் வந்து விடும்.

காதுள்ளவன் கேட்கக்கடவன்:

கிறிஸ்து ஒருவனையும் கட்டாயப்படுத்துவது இல்லை. 'கேட்க மனதானால் கேள்' என்பதே பொருள்.

5. ஜெயம் கொள்ளுகிறவனுக்கு வாக்குத்தத்தங்கள்: 

கிறிஸ்தவ ஜீவியம் ஜெயம் கொள்ளுகிற ஜீவியம். பாவத்தையும், மாம்சத்தையும், பிசாசையும் ஜெயித்தவர்களுக்கு பரலோக வாக்குத்தத்தம். 1யோவான்:5:4 - ல் "தேவனால் பிறந்ததெல்லாம் உலகத்தை ஜெயிக்கும். நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்." வெற்றி பெற்றவர்களுக்கு விருது கொடுப்பது அவசியம்.

ஜீவ விருட்சத்தின் கனி:

ஆதியாகமம்: 2:9 - ல் ஏதேன் தோட்டத்தின் மத்தியில் ஜீவ விருட்சம் இருந்ததாகப் பார்க்கிறோம். மனிதன் பாவம் செய்தபடியினால் ஜீவ விருட்சத்தின் மீதுள்ள அதிகாரத்தை இழந்தான். இங்கே ஜெயம் கொள்ளுகிறவனுக்கு இந்த ஜீவ விருட்சத்தின் கனியை புசிக்கக் கொடுக்கிறார். அதை புசித்து என்றும் உயிரோடிருக்கும்படி அப்படிச் செய்தார்.

எபேசு சபை முதல் நூற்றாண்டு அப்போஸ்தல சபைக்கு ஒப்பிடப்பட்டுள்ளது. யோவான் இதை எழுதும்போது முதல் தலைமுறை கிறிஸ்தவர்கள் மறைந்து இரண்டாம் தலைமுறை கிறிஸ்தவர்கள் வாழ்ந்த காலம். அப்போஸ்தலர் காலத்திலிருந்த ஆர்வமும், உற்சாகமும் குறைய ஆரம்பித்தது. எனவே, ஆதியில் இருந்த அன்பை விட்டாய் என்று ஆண்டவர் எச்சரிக்கிறார்.

நிக்கொலாய் மதஸ்தர்: (வெளிப்படுத்தல்: 2:6)

ரோம சக்கரவர்த்திகளால் ஏற்பட்ட உபத்திரவங்களை சகிக்கமாட்டாமல் சில கிறிஸ்தவர்கள்  உலகத்தோடு ஒத்துப்போக விரும்பினர். விக்கிரகங்களுக்கு படைத்தவைகளை புசிப்பதினாலும், புறஜாதியாரின் பண்டிகைகளில் கலந்து கொள்வதினாலும் அவர்களுடைய பழக்கவழக்கங்களைக் கற்றுக் கொள்வதினாலும் தவறில்லை என்று போதித்தனர். இவர்களுக்கு நிக்கொலாய் மதத்தினர் என்று பெயர்.

செப்டம்பர் 25, 2012

தீர்க்கதரிசிகளின் பிரிவுகள்

தீர்க்கதரிசிகளின் பிரிவுகள்

1. புத்தகம் எழுதிய தீர்க்கதரிசிகள் (Canonical)

    புத்தகம் எழுதாத தீர்க்கதரிசிகள் (Non-Canonical)

2. பெரிய தீர்க்கதரிசிகள், சிறிய தீர்க்கதரிசிகள்.

பெரிய தீர்க்கதரிசிகள்: 4 பேர்.

ஏசாயா, எரேமியா, எசேக்கியேல், தானியேல்

சிறிய தீர்க்கதரிசிகள்: 12 பேர்.

ஓசியா, யோவேல், ஆமோஸ், ஒபதியா, யோனா, மீகா, நாகூம், ஆபகூக், செப்பனியா, ஆகாய், சகரியா, மல்கியா.

பெரிய தீர்க்கதரிசி என்றும் சிறிய தீர்க்கதரிசி என்றும் எதனால் அழைக்கப்படுகிறது?

தீர்க்கதரிசிகள் எழுதின புத்தக அளவை வைத்து, பெரிய தீர்க்கதரிசி என்றும் சிறிய தீர்க்கதரிசி என்றும் அழைக்கப்படுகிறது.  அவர்களின் வயதின் அடிப்படையில் அல்ல; இரு சாராரும் சமமானவர்கள்.

தீர்க்கதரிசிகளின் காலம்: (கி.மு.900 - கி.மு.400 வரை)

சுமார் கி.மு.850 க்கும் கி.மு.400 க்கும் இடைப்பட்ட காலத்தில்தான் இந்த 16 தீர்க்கதரிசிகளும் தீர்க்கதரினம் உரைத்தார்கள். அதாவது, கி.மு.9 ஆம் நூற்றாண்டுக்கும் 4 வது நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலம். இப்போது 21 ஆம் நூற்றாண்டு.

தீர்க்கதரிசிகள் மூன்று கால அடிப்படையில் பிரிக்கப்படுகின்றனர்:

1. சிறையிருப்புக்கு முன்பு தீர்க்கதரிசனம் உரைத்தவர்கள்:

நாகூம், ஆபகூக், செப்பனியா, ஏசாயா, எரேமியா, ஒபதியா, ஓசியா, யோவேல், ஆமோஸ், யோனா, மீகா. (கி.மு.850 - கி.மு.586).

2. சிறையிருப்புக்கு பின்பு தீர்க்கதரிசனம் உரைத்தவர்கள்:

ஆகாய், சகரியா, மல்கியா (கி.மு.536 - கி.மு.400).

3. சிறையிருப்பின் காலம் தீர்க்கதரிசனம் உரைத்தவர்கள்:

எசேக்கியேல், தானியேல் (கி.மு.586 - கி.மு.536).

 வேதாகமத்தில் தீர்க்கதரிசிகளின் புத்தகங்கள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள வரிசையில் தீர்க்கதரிசனம் சொல்லவில்லை.

9 ஆம்   நூற்றாண்டில்: கி.மு.900 - 800

ஒபதியா, யோவேல், யோனா

8 ஆம் நூற்றாண்டில்:  கி.மு.800 - 700

ஆமோஸ், ஓசியா, ஏசாயா, மீகா

7 ஆம் நூற்றாண்டில்: கி.மு. 700 - 600

எரேமியா, செப்பனியா, நாகூம், ஆபகூக்

6 ஆம் நூற்றாண்டில்: கி.மு.600 - 500

எசேக்கியேல், தானியேல்

5 ஆம் நூற்றாண்டில்: கி.மு. 500 - 400

ஆகாய், சகரியா, மல்கியா

யாருக்கு, யார் தீர்க்கதரிசனம் சொன்னார்கள்:

1. புறஜாதிகளுக்கு தீர்க்கதரிசனம் உரைத்தவர்கள்:

நாகூம் - அசீரியாவுக்கு விரோதமாகவும், நினிவேயின் அழிவைக் குறித்தும்...

ஒபதியா - ஏதோமின் அழிவைக் குறித்தும்...

2. வடக்கு ராஜ்யத்திற்கு (இஸ்ரவேல்): (எப்பிராயீம், சமாரியா)

ஓசியா, ஆமோஸ், யோனா, மீகா

3. தெற்கு ராஜ்யத்திற்கு ( யூதா): (எருசலேம்)

ஏசாயா, எரேமியா, எசேக்கியேல், தானியேல், யோவேல், ஆபகூக், செப்பனியா, ஆகாய், சகரியா, மல்கியா.

அசீரியா, பாபிலோன், மேதியா,பெர்சியா ஆகிய நாடுகள் உலக வல்லரசுகளாய் இருந்த காலத்தில் இந்த சிறிய தீர்க்கதரிசிகள் தீர்க்கதரிசனம் உரைத்தார்கள். கி.மு.900 முதல் கி.மு.400 க்கும் இடையில்.

இவர்கள் இப்படி அறியப்படுகிறார்கள்:

ஒபதியா - பரியாசக்காரனை கடிந்து கொண்ட தீர்க்கதரிசி

யோவேல் - பெந்தெகொஸ்தே தீர்க்கதரிசி

யோனா - முழு உலக தீர்க்கதரிசி

ஆமோஸ் - நீதியின் தீர்க்கதரிசி

ஓசியா - அன்பின் தீர்க்கதரிசி

ஏசாயா - பழைய ஏற்பாட்டு சுவிஷேசகன்

மீகா - ஏழைகளின் தீர்க்கதரிசி

எரேமியா - கண்ணீரின் தீர்க்கதரிசி

செப்பனியா - மேடைப் பேச்சாளன்

நாகூம் - கவிஞன்

ஆபகூக் - தத்துவ மேதை

எசேக்கியேல் - தரிசன தீர்க்கதரிசி

தானியேல் - ஞானத்தை வெளிப்படுத்தின தீர்க்கதரிசி

மல்கியா - விரிவுரையாளர்

ஆகாய், சகரியா - தேவாலய தீர்க்கதரிசிகள்

இரட்டுடுத்தல்

இரட்டுடுத்தல்
(Sack-Cloth)

'இரட்டு' என்றும் 'இரட்டுடுத்தல்' சொல்வதின் விளக்கம்:

இது ஒரு சணல் வஸ்திரம். இது இருண்ட நிறம். மங்கின நிறமுள்ளது. இது வெள்ளாட்டு மயிரால் செய்யப்படுகிறது.

1. இது துக்கம் கொண்டாடுபவர்கள் தரிப்பார்கள்.

யாக்கோபு தன் குமாரனுக்காக (யோசேப்பு) இரட்டுடுத்தினான். (ஆதியாகமம்: 37:34)

யோபு - 16:15 - தன் பிள்ளைகளின் இழப்புக்காக

பஞ்சம் நீங்க இரட்டுடுத்தினான் இஸ்ரவேலின் ராஜா - (2ராஜாக்கள்: 6:30)

2. சிறையிருப்பில் செல்பவர்கள் தரிப்பார்கள்.

 (எரேமியா: 6:26; புலம்பல்: 2:10)

3. தீர்க்கதரிசிகள் இதனை தரிப்பார்கள். 

(தானியேல்: 9:3)



இஸ்ரேலை ஆண்ட இராஜாக்கள்


இஸ்ரேலை ஆண்ட இராஜாக்கள்

இஸ்ரேலின் முதல் ராஜா சவுல். இரண்டாவது ராஜா தாவீது. மூன்றாவது ராஜா சாலமோன். சாலமோனுக்கு அடுத்து அவனது மகன் ரெகோபெயாம் - ன் நாட்களில் இஸ்ரேல், வடக்கு ராஜ்யம், தெற்கு ராஜ்யம் என  இரண்டாகப் பிரிந்தது. வடக்கு இராஜ்யத்தில் 19 இராஜாக்களும், தெற்கு இராஜ்யத்தில் 21 இராஜாக்களும் அரசாட்சி செய்தனர். அது பற்றிய விபரம்...

இஸ்ரவேல் - வடக்கு ராஜ்யம் - அரசாண்டவர்கள்

1. யெரோபெயாம் - 930 - 910

2. நாதாப் - 910 - 909

3. பாஷா - 909 - 886

4. ஏலா - 886 - 885

5. சிம்ரி - 885

6. ஒம்ரி - 885 - 874

7. ஆகாப் - 874 - 853

8. அகசியா - 853 - 852

9. யோராம் - 852 - 841

10. யெகூ - 841 - 814

11. யோவாகாஸ் - 814 - 798

12. யோவாஸ் - 798 - 782

13. யெரோபெயாம் - 793 - 753

14. சகரியா - 753 - 752

15. சல்லூம் - 752

16. மெனாகேம் - 751 - 742

17. பெக்காகியா - 741 - 740

18. பெக்கா - 751 - 732

19. ஒசெயா - 731 - 722

இஸ்ரேலின் வீழ்ச்சி - கி.மு.722 ல் ஏற்பட்டது.

 யூதா - தெற்கு ராஜ்யம் அரசாண்டவர்கள்

1. ரெகொபெயாம் - 931 - 914

2. அபியாம் - 913 - 911

3. ஆசா - 910 - 870

4. யோசபாத் - 873 - 849

5. யோராம் - 849 - 842

6. அகசியா - 841

7. அத்தாலியாள் - 841 - 836

8. யோவாஸ் - 836 - 797

9. அமத்சியா - 797 - 768

10. அசரியா (உசியா)  - 791 - 740

11. யோதாம் - 751 - 736

12. ஆகாஸ் - 736 - 716

13. எசேக்கியா - 729 - 687

14. மனாசே - 696 - 642

15. ஆமோன் - 641 - 640

16. யோசியா - 639 - 609

17. யோவகாஸ் - 609 

18. யோயாக்கீம் - 668 - 598

19. யோயாக்கீன் - 598

20. சிதேக்கியா - 597 -586

தெற்கு ராஜ்யம்  யூதா கி.மு.586 ல் வீழ்ச்சியடைந்தது.

21. கெதலியா

”சேலா” - பொருள் விளக்கம்


“சேலா”  - பொருள் விளக்கம்

“சேலா”  (Celah) - என்ற சொல் வேதத்தில் 71 முறை வருகிறது. இதன் பொருள் “இணைத்துப் பார்த்தல்” என்பதாகும். அதாவது, இரண்டு கருத்துக்களை இணைக்கிறது. 

உதாரணமாக...

”ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி் - நாலும் ரெண்டும் சொல்லுக்கு உறுதி”

நாலும் - நாலடியார்  
ரெண்டும் - திருக்குறள்
சொல்லுக்கு உறுதி.     -  இரண்டு கருத்துக்களையும் இணைக்கிறது - “சேலா”.

“சேலா” என்பதற்கு 7 வித கருத்து விளக்கங்கள் உண்டு. அவை...

1. இரண்டு கருத்துக்களையும் இணைத்தல் - சேலா.

2. பாடிக் கொண்டே இருக்கும்போது இடையில் நிறுத்துவது - சேலா.

3. எப்போதும் அதுதான் உண்மை என்று ஸ்தாபிப்பதற்கு என்று உபயோகப்படுத்துவது - சேலா.

4. திரும்பத் திரும்ப அதையே சொல்லுதல் - சேலா.

5. மெதுவாக பாடுகிறவன் சத்தத்தை உயர்த்திப் பாடுகிறான் - சேலா.

6. ஸ்பிரிதம் விடுதல் அல்லது பரப்பி விடுதல் அதாவது, இராகம் விடுதல் - சேலா. (உ.ம்) “நன்றி ராஜா... நன்றி ராஜா...”

7. பாடிக் கொண்டு இருக்கும்போதே வாத்தியக் கருவியில் ஒரு இடைச் சொருகல் - சேலா.


"சேலா" மற்றும் "இகாயோன்" என்பவை பைபிளில் வரும் பாடல்களில் காணப்படும் குறிப்புகளாகும். 

இதில் சேலா (Selah) என்பது சங்கீதம் (Psalms) மற்றும் ஆபகூக் (Habakkuk) புத்தகத்திலும், இகாயோன் (Higgaion) என்பது சங்கீதத்திலும் வருகின்றது. ஆனால் இவை வரும் எல்லா இடங்களும் பாடல்களில்தான்; ஆபகூக்கிலும் ஒரு பாட்டில்தான் வருகின்றது. அவைகளின் அர்த்தத்தை அறியும் முன்பு, முன்னோட்டமாக...

உங்களில் இசைக்கருவிகள் வாசிக்கத்தெரிந்தவர்களுக்கு குறிப்பாக பியானோ (Piano, Keyboard) வாசிப்பவர்களுக்கு நான் சொல்வது புரியும்.


 இன்று "Sheet Music" என்ற ஒரு தாளில் பாடல்களின் குறிப்புகள்(Notes) மற்றும் அந்த குறிப்புகள் :தாள அளவீடு"களுக்குள் (Measures) வருகின்றன என்றும் காணலாம். 

உதாரணமாக மிகவும் பிரபலமான அளவீடுகளில் ஒன்று 4/4 . அதாவது ஒரு அளவீட்டுக்குள் 4 காற்-குறியீடுகள் வரும், அல்லது இரண்டு அரை-குறியீடுகள் வரும், அல்லது ஒரு முழுக்குறியீடு வரும். 

மேலும் இசையின் அளவின் ஏற்றம் இறக்கங்களும் (Dynamics such as: crescendo, decrescendo [p,f, ppp, mp, mf ... etc] ) வருவதைக் காணலாம் .(http://en.wikipedia.org/wiki/Dynamics_%28music%29  )
 

எபிரெய மொழியில் சேலா என்பதற்கு ( סלה celah ) - A technical musical term probably showing accentuation, pause, interruption(இசைக்குறியீட்டின்படி சற்றே நிறுத்தவும்)- To lift up, exalt ( [தேவனை] உயர்த்தவும்) என்று பொருள்படும்.

எனவே இப்பாடலை வாசிக்கும்போது அல்லது அந்த குழுவினர் (Choir) பாடும்போது அங்கே சற்றே நிறுத்தி அடுத்தவரியை படிக்கவேண்டும். 


சுமார் 3000 வருடங்களுக்கு முன்பே தாவீது இசையில் வல்லவனாகவும் அதை வாசிக்கவும், பாடவும் பெரிய குழுவினரை வைத்திருந்தான் என்றும் அறிவோம். அதில் இப்படி அவன் இசைக்குறியீடுகளைப் பயன்படுத்தியது மிகவும் ஆச்சரியமான விஷயம்!

இகாயோன் என்பதற்கு (הגיון higgayown) - meditation, musing , resounding music (தியானிக்கவும், சிந்தனைக்கு, நிரம்பிய இசை) என்று பொருள்படும்.
சுருக்கமாக சங்கீதம் என்றால் பாடல்; அதை பாட்டாக பாடவேண்டும்; அந்த பாட்டில்:


சேலா என்றால் (இசைக்குறியீட்டின் படி) சற்றே நிறுத்தவும்.


இகாயோன் என்றால் தியானிக்கவும் என்று அர்த்தமாகும்.


சிலர் பழக்கப்பட்டதால், கடகடவென்று வேகமாக சங்கீதத்தை வாசிப்பார்கள். இனிமேல் அந்த இடத்திலாவது ஓடாமல் நிறுத்துங்கள். மீண்டும் அந்த வசனத்தை வாசித்துப் பார்த்து தியானியுங்கள்.

நீங்கள் மிக மிக மிக முக்கியம்



  நீங்கள் மிக மிக மிக முக்கியம் 

ஒரு மனிதன் ஒரு சிறு மெழுகுவர்த்தியை கையில் எடுத்து, அதற்கு ஒளியேற்றி அதனை எடுத்துக்கொண்டு ஒரு நீண்ட படிக்கட்டுகளில் ஏறதொடங்கினான். அப்பொழுது மெழுகுவர்த்தி அம்மனிதனை பார்த்து "என்னை எங்கு கொண்டு செல்கிறாய்?" என்று கேட்டது. அப்பொழுது அந்த மனிதன் "உன்னை நான் கலங்கரை விளக்கத்தின் மேல் எடுத்து செல்கிறேன். நீ கப்பல்களுக்கு எல்லாம் வழிகாட்டபோகிறாய்" என்றான்.

அதற்கு அந்த மெழுகுவர்த்தி "நானோ சிறு வெளிச்சம், நான் எப்படி கப்பல்களுக்கு வழிகாட்டமுடியும் ?" என்று அவனிடத்தில் கேட்டது. அப்பொழுது அவன் "நீ உன்னால் முடிந்த வெளிச்சத்தை கொடு மற்றதை நான் பார்த்துக்கொள்கிறேன்" என்று சொல்லி, அவன் அந்த மெழுகுவர்த்தியை மேலே கொண்டு சென்று அங்கிருந்த ஒரு ராட்சச விளக்கின் தீபத்தை ஏற்றினான். அப்பொழுது அதுமிகபெரிய வெளிச்சத்தை கொடுத்தது. அருகிலிருந்து ஒரு கண்ணாடி அங்கிருந்து வெளிப்பட்ட வெளிச்சத்தை Reflect செய்து கடலிலே வெளிபடுத்தியது. அதன் மூலம் கப்பல்களுக்கு வழிகாட்டபட்டது.

ஆம்! நண்பர்களே,என்னால் பெரிய பெரிய காரியம் செய்ய முடியவில்லை என்று நீங்கள் சோர்ந்து போகவேண்டாம், உங்களால் முடிந்த காரியத்தை உண்மையாய் செய்யுங்கள், உங்களுக்குள் இருக்கும் தாலந்தை முழுமையை வெளிபடுத்துங்கள், அதன் மூலமாய் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழிதவறி செல்லும் அநேக ஆத்துமாக்களை தம் அருகில் சேர்த்துக்கொள்வார்.

கிறிஸ்துவின் ராஜ்ஜியம் என்னும் ஒரு பெரிய கலங்கரை விளக்கை ஏற்றுவதற்கு உங்கள் வெளிச்சம் மிக மிக மிக முக்கியம் என்பதை மறந்து விடாதீர்கள்.

"நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள்' மத்தேயு 5:14





நன்றி  -  முகநூல்

செப்டம்பர் 23, 2012

பொதுவான சில முக்கியமான தளங்கள்


நண்பர்களே எனக்கு தெரிந்த அனைவரும் பயன்படுத்தும் சில முக்கியமான தளங்களை உங்களுடன் பகிர்கிறேன்

மின்சார கட்டணம் செலுத்துவதற்கு
www.tnebnet.org

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிய
www.tnvelaivaaippu.gov.in
www.employmentexchange.tn.gov.in

பாஸ்போர்ட் விண்ணப்பிக்க
www.paasportindia.gov.in

LLR பதிவு செய்ய
www.transport.tn.gov.in

டாடா டொகோமோ ரீசார்ஜ் செய்ய
www.tatadocomo.com/online-recharge.aspx
இதில் நீங்கள் ரீசார்ஜ் செய்யும் பொழுது சில முழு டாக்டைம் கிடைக்கும்.

ரயில்வே டிக்கெட் புக் செய்ய
www.irctc.co.in

பஸ் டிக்கெட் புக் செய்ய (அரசுப்பேருந்து)
http://www.tnstc.in/TNSTCOnline/

பஸ் டிக்கெட் புக் செய்ய (ஆம்னி பேருந்து)
www.redbus.in

நன்றி... அமர்க்களம்

செப்டம்பர் 22, 2012

ஊரீம், தும்மீம்

ரீம், தும்மீம்
(Urim, Thummim)

இச்சொற்களின் சரியான பொருள் தெரியாது. “ஜோதிகள்” , ”பரிபூரணங்கள்” என்று பொருள்படும் எனக் கருதப்படுகிறது. மேலும், இது எப்பொருளால் செய்யப்பட்டவை என்பதும் தெரியாது. எந்த வடிவில் செய்யப்பட்டது என்பதும் தெரியாது. ஆனால், இவை ஆசாரியனுடைய ஏபோத்துடன் இணைக்கப்பட்டிருந்த நடுத் தீர்ப்பு மார்பதக்கத்தினுள் வைக்கப்பட்டன என காண்கிறோம். (யாத்திராகமம் 28.16,28-30)

ஆசாரியனுடைய  மார்பதக்கம் (ஏபோத்)

இச்சன்னதக் கட்டைகள் இக்கட்டான வேளைகளில் தேவனுடைய சித்தத்தை அறிவதற்காகப் பயன்படுத்தப்பட்டன என அறிகிறோம். 

1. ஆகான் விஷயத்தில் - (யோசுவா 7 அதிகாரம்)

2. சவுல் - யோனத்தான் விஷயத்தில் - (1சாமுவேல் 14 . 41,42)

3. தாவீதின் காலத்தில் - (1சாமுவேல் 23. 9-12.,  30 . 7,8)

ஆகியோர் காலத்தில் பயன்படுத்தப்பட்டது. இருப்பினும், இவை பயன்படுத்தப்பட்ட விதம் நமக்குத் தெரியாது. 

வேதாகமம் தரும் தகவல்களை வைத்து ஆராய்கையில், இவற்றின் மூலமாக ”ஆம்” ”இல்லை”  என்ற விடை மட்டும் தான் கிடைத்தது என்று நாம் அறியலாம். இப்படியாக, ஆகான் விஷயத்தில் குற்றவாளி கண்டுபிடிக்கப்படும் வரை நான்கு முறை இக்கட்டைகள் குலுக்கப்பட்டன என அறியலாம். அப்படியே சவுல், யோனத்தான் விஷயத்திலும் இரண்டுமுறை பயன்படுத்தப்பட்டன.

1இராஜாக்கள் 23. 9-12., 30. 7,8 ஆகிய இடங்களில் சவுல் அபியத்தாரிடம் ஏபோத்தைக் கொண்டு வா  என்று கூறுகிறாகப் பார்க்கிறோம்.    (இங்கு தவறுதலாக ரீம், தும்மீம் என்பவைகளுக்குப் பதில் ”ஏபோத்து” என குறிப்பிடப்படுகிறது என்கிறார் மென்டல்சோன் (Mendelsohn) என்ற வேத பண்டிதர். ஏபோத்தினுள் இக்கட்டைகள் காணப்படடிருக்க வேண்டும்)  




தேவாலயம்


தேவாலயம்

பாலஸ்தீனாவில் உள்ள  யூதர்களுக்கும், சிதறியுள்ள யூதர்களுக்கும் தேவாலயம் மிக முக்கியமானதாக அமைந்திருந்தது. இந்த தேவாலயம் மிக அழகாக அமைந்திருந்தது. (மாற்கு 13 . 1). இந்த தேவாலயம், இஸ்ரவேருக்கு தேவன் கொடுத்த தெரிந்தெடுத்தலுக்கு அடையாளமாகவும், தேவனுடைய உடன்படிக்கையை ஞாபகமூட்டுதலுக்கு அடையாளமாகவும் அமைந்திருந்தது.

லேவியர் வழிவரும் ஆசாரியத்துவமும், ஆரோனும், அவன் குமாரர் வழி வருகிற பிரதான ஆசாரியனும் எதிர்பார்க்கப்படும். இந்த ஆசாரியர்கள்  24 குடும்ப குழுக்களாகப் பிரிக்கப்பட்டு , இந்த ஆசாரிய ஊழியர்கள் முதலில் வருவார்கள். (லூக்கா 1.5).

தினமும் பலி கொடுத்தலும், பொதுவான பலியும், தனிப்பட்ட பலிகளும் செய்யப்பட்டு வந்தன. தகனபலி ஒரு தனிப்பட்ட பெயரிலும், கோத்திரங்களின் பெயரிலும் செலுத்தப்பட்டு வந்தது. பிராய்ச்சித்த நாள் ஒரு முக்கியமான நிகழ்ச்சியாக கருதப்பட்டு வந்தது. அதில், பிரதான ஆசாரியன் மகா பரிசுத்த ஸ்தலத்தில் போய் தேவனோடு தொடர்பு கொள்வான். இதை ஆசாரியர்  ஒரு பதவியாகவும் ஒரு பொறுப்பாகவும் எடுத்துச் செல்வார்கள். பிரதான ஆசாரியன் சனகரீம் சங்கத்தின் தலைவராகவும் இருந்தான். இதனால், பிரதான ஆசாரியத்துவம் ஒரு மதிப்புமிக்க பதவியாக காணப்பட்டது. (யோவான் 18.22).

மூன்று முக்கிய பண்டிகைகள் வருடாந்திரமாக தொடர்ந்து ஆசரிக்கப்பட்டு வந்தது. (யாத்திராகமம் 23.14-17  உபாகமம் 16.16,17)

1. பஸ்கா என்கிற புளிப்பில்லா அப்பப் பண்டிகை

2. வாரங்களின் பண்டிகை

3. கூடாரப் பண்டிகை

தேவாலயத்தின் ஆராதனையிலும், அதை பராமரிக்கவும் தேவாலயத்தின் தலைவன் ஒருவன் இருப்பான். எல்லா பலிகளும் சரியாக செலுத்தப்பட்டதா என்பது இவனது பொறுப்பு. செல்வாக்கு மிகுந்த ஆசாரியர்கள் முக்கியமான தலைமை ஆசாரியர்களாக இருப்பார்கள். செல்வம் மிகுந்த ஆசாரியர்களும் உண்டு. ஏழையான ஆசாரியர்களும் உண்டு.

செப்டம்பர் 19, 2012

மிக எளிதாக தமிழில் டைப் செய்வது எப்படி? - புதியவர்களுக்கு

 

இணையத்தில் இருக்கும் பல நண்பர்கள் இன்னமும் எப்படி தமிழில் தட்டச்சு செய்வது என்று கேட்கிறார்கள். தமிழ் மொழி பயன்படுத்துதலில் புதியவர்களுக்கு மிக எளிதாக தட்டச்சு செய்யும் வசதி தருவது Google Tamil Transliteration. இதனை எப்படி பயன்படுத்துவது என்று இந்தப் பதிவின் மூலம் அறியலாம்.

1. முதலில் இங்கே சென்று தட்டச்சு மென்பொருளை தரவிறக்கம் செய்யவும். இதில் தமிழ் மொழியை தெரிவு செய்த பின் 32Bit/64Bit என்பதை தெரிவு செய்து தரவிறக்கம் செய்து கொள்ளவும். எது என்று தெரியாதவர்கள் 32Bit தெரிவு செய்யவும்.

2. Windows 7 / Vista / XP பயன்படுத்தும் அன்பர்கள் இதை பயன்படுத்த இயலும்.

3. இதை இப்போது இன்ஸ்டால் செய்யவும்.

4. இன்ஸ்டால் செய்து முடித்தவுடன் Desktop -Task Bar இல் Right Click செய்து Toolbars -> Language bar என்பதை தெரிவு செய்யவும்.

இதில் இந்த வசதி வராத நண்பர்கள் கீழே உள்ளதை பின் பற்றவும்.

5. Windows 7/Vista பயனாளிகள்:

Control Panel ->Date, Time, Language, and Regional Options--> Regional and Language Options -> Keyboard and Languages என்பதற்கு செல்லவும்.
Change keyboards... என்பதை கிளிக் செய்து Text services and input languages என்பதை ஓபன் செய்யவும்.
Language Bar க்கு வரவும்.
Language Bar -ல் உள்ள Docked in the taskbar என்ற ரேடியோ பட்டனை Enable செய்ய வேண்டும்.
இப்போது Apply கொடுக்கவும். இப்போது நீங்கள் மேலே கூறி உள்ள Step-4 ஐ செய்யவும்.





6.Windows XP பயனாளிகள்:

Control Panel -> Regional and Language Options -> Languages tab -> Text services and input languages (Details) -> Advanced Tab என்பதற்கு செல்லவும்.
முதலில் System configuration, என்பதில் Turn off advanced text services என்பது கிளிக் செய்யப்படாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ளவும்.

Regional and Language Options -> Languages tab -> Text services and input languages (Details) -> Advanced Tab என்பதற்கு மீண்டும் செல்லவும்.

இப்போது Settings>Language Bar ஐ கிளிக் செய்து அதில் Details >Language bar என்பதை தெரிவு செய்து வருவதில் Show the Language bar on the desktop என்பதை கிளிக் செய்து விடவும்.

இப்போது எல்லாவற்றையும் Apply கொடுத்து விடவும்.

7. இப்போது உங்கள் Tool Bar இல் கீழே உள்ளது போல ஒன்று வந்து சேர்ந்து விடும். இதில் தட்டச்சு செய்யும் போது கிளிக் செய்தால் Tamil என்று வரும்.

நன்றி:  முகநுல்

தமிழில் டைப் செய்ய ...கீழ்க் கண்ட ஏதாவது ஒன்றை தரவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

1.  typetamil.com

2. http://www.thamizha.com/system/files/ekalappai-3.0.1-installer.exe

3. http://www.tavultesoft.com/tamil/



 

செப்டம்பர் 15, 2012

ஏரோது அகிரிப்பா

ஏரோது அகிரிப்பா
(Herod Agrippa)

இவன் பெரிய ஏரோதுவின் மனைவி மரியாம்னேயின் பேரன். ஆண்டிபஸ் முறைகேடாகத் திருமணம் செய்த ஏரோதியாளின் தம்பி. இவன் கல்வி கற்க ரோம் நகருக்குச் சென்று, அங்கு இளவரசர்களோடு சேர்ந்து, குதிரைப் பந்தயம் போன்ற விளையாட்டக்களில் காலத்தை வீணே கழித்து, வீண் செலவு செய்து கடன்பட்டு, கடன்காரர்கள் நெருக்க ரோமை விட்டு ஓட வேண்டியதாயிற்று.

அவன் அக்காள், ஏரோதியாள் பேரில், ஆண்டிபஸ் அவனை சந்தை மேற்பார்வையாளராக மாற்றினான். அங்கும் கடன்பட்டுத் திரும்பவும் ஓடிப் போய், ரோமின் இளவரசர் கலிகுலாவின் இணைபிரியா நண்பரானான். ஆனால், திபேரியஸ் (Tiberius) பேரரசன் அதை விரும்பவில்லை. அத்துடன் கடன்காரர்கள் இவனைக் குறித்து பேரரசன் திபேரியஸிடம் முறையிட்டனர். எனவே, அகிரிப்பாவை கலிகுலா சிறையிலடைத்தார்.

கி.பி.37 - ல் திபேரியஸ் இறந்தபோது, கலிகுலா அரசன் ஆனான். அவன் முதலாவது செய்த வேலை, தன் நண்பன் அகிரிப்பாவை விடுதலை செய்ததே. சிறையில் இரும்புச் சங்கிலியால் கட்டப்பட்டிருந்தபடியால், ஒரு தங்கச் சங்கிலியை பரிசாக அகிரிப்பாவுக்கு கொடுத்தான் கலிகுலா. அதே ஆண்டில், இத்தூரியா, திராக்கொனித்தி நாடுகளுக்கு ஆட்சித் தலைவராயிருந்த பிலிப்பு இறந்தார். மூன்று ஆண்டுகளுக்குப்பின் அந்நாடுகளுக்கு அகிரிப்பாவை ஆட்சித் தலைவராக்கினான்.

ஆனால், அகிரிப்பா உடனே தன் நாட்டிற்கு வரவில்லை. ஒண்ணறை ஆண்டுகள் கழித்தே பாலஸ்தீனா வந்தான். அங்கு வரும்வழியில் அலெக்ஸ்சாண்டிரியா பட்டணத்தில் சிறிது காலம் தங்கினான். அவன் அங்கிருக்கையில் ஒரு பெரிய குழப்பம் ஏற்பட்டது. மற்ற மக்களும் யூதர்களைப் பல வகைகளில் துன்புறுத்தினார்கள். ஆனால், அது பலன் தரவில்லை. கிலவுதிராயன் காலத்தில்தான் (Claudius) யூதர்கள் தங்கள் அரசுரிமையையும், சமய உரிமையையும் திரும்பப் பெற்றனர்.

அகிரிப்பா ஆட்சித் தலைவரானபின் தெய்வ பக்தன் போல நடந்து கொண்டான். அகிரிப்பா கிறிஸ்தவர்களை மிகவும் துன்பப்படுத்தினான். இயேசுவின் சீஷனாகிய யாக்கோபை வாளால் வெட்டி கொலை செய்தான். சீமோன் பேதுருவை சிறையிலிட்டான். (அப்போஸ்தலர்: 12). அதன் காரணமாக,  யூதர் அவனை விரும்பினர். கி.பி.39 - ல் கலிகுலா, ஆண்டிபஸை நாட்டை விட்டுத் துரத்தியப் பின் ஆண்டிபஸின் நாட்டையும் அகிரிப்பாவிற்கே கொடுத்தான். யூதேயா நாடும் கி.பி.41 - ம் ஆண்டில் அவன் குடையின்கீழ் வந்தது.

ஆகவே, பெரிய ஏரோதுவின்  அரசு முழுவதிற்கும் அகிரிப்பா அரசன் ஆனான். அதன்விளைவாக அவனுக்கு செருக்கும், கர்வமும், அகந்தையும் மேட்டிமையுமானான்.  எருசலேமுக்கு வடக்கே ஒரு பெரிய மதிலைக் கட்டினான்.

திபேரியஸ் பேரரசனுக்குக் கீழ்ப்பட்ட சிற்றரசர்களையெல்லாம் அழைத்து ஒரு மாநாடு கூட்டினான். மதிலைக் கட்டினபொழுதும், மாநாட்டைக் கூட்டினபொழுதும், ரோம அரசியலறிஞர்கள் தலையிட்டுத் தடுத்தார்கள். அகிரிப்பா பேரரசனின் (கலிகுலாவின்) நம்பிக்கையை இழந்தான்.

கி.பி.44 - ல் யாரும் எதிர்பாரா வண்ணம் கர்த்தரால் அடிக்கப்பட்டு புழுபுழுத்து செத்தான். (அப்போஸ்தலர்: 12:23).  சாகும்போது அகிரிப்பாவுக்கு வயது 54.

உங்கள் கனவு இல்லம்

 
நாம் வசிக்கும் வீட்டில் இருந்து நம் அலுவலகம் வரை எப்படி இருந்தால் நன்றாக இருக்கும், என்னென்ன மாற்றங்கள் செய்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணுபவர்களுக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.
அழகுபடுத்துவது என்பது அதிகமாக பணம் செலவு செய்து தான் என்பதில்லாமல் பணத்தை விட ஐடியாக்கு முக்கியத்துவம் கொடுத்து நாம் வசிக்கும் இடம், நம் அலுவலகத்தை மேலும் சிறப்பானதாக மாற்ற எந்த பிராஜெக்ட் செய்யலாம் எவ்வளவு பணம் செலவாகும் என்று சொல்லி ஒரு தளம் உதவுகிறது.

இத்தளத்திற்கு சென்று வீடு அழகுபடுத்தும் பிராஜெக்ட் என்றால் என்ன என்பதில் தொடங்கி பிராஜெக்ட் எப்படி செய்ய வேண்டும், பிராஜெக்டுக்கு ஆகும் செலவு என்ன என்பது வரை அத்தனை தகவல்களையும் அள்ளி கொடுக்கிறது.

சில முக்கிய பிராஜெக்ட்களை வீடியோவுடன் காட்டி அசத்துகின்றனர். இதில் மற்றொரு சிறப்பு என்னவென்றால் புதிதாகத்தான் பிராஜெக்ட் செய்ய வேண்டும் என்று இல்லாமல் இருக்கும் இடத்தையே எப்படி அழகாக வைத்து கொள்ளலாம்.

உதாரணமாக இந்தப்பொருள் இந்த இடத்தில் வைத்தால் நன்றாக இருக்கும் என்று பல டிப்ஸ்-ம் அள்ளி கொடுக்கிறது. வீட்டிற்கு முன் ஒரு கார்டன் வைத்தால் நன்றாக இருக்கும் என்று என்னுபவர்கள் அதற்கு என்னென்ன தேவை, எவ்வளவு செலவாகும் போன்ற அத்தனை தகவல்களையும் முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.

சில வேலைகள் எளிதாக நாமே செய்யும் படி இருந்தால் சந்தோஷமாக நாமே செய்யலாம், எப்படி செய்ய வேண்டும் என்ற அத்தனை வழிமுறைகளையும் கொடுக்கும் இந்தத்தளம் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். அன்பு மலர் அன்பு மலர்

இணய முகவரிக்கு இங்கே சொடுக்கவும்
 
நன்றி: ஈகரை

Free E-Book இணைய தளங்கள்

 
கீழ்க்கண்ட தளங்களில் உங்களுக்கு தேவையான மின் நூல்களை பெற்றுக்கொள்ளலாம்.

worldpubliclibrary.org/
archive.org/details/texts
bartleby.com/
onlinebooks.library.upenn.edu/lists.html
bibliomania.com/
planetebook.com/
e-book.com.au/freebookswww.netlibrary.net/
infomotions.com/
ipl.org/reading/
gutenberg.org/
forgottenbooks.org/
readprint.com/
en.wikibooks.org
e-booksdirectory.com/

free-ebooks-canada.com/
book-bot.com/witguides.com/
2020ok.com/
manybooks.net/

globusz.com/Library/new_ebooks.php
readeasily.com/
eserver.org/
starry.com/free-online-novels/ For free on line novels
memoware.com/ Free Ebook Titles for your PDA!

http://www.freebookspot.com/
http://obooko.com/
http://www.bookyards.com/
http://www.onlinefreeebooks.net/ - general books,computer,technical,user manuals and service manuals available.
http://digital.library.upenn.edu/books/
http://e-library.net/

cdl.library.cornell.edu/ selected digital collections of historical significance.
bookboon.com/in you can download free books for students and travelers
arxiv.org/-Open access to e-prints in Physics, Mathematics, Computer Science, Quantitative Biology, Quantitative Finance and Statistics
bookmooch.com/ -புத்தகங்களை இங்கே பரிமாறிக்கொள்ளலாம்

மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டம்
நூலகம் -இலங்கைத் தமிழ் இலக்கிய மின் பதிவுகள்.
TAMIL E-BOOKS DOWNLOADS
தமிழ் முஸ்லிம் நூலகம்
knowledge at fingertips
tamilvu.org- தமிழ் இணைய பல்கலை கழக நூலகம்

www.4shared.com தளத்திலிருந்து இலவச புத்தகங்கள் இங்கே பெறலாம்.
தமிழ் புத்தகங்கள் இங்கே பெறலாம்.

தமிழ் புத்தகங்கள் புதினங்கள் இங்கே வாசிக்கலாம்.
மின்னணுவியல் பொருட்களின் பயனர் கையேடுகளை (User Manual) இங்கே பெறலாம்.
Electronics Service manual,data-sheets,Schematic diagram

கணினியியல் நூல்கள் இங்கே இலவசமாக கிடைக்கிறது.
http://ebooks-library.blogspot.com/
http://www.zillr.org/
http://freecomputerbooks.com/

மருத்துவ நூல்கள் இலவசமாக இங்கே பெறலாம்.

EncyclopaediaBritannica 29 Volumes in djvu format. Use djvu viewer program to view the files

Maran Collects & Shares -Software related EBooks, Personality Development Books, Audiobooks, IT Certification Materials with Test Engines, Software Video Tutorials, Encyclopedia of All Kinds, Rare Collection of Tamil Songs, Tamil Devotional Songs, Indian Instrumentals & Many More.

http://www.magazinesdownload.com/ -Download Popular magazines from this site.

http://www.booksshouldbefree.com/ Download Audio books as mp3 files

நன்றி:  இரஜகை ராபர்ட்

சிறுநீரகக் கல்லுக்கு சிறு தீர்வு

 
நான் மருத்துவம் படித்த மருத்துவர் அல்ல. எனது அனுபவத்தில் நான் மேற்கொண்ட, பலனைத்தந்த வீட்டுச் சிகிச்சையை எழுதியிருக்கிறேன்.

இன்றைய உணவுப்பழக்கத்தினால், சிறுநீரக கல் பிரச்சினை என்பது பெரும்பாலானவர்களுக்கு சாதாரணமாகிவிட்டது.

இதனால் உண்டாகும் வலியானது, எனது அனுபவத்தில் வேறு எந்த வலியோடும் ஒப்பிடமுடியாதது.

எனக்கு நான்கு வருடங்களுக்கு முன், இடுப்பில் வலி ஏற்பட்ட போது முதலில் வாயு பிரச்சினையாக இருக்கும் என்று நினைத்தேன், ஆனால் வலியின் அளவு
கூடிக்கொண்டே போய் தாங்க முடியாத அளவுக்கு அதிகரித்தது. மருத்துவரிடம் சென்றால் ஸ்கேன் எடுக்க பரிந்துரைத்தார்.

ஸ்கேன் ரிப்போர்ட்டில் எனக்கு, 5mm மற்றும் 9mm-ல் இரண்டு கற்கள் சிறுநீரகத்தில் இருப்பதாகவும், இதை அறுவை சிகிச்சை மூலம்தான் அகற்றமுடியும் என்றும் மருத்துவர் சொன்னார்.

மருத்துவச் செலவாக `30,000/- ஆகுமென்றும் சொன்னார். சரி இந்த அறுவை சிகிச்சை செய்துவிட்டால், இனிமேல் இந்த பிரச்சினை வராதா என்று கேட்டால், அதற்கு உத்திரவாதம் இல்லை, உங்களின் உணவு முறை மற்றும் நீங்கள் தினமும்
அருந்தும் தண்ணீரின் அளவைப் பொறுத்தது என்றார்.

சரி நாளை வருகிறேன் என்று வீடு வந்தேன். இத்தனைக்கும், என் நண்பன் ஒருவனுக்கு இதே பிரச்சினை வந்ததிலிருந்து வாழைத்தண்டு சாரும்,
வாழைத்தண்டு பொறியலும் அடிக்கடி சாப்பிட்டு வந்தேன், இருந்தாலும் எனக்கு தண்ணீர் அருந்தும் பழக்கம் குறைவானதால் வந்துவிட்டது போலும்.

எனவே கூகுளிடம் சரண்டர், ஒரு மணி நேரத்தேடலுக்குப் பிறகு, சிகிச்சை பெற்ற ஒரு புண்ணியவான் அந்த காய்கறி பெயர்+ திரவத்தின் பெயரை வெளியிட்டிருந்தார்

அந்த காய்கறியின் பெயர் ஃபிரஞ்சு பீன்ஸ் (French beans) , திரவத்தின் பெயர் தண்ணீர் (அட வீட்ல நாம தினமும் குடிப்பது தான்).

( ¼ ) கால் கிலோ ஃபிரஞ்சு பீன்ஸ் ( எல்லா கடைகளிலும் கிடைக்கிறது ) `ரூ10-க்கு வாங்கி, விதை நீக்கி, தண்ணீரில் கொதிக்க வைத்து (குறைந்தது 2
மணிநேரம்), மிக்ஸியில் நன்றாக அரைத்து குடித்து விட்டு, 10 நிமிடம் கழித்து, 2 லிட்டர் நீரை ( ஒரே முறையில் குடிக்க முடியவில்லையென்றால்
சிறிது நேரம் விட்டு விட்டு) குடிக்க வேண்டும், இன்னும் அதிகமாக குடிக்க
முடிந்தால் நலம்.

நான் இதை குடித்தவுடன் (மாலை 5 மனிக்கு) , விடியற்காலை 3 ½ மணிக்கு (அதுவரை அடிக்கடி நீர் அருந்திகொண்டிருந்தேன், வலியில் எங்கே தூங்குவது...) 5 சிறு கற்களாக சிறுநீர் போகும்போது வெளிவந்தது.

கல்லானது சிறுநீரகத்திலிருந்து சிறு பைப் வழியாக சிறுநீர்பைக்கு சென்றடைகிறவரையிலும் வலி கொடுமையானதாக இருக்கும், அதன் பின் சிறுநீர் பையிலிருந்து வெளி வருகிறவரை, சிறுநீர் பாதையை அடைத்துக் கொண்டு, சிறுநீர் வரும்.. ஆனால் வராது... என்ற கதையாகிவிடும்,

பயந்துவிடாமல், நாம் பருகும் நீரின் அளவை அதிகரிக்க வேண்டும், சிறுநீர்பை நிறைந்து சிறுநீர் கழிப்பது கட்டுபடுத்தாத நிலைவரும்,

அப்போது, நாம் அதிக அழுத்ததுடன் சிறுநீர்கழித்தால் , வெளியே வந்துவிடும். கற்கள் ஒரு ஸேப் (SHAPE) இல்லாமல் இருப்பதால், உள்பாதையில் கிழித்து
ரத்தமும் வரலாம், ஒரு நாளில் சரியாகிவிடும்.

மறுநாள் எடுதத ஸ்கேனில் கற்கள் இல்லையென்று ரிப்போர்ட் வந்தது.

அதிலிருந்து வாரம் ஒருமுறை இதை சாப்பிடுகிறேன், எனக்கு கல் பிரச்சினை
போயே போயிந்தி.. இட்ஸ் கான்...

இனிமேல் கல் உருவாகாமல் பார்த்துக்கொள்ளலாம். தினமும் 3 லிட்டர் வரையிலும் தண்ணீர் குடித்து விடுங்கள்.

சிறுநீரக்கல் வலி வந்த பிறகு அது தொடர்பாக நான் இணையதலத்தில் படித்ததில் சில :

துளசி இலை(basil) : இந்த இலையின் சாருடன் , தேன் கலந்து ஆறு நாட்கள் உண்டால், கல் உடந்து விடுமாம்.( கல்வலி வந்த பிறகு ஆறு நட்கள் என்பது மிக அதிகமான காலம், அதனால், இதை நாம் கல்உருவாவதை தடுக்கும் முன்னெச்சரிக்கைக்காக அருந்தலாம்)

ஆப்பிள்(Apple) : அடிக்கடி சாப்பிட்டாலும் கல் உருவாகாதாம்.

திராட்சை ( Grapes) : இதில் உள்ள, நீரும், பொடாசியம் உப்பும், கல் உருவாகுவதை தடுக்குமாம். மேலும் இந்த பழத்தில் உள்ள ஆல்புமின் மற்றும் சோடியம் குளோரைடு கல் பிரச்சினக்கு நல்ல தீர்வாக இருக்குமாம்.

மாதுளம் பழம்(pomegranate ): இந்த பழத்தின் விதையைப் பிழிந்து, ஒரு டேபில் ஸ்பூன் அளவு எடுத்து, அதனுடன் 2 ஸ்பூன் கொள்ளு சாருடன்(
குதிரைக்கு பிடித்தது..!!) சேர்த்து சாப்பிட்டால் , கல் பிரச்சினை தீருமாம்.

அத்திப்பழம்(Figs) : இந்த பழத்தை, நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, ஒரு மாதம் தொடர்ந்து, காலையில் காலி வயிற்றில், பருகினால் பலன் தருமாம்.

தண்ணீர்பழம்(water melon ): நீரின் அளவு அதிகம் உள்ள பழம், பொட்டாசியம் உப்பின் அளவும் அதிகமாம், அதிகம் உண்பதால் கல் பிரச்சினை தீருமாம்.

இளநீர் : இளநீர் அதிக அளவு சேர்த்துக் கொல்வதாலும் கல் உருவாவதை தடுக்கலாமாம்.

வாழைத்தண்டு ஜூஸ் : வாழைத்தண்டு ஜூசுக்கு கல் உருவாவதை + கல் உருவானதை உடைக்கும்(diffuse) திரன் உள்ளதாம்.

மேற்சொன்னதை எவ்வளவு உட்கொண்டாலும், குடிக்கும் தண்ணீரின் அளவு (தினமும் 2 லிட்டரிலிருந்து 3 லிட்டர் வரை) குறைந்தால் கல் உருவாவது நிச்சயம் என்கிறார்கள்.

பின் குறிப்பு 1 : கல் ஏற்பட்ட பின் வலியை பொருக்கமுடியாதவர்கள் மருத்துவரிடம் சென்றுவிடுவதே நல்லது.

பின் குறிப்பு 2 : இந்த முறையில் பக்க விளைவுகளுக்கு சாத்தியமே இல்லையென்பதால், தைரியமாக பின்பற்றலாம். இதுவரை கல் பிரச்சினை வராதவர்களும் பின்பற்றலாம்.

(இந்த தகவலை பகிர்ந்த அந்த நல்லுள்ளதிர்க்கு "தேடலின்" மனமார்ந்த நன்றிகள் ...!)-நன்றி இணையம் -

பின் குறிப்பு 3:  ஹோமியோபதி மருத்துவத்தில் "கிளியர் ஸ்டோன்" என்ற மருந்தை வாங்கி உட்கொள்வதினாலும் நல்ல பலன் உண்டு. விலை: ரூ.110.

செப்டம்பர் 14, 2012

"பிலிப்பு"

 
"பிலிப்பு"
(Philip)
கி.மு.4 முதல் கி.பி.34

லூக்கா: 3:1 - ல் இவன் இத்தூரியா, திராக்கொனித்தி நாடுகளுக்கு தேசாதிபதி என கூறுகிறது. இவன் ஆண்ட நாடுகளில்  யூதர்கள் மிகச் சிலரே குடியிருந்தார்கள். ஏரோதின் மகன்களில் பிலிப்பு மட்டுமே நேர்மையான ஆட்சி செய்தான் என்று பேர் பெற்றான். இவனது ஆட்சி மூலம் குடிமக்கள் பல நன்மைகளை பெற்றார்கள். எனவே, மக்கள் இவன்மேல் மிகுந்த பற்றுள்ளவர்களாக இருந்தனர். இவன் மனைவி, ஏரோது ஆண்டிபஸின் முன்பு நடனமாடி, யோவான் ஸ்நானகனின் தலையை பரிசாகக் கேட்ட சலோமிதான்.

பிலிப்பு, யோர்தான் நதி துவங்கும் இடத்தில் "செசரியா பிலிப்பு" (Caesarea Philippi) என்ற நகரைக் கட்டினான். யோர்தான் நதி, கெனசரேத்துக் கடலில் விழும் இடத்திலிருந்த பெத்சாயிதா பட்டணத்தைப் புதுப்பித்து, அதற்கு ஜீலியஸ் என்று பேரிட்டான். அது அகஸ்துராயன்  மகனின் பெயர். இவன் வெளியிட்ட நாணயங்களில் ரோநாட்டுப் பேரரசனின் உருவம் பதிக்கப்பட்டிருந்தது.

யூத ஆட்சித் தலைவர்களில் இவ்வாறு உருவங்கள் பதித்த நாணயங்களை முதலாவது வெளியிட்டவன் பிலிப்புதான். இவன் கி.பி.34 - ல் இறந்தான். இவன் ஆண்ட நாடுகள் சீரிய மாநிலப் பகுதியுடன் சேர்க்கப்பட்டன. பின்பு, கி.பி.37 - ல் கலிகுலா அவைகளை அகிரிப்பாவுக்கு கொடுத்தான்.



"ஏரோது ஆண்டிபஸ்"

 
 "ஏரோது ஆண்டிபஸ்"
(Herod Antipas)
கி.மு.4 முதல் கி.பி.39 வரை

இவன் கலிலேயா, பெரியா நாடுகளுக்கு மகாணத் தலைவராக 'எத்நார்க்'  (Ethnarch) அதாவது, "தேசாதிபதி" யாக இருந்து ஆண்டு வந்தான். தன் தந்தை ஏரோதுவைப் போலவே இவனும் நல்ல திறமைசாலி. இயேசு இவனை ஒரு 'நரி' என குறிப்பிடுகிறார். (லூக்கா: 13:32). தற்பெருமை கொண்டவன். 

செப்போரிஸ் (Sepphoris), ஜீலியஸ்(Julius), திபேரியஸ் (Tiberius) ஆகிய அரணான நகரங்களை கட்டினான். இவன் கட்டியவைகளில் சிறந்தது ரோம ராயன் திபேரியு பேரில் கட்டிய திபேரியஸ் பட்டணமே. ஆகிலும், யூதர்களில் ஒருவரும் அங்கு குடியேறவில்லை. காரணம்? அது இறந்தவர்களை புதைத்த இடத்தில் கட்டப்பட்டிருந்தது.

ஏரோது ஆண்டிபஸ் ஒரு முறை ரோம் சென்ற போது, தன் தம்பியாகிய 'பிலிப்பு ஏரோது' வீட்டில் தங்கியிருந்தான். அப்பொழுது தன் தம்பி மனைவி மேல் இச்சை கொண்டு, அவளைத் தன்னோடு அழைத்து வந்து மணம் செய்து கொண்டான். இச் செய்கையை யோவான்ஸ்நானகன் கண்டித்தார். கணவன் உயிரோடிருக்கையில் மனைவியை  மணந்து கொள்வது மாபெரும் பாவமாகக் கருதப்பட்டது.

ஆண்டிபஸ் தன் முதல் மனைவியைத் தள்ளி விட்டதால், அவள் தந்தை நபாற்றிய மன்னன் அரிற்றாஸ் ஆண்டிபசின் மேல் போர் தொடுத்து கி.பி.36 ல் ஆண்டிபஸை தோற்கடித்தார். கி.பி.37 - ல் 'கலிகுலா' என்ற பேரரசன் ஆளத் துவங்கினான்.
கலிகுலா, ஆண்டிபஸின் மேல்  அவ்வளவு நல்லெண்ணம் கொண்டவர் அல்ல. எனவே, 'திராக்கொனேத்தி' (லூக்கா: 3:1) தலைவர் பிலிப்பு கி.பி.37 ஆம் ஆண்டில் இறந்தபோது, பிலிப்பின் நாட்டை ஏரோதியாளின் தம்பி 'அகிரிப்பா'விற்கு கொடுத்தான் கலிகுலா. இதை ஏரோதியாள் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அந்த நாட்டை தன் கணவன் ஆண்டிபஸிற்கு கொடுத்திருக்க வேண்டும் என நினைத்தாள். அதற்காக, ரோமராயன் கலிகுலாவை நேரடியாக சந்தித்து முறையிட, தன் கணவனை தூண்டி விட்டு, இருவரும் ரோமுக்கு பயணமானார்கள்.

அச்சமயம், "ஆண்டிபஸ் ரோமராயனுக்கு விரோதமாக சூழ்ச்சி செய்து கொண்டிருக்கிறார்" என்று கலிகுலாவுக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பினான் அகிரிப்பா. ஆண்டிபஸை, ரோமராயன் கலிகுலா விசாரித்தபொழுது, ஆண்டிபஸ் போர்க்கருவிகளை மிகுதியாகச் சேர்த்து வைத்திருந்த செய்கையை மறுக்க முடியாமல் போகவே, கலிகுலா அவனை நாட்டை விட்டு துரத்தி விட்டான். ஏரோதியாளும் தன் கணவனுடன் சென்று விட்டாள். ஆண்டிபஸின் நாடும் கி.பி.39 - ல் 'அகிரிப்பா'வுக்கே கொடுக்கப்பட்டது.

செப்டம்பர் 13, 2012

"யூதேயாவின் மேல் ரோம மாகாணத் தலைவரின் ஆட்சி"

 
 "யூதேயாவின் மேல் ரோம மாகாணத் தலைவரின் ஆட்சி"

 யூதேயா நாடு கி.பி.6 முதல் கி.பி.41 ஆம் ஆண்டு வரை ரோம நாட்டுப் பேரரசரால் நேரடியாக ஆளப்பட்டது. யூதேயா நாடு ரோம ராயனின் சொந்த சொத்து போல கருதப்பட்டது. அந்நாட்டுத் தலைவர் 'புரோகுரேட்டர்' (Procurator) என்று, அதாவது 'மகாணத் தலைவர்' என அழைக்கப்பட்டார்.  இவர் சீரிய நாட்டு ஆட்சித் தலைவருக்கு (Legate) பொறுப்பாளியல்ல.

எனவே, யூதேயாவில் சேகரிக்கப்பட்ட வரி, ராஜாவின் தனி நிதியில் சேருமே ஒழிய, நாட்டு நிதியுடன் சேராது. ஆகவே, 'ராயனுக்குரியதை ராயனுக்கும், தேவனுக்குரியதை தேவனுக்கும் செலுத்துங்கள்' (மத்தேயு: 22:21) என்று இயேசு கூறியது எழுத்தின்படியான உண்மை (Literal) என நாம் அறியலாம். இந்த மாகாண ஆட்சித் தலைவர்கள் கடலோரத்திலுள்ள 'செசரியா' (Caesar ea) என்னும் துறைமுகப் பட்டணத்தில் குடியிருந்தார்கள். (அப்போஸ்தலர்: 23:33). பண்டிகை நாட்களில் எருசலேமில் தங்குவார்கள்.

இக்காலத்தில் ஆட்சி செய்த மாகாண ஆட்சித் தலைவர்கள் (List of Procurators):

1. கோப்பனியஸ் - Coponius 6–9 C.E.
2. மார்க்கஸ் ஆம்பிபுலஷ் - Marcus Ambibulus 9–12 C.E.
3. ரூபஸ் டினியுஸ் - Rufus Tineus 12–15 C.E.
4. வெலேரியஸ் கிரேட்டஸ் - Valerius Gratus 15–26 C.E.
5. பொந்தியு பிலாத்து - Pontius Pilate 26–36 C.E.
6. மார்செல்லஸ் - Marcellus 36–37 C.E.
7. மாருல்லஸ் - Marullus 37–41 C.E.
8. கஸ்பியஸ் ஃபேடஸ் - Cuspius Fadus 44–46 C.E.
9. திபேரியுஸ் ஜீலியஸ் அலெக்சாண்டர் - Tiberius Julius Alexander 46–48 C.E.
10. வெண்டிடியஸ் கும்மேனஸ் - Ventidius Cumanus 48–52 C.E.
11. ஆண்டனியஸ் பேலிக்ஸ் - Antonius Felix 52–60 C.E.
12. போரியஸ் பெஸ்துஸ் - Porcius Festus 60–62 C.E.
13. அல்பின்னஸ் - Albinus 62–64 C.E.
14. ஜீயஸ் ஃபுளோரியஸ் - Gessius Florus 64–66 C.E.

 1, 5  -  பேருடைய காலங்களில் நடந்த சில முக்கியக் நிகழ்ச்சிகளை மட்டும் பார்ப்போம்:

1. முதல் ஆட்சித் தலைவரின் முதலாம் ஆண்டில் (கி.பி.6 )  "சல்பியஸ் குயிர்னியஸ்" (Sulpi - cius - Quirinius)  சீரிய நாட்டின் தலைவராயிருந்தார். லூக்கா:2:2 - ல் உள்ள சிரேனியு என்று குறிப்பிடப்பட்டவர் இவரே. அங்கு சொல்லப்பட்ட குடிமதிப்பு கணக்கெடுக்கும்போது சிரேனியு அதாவது சல்பியஸ் குயிர்னியஸ் நாட்டுத் தலைவராக இல்லை.

சீரிய நாட்டுத் தலைவரின் கீழ் ஒரு படைத்துறை ஆணையராக இருந்தார். அவர் நாட்டுத் தலைவர் ஆனபின் 2ஆம் முறை
யூதேயா நாட்டு மக்களை எண்ணிக் கணக்கிட்டார். அதன் பயனாக பெரும் கலகம் மூண்டது. ஏனெனில், ஆள்வரி போடவே இப்படிக் கணக்கிடுவது வழக்கம்.

5. பிலாத்து, 'வளையாத் தன்மையுள்ளவர்'  என்றும்  'கடுமையான பிடிவாதக் குணத்தினர்' என்றும் முதலாம் அகிரிப்பா, பேரரசன் கலிகுலாவுக்கு எழுதிய கடிதத்தில் எழுதியுள்ளார்.

பொதுவாக, ரோம ராயன் உருவம் பதித்த எந்த பொருளையும் ரோமர், எருசலேமுக்குள் கொண்டு வருகிறதில்லை. ஏனென்றால், யூதர்கள் அதை சிலை வணக்கமாக கருதினார்கள். ஆனால், பிலாத்து, அரசு உருவம் தீட்டிய படைக் கொடிகளை எருசலேமுக்குள் மறைவாகக் கொண்டு வந்தார்.

இதையறிந்த யூதர்கள், அந்த விருதுகளை வெளியே கொண்டு போகாவிட்டால் கலகம் செய்வோம் என்று அச்சுறுத்தினார்கள். அதனால், பிலாத்து கொடிகளை நகரத்தை விட்டு அப்புறப்படுத்தினார். நம் தேவனிடத்தில் யாதொரு குற்றமும் இல்லையென்று கண்டபோதிலும், யூதர்கள் கலகம் செய்வார்கள் என்று அஞ்சி அவரைக் கொலை செய்ய ஒப்புக் கொடுத்தது இதனால்தான்.

செப்டம்பர் 12, 2012

"ஆர்க்கிலாஸ்"

 
 "ஆர்க்கிலாஸ்"
 (Archelaus)

ஏரோதுவுக்குப் பின்...
 ஏரோது சாகும் முன்  உயில் ஒன்று எழுதி, அதில் யார் யார் எந்த நாட்டை ஆள வேண்டுமென்று குறிப்பிட்டார்.

1. ஆர்க்கிலாஸ்  (Archelaus) -  யூதேயா நாட்டையும்,

2. ஆண்டிபாஸ் (Antipas) -  கலிலியோ, பெரியா (Per ea) நாடுகளையும்,

3.  பிலிப்பு (Philip)  -  தராக்கோனிட்டிஸ் (Trachonitis), பேட்டானியா (Batania), கௌலானிட்டிஸ் (Gaulanitis) - நாடுகளையும் ஆள வேண்டும் என குறிப்பிட்டார்.

இந்தப் பத்திரத்தை ரோமப் பேரரசன் ஒப்புக் கொண்ட பின்னர்தான் அமுலுக்கு கொண்டு வர வேண்டும் என குறிப்பிட்டார். ஏரோது இப்படிச் செய்யத் தேவையில்லை என்றாலும், தான் இறந்த பிறகு ரோமப் பேரரசின் நல்லெண்ணத்தைப் பெறவே இப்படி செய்தான். ஏரோது இப்படி செய்ததால், அவனுடைய மகன்கள் மூவரும், அவனுடைய தங்கை சலோமியும் ரோம் நகருக்கு விரைந்து சென்றார்கள்.

எருசலேமிலிருந்து ஒரு தூதுக் குழுவினரும் அங்கு வந்து சேர்ந்தனர். அக்குழுவினர் ஏரோது ஆட்சியின் கொடுமைகளை எடுத்துக் கூறி, ஏரோது குடும்பத்தைச் சேர்ந்த எவரும் தங்களை ஆள வேண்டாமென்றும், ரோமரே நேரடியாக தங்களை ஆள வேண்டுமென்றும் விண்ணப்பம் செய்தார்கள். இந் நிகழ்ச்சி லூக்கா: 19:14 - ல் குறிப்பிடப்பட்டுள்ளது. லூக்கா: 19:12-27 வரை சொல்லப்பட்ட உவமையில் வரும் பிரபு இந்த ஆர்க்கிலாஸ்தான்.

ஆர்க்கிலாசுக்கு அரச பட்டத்தைத் தரித்துக் கொள்ள உரிமை கொடாமல் 'எத்நார்க்' (Ethnarch) என்று சொல்லக் கூடிய "தேசாதிபதி" பதவியை வகித்து,  யூதேயா நாட்டை ஆளும் உரிமை கொடுக்கப்பட்டது. ரோம ராயன் அகஸ்டஸ், ஏரோதுவின் உயில் பத்திரத்தில் ஒரு முக்கிய மாறுதல் செய்து மீதியை அப்படியே ஏற்றுக் கொண்டான்.

 ஆர்க்கிலாஸ் (கி.மு.4-கி.பி.6 ) ஆளத் துவங்குமுன்னமே நாட்டில் கலகம் உண்டானது. அதை மிக கொடுமையான முறையில் அடக்கினான். பலர் உயிரிழந்தனர். பின்பு ரோம் சென்றிருந்த நேரம், யூதேயா நாட்டில் வேறொரு கலகம் உண்டானது. 'சாபினஸ்' (Sabin-us)  என்ற ஒரு ரோம அதிபதி எருசலேம் ஆலயத்தைக் கொள்ளையிட்டு, அதன் முன் மண்டபங்களில் தீ வைத்துக் கொளுத்தினான். கலகம் பாலஸ்தீனா முழுவதும் பரவியது. சீரியா நாட்டின் ஆளுநர் 'வரசு' (Varus) கலகத்தை அடக்கினான்.

ஆர்க்கிலஸ் திரும்பி வந்தவுடன் தனக்கு எதிராக ரோம் நகருக்குச் சென்ற தூதுக் குழுவினரைக் கொன்றான். (லூக்கா: 19:27). இதனால், மக்கள் மிகவும் வெறுத்தார்கள். இவனது ஆட்சி கொடுங்கோல் ஆட்சியாகவே இருந்தது.

எனவே, எருசலேமிலும், சமாரியாவிலும் உள்ள மக்கள், ரோம ராயன் அகஸ்டசுக்கு ஒரு தூதுக்குழுவை  அனுப்பி, ஆர்க்கிலஸின் ஆட்சியின் சீர்கேடுகளை எடுத்துக்காட்டி, இக் கொடுமையிலிருந்து தங்களுக்கு விடுதலை வேண்டுமென்று முறையிட்டார்கள். அதன் பயனாக அகஸ்டஸ், ஆர்க்கிலசை கி.பி.6 - ம் ஆண்டில் நாட்டை விட்டுத் துரத்தி விட்டான்.


"மகா ஏரோது"

 
 "மகா ஏரோது"
(The Great Heroad)
கி.மு.37 முதல் கி.பி.4 வரை

ஏரோது ஒரு இராஜ தந்திரமுள்ள மனிதன். சுயநலத்திற்காக தனது செயலை மாற்றிக் கொள்வான். யூதரையும் ரோமரையும் பிரியப்படுத்த விரும்பினான். ரோமை எதிர்ப்பது அழிவு தரும் என அறிந்திருந்தான். யூதர்கள் ரோம ஆதிக்கத்தை விரும்பவில்லை. இது ஏரோதுவிற்கு ஒரு பிரச்சினையாகவே இருந்து வந்தது.

 இவன் சுத்தமான யூதன் அல்ல. இதுமேயாவிலிருந்து வந்தவன். இவன் ஒரு அரை யூதன். இவன் அதிகமான கட்டிட வேலையில் ஈடுபட்டான். 'செபஸ்தே' என்னும் பட்டணத்தைக் கட்டினான். இது சமாரியாவில் அழிந்த ஒரு பட்டணம். அகுஸ்துராயன் பேரில் 'செசரியா' என்னும் துறைமுகப் பட்டணத்தைக் கட்டினான்.

எருசலேமிலும், எரிகோவிலும் அரண்மனையைக் கட்டினான். சவக்கடலின் மேற்குப் பகுதியில் 'மசாதா' கோட்டையும், எருசலேம் தேவாலய சதுக்கத்தில் 'அந்தோனியா' கோட்டையையும் கட்டினான். இவன் தேவாலயத்தையும் பழுது பார்த்தான். கட்டிட பணிகளுக்கெல்லாம் மக்களிடம் வரிவிதித்து வசூலித்தான். (மத்தேயு: 24:1).

இவன், தான் ஒரு யூத இனத்தான் என நிருபிக்க ஹாஸ்மோனிய இளவரசி 'மரியாம்னே' என்ற பெயருடைய 'ஹிர்ஹேனஸ் II' - ன் பேத்தியை திருமணம் செய்து கொண்டான். யூதர் இதனாலும் திருப்தியடையவில்லை.

இவன் அநேகம் பெண்களை திருமணம் செய்தான். வாழ்வின் முடிவில் பைத்தியக்காரன்போல் ஆனான். தனது இரு மகன்களை இவன் கொன்றதிலிருந்து புலனாகிறது. இவன் தனது வாழ்வின் இறுதிப் பகுதியில் யோவான்ஸ்நானகனும், இயேசு கிறிஸ்துவும் பிறந்தார்கள். (மத்தேயு: 2:1; லூக்கா: 1:5).

இவன் ரோம ஆட்சிக்கு ஆதரவு அளித்ததால் 'மீட்பர்'  என்னும் கருத்துக்கு எதிராக இருந்தான். இதனால், இயேசுவை கொல்லத் திட்டமிட்டான். இவன் கி.மு.4 ல் இறந்தான். பின்பு இவனது நாடு அர்கிலேயு, பிலிப்பு, ஏரோது அந்திப்பாஸ் என்னும் மூன்று மகன்களுக்கும் பங்கிடப்பட்டது. ரோம அரசு இதை அங்கீகரித்தது. கி.பி. 6 - ல் அர்கிலேயு பதவி இறக்கப்பட்டு, ஆளுநர்களால் (தேசாதிபதிகளால் ஆளுகை செய்யப்பட்டது. அப்படி வரும் ஆளுநர்தான் பிலாத்து.

 

1. மகா ஏரோது - கி.மு.37 முதல் கி.மு.4 வரை

2. ஏரோது அந்திப்பாஸ் - கி.மு.4  முதல் கி.பி.39 வரை

3. பிலிப்பு - கி.மு.4 முதல் கி.பி. 34 வரை

4. அர்கிலேயு - கி.மு.4 முதல் கி.பி.6 வரை

5. அகிரிப்பா - கி.பி.37 முதல் கி.பி.44 வரை

6. ஏரோது அகிரிப்பா - கி.பி.44 முதல் கி.பி.70 வரை.