சுவிசேஷப்பணியில் சிறப்பான செய்திப் பரிமாற்றம்
2000 ம் ஆண்டுகள் ஆகியும் இன்னும் கிறிஸ்தவம் வளராமல் இருக்கக் காரணம் என்ன?
- செயல்படாமை
- அறிவிக்கும் முறையில் மாற்றம்
- எதிர்தரப்பு எதிர்பார்ப்பு நிறைவேறாமை
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் ...
சுவிசேஷப் பணி என்பது என்ன?
* "இரட்சிப்பின் சுவிசேஷத்தை அறிவித்து, மனந்திரும்புதல் மூலமாக கிறிஸ்துவுடன் தனிப்பட்ட உறவை ஏற்படுத்த உதவுதல்"
* ஒருவர் இயேசு கிறிஸ்துவின் மேல் விசுவாசம் வைத்து , அவரை இரட்சகராக ஏற்றுக் கொண்டு, திருச்சபையில் இணைந்து, இராஜாவாகிய அவருக்கு ஊழியம் செய்யும் வகையில், அவருக்கு பரிசுத்த ஆவியானவரின் துணை கொண்டு கிறிஸ்துவை அறிமுகம் செய்வது.
சொல்லும் வகையில் ஒரு சிறப்பு இருக்க வேண்டும்:
* ஒவ்வொரு சந்திப்பும் விலையேறப் பெற்றது.
* மக்கள் பாவத்தில் மரித்துக் கொண்டிருக்கிறார்கள்
* பகிர்ந்து கொள்ளப்பட வேண்டிய முக்கியமான செய்தி நமக்கு உண்டு
* கிறிஸ்துவின் அன்பு நம்மை நெருக்கி ஏவுகிறது
* ஒரு நாள் ஒருவர் நமக்கு பகிர்ந்து கொண்டார். அதுபோல் நாமும் ஒருவருக்கு பகிர வேண்டும்
* ஒரே மந்தை ஒரே மேய்ப்பன் (யோவான்: 1016)
சிறப்பான செயல்பாடு என்பது என்ன?
....................................................... அடைய விரும்பும் நோக்கத்தை மனதில் வைத்து ....................................................... செயல்படுதல்.
சுவிசேஷப்பணி
வேதாகம செயல் மாதிரி:
" பின்பு, அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்" (மாற்கு: 16:15).
தரிசனம்:
"ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்தாவியின் நாமத்தினாலே அவர்களுக்கு ஞானஸ்நானங் கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள். இதோ உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்" (மத்தேயு: 28:19,20).
சுவிசேஷப்பணியின் தரிசனம்:
"இந்தத் தொழுவத்திலுள்ளவைகளல்லாமல் வேறே ஆடுகளும் எனக்கு உண்டு; அவைகளையும் நான் கொண்டு வர வேண்டும். அவைகள் என் சத்தத்துக்குச் செவி கொடுக்கும். அப்பொழுது ஒரே மந்தையும், ஒரே மேய்ப்பனுமாகும்" (யோவான்: 10:16).
* திருச்சபை தனக்காக இயங்காமல், வெளியில் இருக்கும் பிறரை உள்ளிழுக்க செயல்பட வேண்டும். (தரிசனம்)
- இந்த பாரம் உங்களை அழுத்துகிறதா?
- உங்களைத்தான் இயேசு அழைக்கிறார்.
* ஆத்தும வாஞ்சை
* திருச்சபையின் தரிசனம்
* செய்திப் பரிமாற்றத் திறன்
- ஒவ்வொரு விசுவாசியும் ஆத்துமாதய வீரராய், பரிமாறுகிற திறனுள்ளவராய் மாற வேண்டும்
- பாரம் தரிசனம் இருக்கிறது. ஆனால், நமக்கு இப்போதைய தேவை செய்திப் பரிமாற்ற திறன். இதுதான் சிறப்பாய் சுவிசேஷம் அறிவிக்க உதவும்.
- இயல்பாய் அமைய பெறாத திறனை - உருவாக்க வேண்டும்.
- முயன்று ஈடுபடலாம் - வளர்த்துக் கொள்ளலாம்.
திறன் ஏற்றம்
1. திறமையின்மையைப் பற்றிய உணர்வு இல்லாத நிலை
2. திறமையின்மையைப் பற்றிய உணர்வு பெறும் நிலை
3. திறமை பெற்று, உணர்வுடன் செயல்படும் நிலை
4. திறமை பற்றிய நினைவின்றி, இயல்பாகவே செயல்படும் நிலை
சிறப்பான செய்திப்பரிமாற்றத்தின் ஆயத்தங்கள்
செய்திப் பரிமாற்றத்தின் நோக்கம்:
"பரிமாற்றத்தின்போது என் அனுபவம் கேட்பவரின் அனுபவமாக ஆகிவிட வேண்டும்."
பூரணமாக / முழுமையாக
செய்திப் பரிமாற்றம்:
எதிர்பார்க்கும் முடிவை அடைய உதவும் ஓர் உபகரணம்.
- தகவல்களை தெரிவிப்பதற்கு மட்டும் அல்ல
- ஒரு சிறந்த வெகுமதி
- ஒரு பயனுள்ள அனுபவம்
- பகிர்வு
செய்திப் பரிமாற்றம் ஒரு உணர்வுப்பூர்வ ஈடுபாடு:
சில விளைவுகள் ஏற்பட வேண்டும்.
1. மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்:
கேட்பவர் அனைவருக்குள்ளும். உதாரணமாக....
* தற்கொலை செய்து கொள்பவரிடம் நாம் எப்படி பேசுகிறோம்?
- அவரது தவறான எண்ணத்தை மாற்றும்படி - தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். தற்கொலை எண்ணத்தை கைவிட வேண்டும்.
* அரசாங்கத்திடம் பேச்சு வார்த்தை நடத்தக் காரணம் என்ன?
- நம் நியாயமான கோரிக்கைகளை அரசிடம் எடுத்துச் சொல்லி புரிய வைப்பது.
2. சீர்திருத்தம் நடைபெற வேண்டும்:
மிஷினெரிகள் ஆதிவாசிகளிடம் சீர்திருத்தத்தை ஏற்படுத்தினர்.
- கலாச்சாரம், கருக்கலைப்பு, பெண் குழந்தை கொலை, எய்ட்ஸ் போன்றவைகள்...
3. வளர்ச்சி பெற வேண்டும்:
தொலைக்காட்சியில் விளம்பரம் எதற்கு?
பொருட்கள் விற்பனை சதவீத வளர்ச்சியை அடைவதற்கு.
4. ஆரோக்கியம் பெற வேண்டும்:
- உறவில் ஆரோக்கியம் பெற வெண்டும்.
- வியாதியில் ஆரோக்கியம் பெற வேண்டும்.
இதற்கு தேவை: ஜெபம், வீடு சந்திப்பு
இதனை யார் செய்வது? யார் பொறுப்பு?
1. இதனை ................................ (நான்தான் / பிறர்தான்) நடைபெறச் செய்ய வேண்டும்.
2. பரிமாற்ற சிறப்பிற்கு ..................... (நான்தான் / பிறர்தான்) பொறுப்பு.
இயேசு பேசும்போது ....
1. ஆச்சரியப்பட்டனர் - லூக்கா: 4:22
2. இருதயம் கொழுந்து விட்டு எரிந்தது - லூக்கா: 24:32
3. விசுவாசித்தார்கள் - அப்போஸ்தலர்: 14:1
4. மறுரூபமானார்கள் - யோவான்: 4:அதிகாரம்.