1. ஜெபித்தல்:
பவுல் தான் ஜெபித்ததோடு தன் சீஷர்களுக்கும் ஜெபிக்கக் கற்றுக் கொடுத்தார். அவர்கள் ஜெபத்தைக் கேட்ட தேவன், அவர்களைப் புதுப்புது ஊழியங்களுக்குள் நடத்தினார். "அல்லாமலும் அந்தந்தச் சபைகளில் அவர்களுக்கு மூப்பர்களை ஏற்படுத்தி வைத்து, உபவாசித்து ஜெபம் பண்ணி, அவர்கள் விசுவாசித்துப் பற்றிக் கொண்ட கர்த்தருக்கு அவர்களை ஒப்புக் கொடுத்தார்" (அப்போஸ்தலர்: 14:23).
2. சுவிசேஷத்தைப் பிரசங்கித்தல்:
இரட்சகரான இயேசுவைச் சுட்டிக்காட்டிய பவுல், சுவிசேஷத்தின் நற்செய்தியை அனைவருக்கும் கொண்டு சென்றார். நித்திய ஜீவன் பற்றி எடுத்துச் சொன்னார். "அந்தப் பட்டணத்தில் அவர்கள் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, அநேகரைச் சீஷராக்கின பின்பு, லீஸ்திராவுக்கும் இக்கோனியாவுக்கும் அந்தியோக்கியாவுக்கும் திரும்பி வந்து," (அப்போஸ்தலர்: 14:21).
3. சீஷர்களை உருவாக்குதல்:
புது விசுவாசிகளை சீஷர்களாக்கிய பவுல், எல்லா கஷ்டங்களின் மத்தியிலும் அவர்கள் இயேசுவைப் பின்பற்ற உதவினார். "சீஷருடைய மனதைத் திடப்படுத்தி, விசுவாசத்திலே நிலைத்திருக்கும்படி அவர்களுக்குப் புத்திசொல்லி, நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க வேண்டுமென்று சொன்னார்கள்" (அப்போஸ்தலர்: 14:22).
4. கூட்டிச் சேர்த்தல்:
புது விசுவாசிகளை சேர்த்து புது சபைகள் உருவாக்கினார். புது விசுவாசிகள் சந்தேகங்களோடு தனித்து விடப்படாமல் ஒருவருக்கொருவர் தேற்றி, புத்தி சொல்லும் வகையில் சேர்ந்திருக்கச் செய்தார். இப்படிப்பட்ட சபை சமூகத்திற்கு ஒரு வலுவான சாட்சியாய் நிலைத்து நின்றது. (அப்போஸ்தலர்: 14:23).
5. தலைவர்களை ஏற்படுத்துதல்:
தலைவர்களை உருவாக்கி நியமித்தார் பவுல். தான் தனித்து இப்பெரும் பணியை நிறைவேற்ற முடியாது என்று தெரிந்து கொண்ட பவுல், பர்னபா முதற் கொண்டு வேறு பலரையும் சேர்த்து ஒரு குழுவாகவே இயங்கினார். (அப்போஸ்தலர்: 14:23).
6. பெருக்குதல்:
அந்தியோகியா சபை, பவுல் மூலம் மேலும் பல புதிய சபைகள் உருவாகக் காரணமானது. இந்த சபை தன் மூப்பரை அனுப்பி, வேறு பல புது சபைகளை நிறுவ உதவியது. "அங்கே கப்பல் ஏறி, தாங்கள் நிறைவேற்றின கிரியைக்காக தேவனுடைய கிருபைக்கு ஒப்புவிக்கப்பட்டுப் புறப்பட்டு அந்தியோகியாவிற்கு வந்தார்கள். அவர்கள் அங்கே சேர்ந்தபொழுது சபையைக் கூடிவரச் செய்து, தேவன் தங்களைக் கொண்டு செய்தவைகளையும், அவர் புறஜாதிகளுக்கு விசுவாசத்தின் கதவைத் திறந்ததையும் அறிவித்து, அங்கே சீஷருடனேகூட அநேக நாள் சஞ்சரித்திருந்தார்கள்" (அப்போஸ்தலர்: 14:26-28).
முதலாம் நூற்றாண்டில் பவுலையும் அவருடைய குழுவையும் கொண்டு செய்த ஊழியத்தைப்போலவே? இன்று கர்த்தர் உங்களையும் உங்கள் சபையையும் பயன்படுத்தட்டும். இந்திய நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் கர்த்தரின் இராஜ்யத்தைப் பற்றி கேட்கட்டும். அவரைத் தங்களின் சொந்த இரட்சகராய் ஏற்று மகிழட்டும். ஆமென்! அல்லேலூயா!
முதலாம் நூற்றாண்டில் பவுலையும் அவருடைய குழுவையும் கொண்டு செய்த ஊழியத்தைப்போலவே? இன்று கர்த்தர் உங்களையும் உங்கள் சபையையும் பயன்படுத்தட்டும். இந்திய நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் கர்த்தரின் இராஜ்யத்தைப் பற்றி கேட்கட்டும். அவரைத் தங்களின் சொந்த இரட்சகராய் ஏற்று மகிழட்டும். ஆமென்! அல்லேலூயா!