மெனே மெனே தெக்கேல் உப்பார்சின்
(தானியேல்: 5:25)
இந்த பதங்கள் பெல்த்சாரின் அரமணைச்சுவரிலே அற்புதமானவிதமாய் எழுதப்பட்டன. தானியேல்: 5:23 ஆம் வசனத்தில் "உப்பார்சின்" என்பதற்கு பதிலாக "பெரேஸ்" என்று சொல்லப்பட்டிருந்தாலும், இவ்விரு பதங்களும் ஒரே கருத்துள்ளவைதான். இப்பதங்கள் அனைத்தும் நிறைகற்களின் பெயர்கள்தான்.
* "மெனே" - என்பது எபிரேயர்கள் வழங்கின "மனே" ( Maneh ) என்கிற "இராத்தல்"
* "தெக்கேல்" - என்பது எபிரேயர்கள் வழங்கின "சேக்கல்" ( Shekel ) என்கிற "நிறை"
* "உப்பார்சின்" அல்லது "பெரேஸ்" - என்பது "அரை இராத்தலை" குறிக்கும்
ஆகவே, இந்த பதங்களின் அர்த்தத்தை பின்வருமாறு திட்டமாய் சொல்லலாம்.
"இராத்தல், சேக்கல், அரை இராத்தல்"
தானியேல் இதை வெளிப்படுத்தினபோது இப்பதாங்களின் வழக்கமான அர்த்தத்தை சொல்லாமல் மூல அர்த்தத்தை தெரிவித்தான். எப்படியென்றால்...
மெனே என்பதற்கு எண்ணுகிறது என்பதும் தெக்கேல் என்பதற்கு நிறுக்கிறது என்பதும் உப்பார்சின் என்பதற்கு பங்கிடப்படுகிறது என்பதும் இப்பதத்தின் மூல அர்த்தங்களாகும்.
ஆகவே,
மெனே என்பதற்கு, "கடவுள் உன் இராஜ்யத்தை எண்ணி முடிவுண்டாக்கினார்" என்றும்,
தெக்கேல் என்பதற்கு, "நீ தராசிலே நிறுக்கப்பட்டு குறைவுள்ளவனாய் காணப்பட்டாய்" என்றும்,
உப்பார்சின் அல்லது பெரேஸ் என்பதற்கு, "பாபிலோனிய இராஜ்யம் பிரிக்கப்பட்டு பங்கிடப்படும்" என்றும் பொருள்படும்.
மேலும், ...
"பெரேஸ்" என்பதற்கும், "பாரசீகம்" என்பதற்கும் உச்சரிப்பில் ஒற்றுமை இருப்பதினால், தானியேல் சொன்னபடி அந்த இராஜ்ஜியம் பார்சியருக்கு கொடுக்கப்பட்டது.
தானியேல் இவ்விதமாக கடவுள் பெல்ஷாத்சார் செய்த அக்கிரமத்தை அறிந்து, அவனுடைய குறைவுகளைக் கண்டு, அவனுடைய இராஜ்யத்தை பாரசீகருக்கு கொடுத்து, இப்படி அவனை தண்டிப்பார் என்று சொல்லுகிறான்.