மார்ச் 05, 2015

உருவாக்குபவரான உங்கள் பணி

Image result for Your task as the

"திறமையுள்ள தலைவர்களை கண்டு பிடித்து அவர்களை தயாராக்குங்கள்"

"உங்களுடைய தரிசனம் ஒரு வருடத்திற்குரியதாய் இருந்தால் கோதுமையை விதையுங்கள்

உங்கள் தரிசனம் பத்து வருடத்திற்குரியதாய் இருந்தால் மரங்களை நடுங்கள்

உங்கள் தரிசனம் ஆயுட்காலமாயிருந்தால் ஜனங்களை உருவாக்குங்கள்"

- சீனப் பழமொழி

"உருவாக்குபவர்" என்ற வார்த்தையின் பொருள்:

ட்ரோஜன் யுத்தத்தில் 'ஒடினியஸ்'  என்ற கிரேக்க வீரன் 'டெலிமேக்கஸ்' என்ற தன் மகனை 'மெண்டர்' என்பவரின் பாதுகாப்பில் விட்டுச் சென்றான். அந்த யுத்தம் முடிந்து வீடு திரும்ப பத்து வருடங்கள் ஆனது. அதற்குள் 'மெண்டர்' அவனை வளர்த்து, திறமைமிக்க மனுஷனாக உருவாக்கியிருந்தான்.

இந்தக்கதையின் அடிப்படையில் 'உருவாக்கும் பணி' என்பது - "தேறின ஒருவர், தான் தகப்பனைப் போல இருந்து மற்றொரு இளையவரை தன்னைப்போல உருவாக்குவதேயாகும்"  - ஆவர்டு வில்லியம் எண்டிரிக்ஸ்

"உருவாக்குபவர்" என் வார்த்தையின் விளக்கம்:

"உருவாக்குதல்" என்றால் உறவின் அடிப்படையில் அமைந்தது. உருவாக்குபவர் தன் அனுபவம், ஞானம், உறுதி, அறிவு, தன் பதவி, உறவுகள் முதலியவற்றை இன்னொருவருக்கு சரியான நேரத்தில் சொல்லிக் கொடுத்து அவரை பலப்படுத்துவதே.  - பால் ஸ்டான்லி, ராபர்ட் கிளிண்டன்


ஒரு திறமையுள்ள உருவாக்குபவராக இருப்பதற்கு திறவுகோல்கள்


1. ஜனங்கள் நம்முடைய உண்மையான பொக்கிஷமாக இருக்கிறார்கள் என்பதை உணருங்கள்:

விசுவாசிகளை விசுவாசத்தில் கட்டி, தேவனுடைய நோக்கம், அழைப்பு இவைகளை நிறைவேற்ற உதவி செய்வதே ஊழியமாகும். தரிசனத்தை நிறைவேற்ற மக்களை சாதகமாகவோ, தடையாகவோ நினைக்கக்கூடாது. ஜனங்களே நம்முடைய மெய்யான பொக்கிஷம்.

2. தலைமைத்துவ வளர்ச்சி உங்களுடைய முக்கிய ஊழியமாக கருதுங்கள்:

ஒரு தலைவர் தன் ஜனங்களின் திறமைகளை கண்டெடுத்து, அவர்களின் மதிப்பை உணர்ந்து, அவர்களின் திறமைகளை பயன்படுத்த உதவுவார். தலைவர்கள் பிறப்பதில்லை. உருவாக்கப்படுகிறார்கள். உங்கள் வட்டாரத்தில் தலைவர்கள் அனைவரும் ஏற்கனவே தலைவர்களாக உருவாக்கப்பட்டவர்களாக இருக்க மாட்டார்கள். நீங்கள்தான் அவர்களை கட்ட வேண்டும். அவர்களே தேவசேனை என அழைக்கப்படுவார்கள். (எசேக்கியேல்: 37:10)

  • புதிய தலைவர்களை உருவாக்கவில்லை என்றால் பெருக முடியாது.
ஆகையால், தலைவர்கள் உருவாக்குவதே உங்கள் முக்கிய ஊழியமாகும்.

3. வெறும் பின்பற்றுகிறவர்ளை மாத்திரம் அல்ல தலைவர்களை எழுப்புங்கள்:

தன்னை பின்பற்றுகிறவரை மாத்திரம் உருவாக்கும்பொழுது தன் ஸ்தாபனத்திற்கு ஒரு நேரத்தில் ஒரே நபரைத்தான் உருவாக்க முடியும். ஆனால், பல தலைவர்களை உருவாக்கும்பொழுது பல மடங்கு வளர்ச்சி உண்டாகும். ஐந்து பின்பற்றுகிறவர்களை உருவாக்கினால் ஐந்து பேருடைய வல்லமைதான் கிடைக்கும். ஆனால், ஐந்து தலைவர்களை உருவாக்கினால், அவர்களை பின்பற்றுகிறவர்களும் சேர்ந்து அதிக வல்லமை உள்ளவர்களாக இருப்பார்கள். அதிக தலைவர்களை உருவாக்கும்பொழுது அதிகமான, நல்ல தரமான சீஷர்களை உருவாக்கலாம்.

Image result for Your task as the

  
 ஒரு திறமையுள்ள தலைவரை எப்படி கண்டு பிடிப்பது?


அ)  குணாதிசயம்

          1.   உண்மையுள்ளவர்
தேவனுக்கும், ஸ்தல சபைக்கும், தன்னுடைய வேலைகளுக்கும், சிறய காரியங்களிலும், பொதுவான காரியங்களிலும் உண்மை.
          2.   தயாராகயிருப்பவர்
சீஷத்துவத்துக்கும், வல்லமையை பெறுவதற்கும், ஊழியம் செய்வதற்கும்
          3.   கீழ்படிகிறவர்
தேவனால் அங்கீகரிக்கப்பட்ட, தனக்கு மேல் உள்ள அதிகாரத்திற்கு
          4.   கற்றுக் கொள்கிறவர்
தேவனுடைய வார்த்தைக்கும் ஆலோசனையின்படியும் தன்னை மாற்றிக் கொள்ள கற்றுக் கொள்ள விரும்புகிறவர்
ஆ)  பெருகச் செய்தவர்

இ)  தரிசனத்தை கொடுப்பதில், திட்டமிடுவதில், உற்சாகப்படுத்துவதில், நிர்வாகம் செய்வதில் திறமையும், உறுதியும் உள்ளவர்



Image result for Your task as the


4. தலைவர்களை உருவாக்குவது உங்கள் வாழ்க்கை முறையாகட்டும்:

தலைவர்களை உருவாக்கும் ஊழியம் இயேசுவின் வாழ்க்கை முறையாக இருந்தது. அவருடன் கூட இருக்கும்படியாக பன்னிருவரை தெரிந்து கொண்டார் (மாற்கு: 3:14,15). தான் சென்ற எல்லா இடங்களுக்கும் அவர்களை அழைத்துச் சென்றார். கிராமங்கள், பட்டணங்களை அவர்கள் கடந்து போகும்பொழுது அவர்கள் தலைவர்களாக உருவாக்கப்பட்டார்கள். அவர்களுக்கு போதித்து, தேவ ராஜ்யத்தின் மதிப்பீடுகள், வல்லமை செயல் முறையில் காணச்செய்து, ஊழிய அனுபவத்தையும் அதிகாரத்தையும் கொடுத்து, உலகை ஆயத்தப்படுத்த அனுப்பினார்.

அவருடைய தலைவர்கள் குழுவில் 12 சீஷர்களில் இருந்த பேதுரு, யோவான், யாக்கோபு என்பவர்கள் அவரிடம் மிக நெருக்கமாக இருந்தார்கள். இந்த மூவரையும் விசேஷித்த அனுபவங்களில் இயேசு நடத்தினார்.

அதேவிதமாக உங்கள் தலைவர்களையும், உங்களுடன் கூட்டிச் அசன்று ஊழிய அனுபவங்களை கொடுங்கள். அந்த குழுவிலிருந்து சிலரை மிக நெருக்கமாக வைத்து உருவாக்குங்கள்.

5. ஊழிய நேரத்தில் என்ன கவனித்தார்கள் என்பதை கேட்டு அறிந்து கொள்ளுங்கள்:

கற்றுக் கொள்ள சந்தர்ப்பங்களை உருவாக்குங்கள். இன்று என்ன கவனித்தார்கள்? என்ன கற்றுக் கொண்டார்கள்? என்பதை எப்பொழுதும் கேளுங்கள். அனைத்தையும் ஆராய்ந்து, மதிப்பிட்டு, கற்றுக் கொடுக்கும் நேரத்தை அதிகமாக்குங்கள்.

6. உருவாக்கும் திறமையுள்ள மற்றவர்களையும் ஈடுபடுத்துங்கள்:

உதாரணமாக: -

மற்ற வட்டாரத் தலைவர்கள், போதகர்கள்,  வேலையில் நல்ல திறமையுள்ளவர்கள்


Image result for Creating Efficient in bible


திறமையாக உருவாக்குதலின் படிகள்


1. உறவை கட்டுங்கள்:

* அவர்கள் உங்களை எப்பொழுதும் சந்திக்க நேரம் கொடுங்கள்

* அவர்கள் நம்பிக்கைகளை பெற்றுக் கொள்ளுங்கள்

* அதிகமாக இடம் கொடுத்து, அவர்கள் தவறை சொல்லி திருத்த முடியாத அதிகாரத்தை இழந்து விடாதேயுங்கள்***


2. அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் இடைபட்டு அவர்களை உருவாக்கும் சீஷராக நீங்கள் இருக்க வேண்டும்:

* ஒளிவு மறைவின்றி வாழுங்கள்

* உங்கள் விசுவாச வாழ்க்கையில் சோதனைகள், தனிமை, மற்ற சவால்களை எப்படி மேற்கொண்டீர்கள் என்று பகிர்ந்து கொள்ளுங்கள்.

* அவர்கள் பகிர்ந்து கொள்வதை கேட்டு அதிர்ச்சியோ, நியாந்தீர்க்கவோ கூடாது.

* ஆலோசனை சொல்ல தயாராக இருங்கள்

* அன்பாக சொல்லி அவர்கள் உங்களுக்கு கணக்கு ஒப்புவிக்க வேண்டும் - என்பதை தெளிவுபடுத்துங்கள்.


3. அவர்களுடைய ஊழியத்தில் அவர்களை உருவாக்க நீங்கள் ஒரு பயிற்சியாளராக இருக்க வேண்டும்:

* அவர்கள் செய்ய வேண்டியதை முன்மாதிரியாக இருந்து நீங்களே செய்து காட்டுங்கள்.

* பொறுப்புகளை பகிர்ந்து கொடுங்கள்

* தெளிவாக விளக்கிச் சொல்லுங்கள்

* மேற்பார்வை செலுத்துங்கள்

* அவர்களை ஆராய்ந்து பாருங்கள்

* அத்துடன் நிறுத்தாமல் - மேலும் சவால்களை சந்தித்து, மற்றவர்களையும் உருவாக்க உற்சாகப்படுத்துங்கள்


4. சில காரியங்களில் அவர்கள் உருவாக்க உங்களால் முடியாவிடில் மற்ற உருவாக்குபவர்களை பயன்படுத்துங்கள்.


5. உங்கள் பராமரிப்புக் குழு சரியாகவோ அல்லது பெருகவில்லை என்றால் மற்ற தலைவர்களுடன் கலந்து பேசி புதிய வழிகளை கண்டு பிடியுங்கள்.

Image result for confuse



தாங்கள் செய்ய வேண்டிய காரியங்களை செய்யாமல் இருப்பதற்கான 4 பொதுவான காரணங்கள்:

காரணம்
செய்ய வேண்டியது
    1.   தாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை அறியவில்லை
அவர்கள் பணியை தெளிவாக்குங்கள்
       2.        எப்படி செய்ய வேண்டும் என தெரியவில்லை
செய்ய வேண்டிய பணிக்கான திறமைகளை உருவாக்குங்கள்
       3.        ஏன் செய்ய வேண்டும் என்பதை அறியாதிருக்கிறார்கள்
தரிசனத்தைக் கொடுங்கள்
       4.        தங்கள் அதிகாரத்திற்கு அப்பாற்பட்ட தடங்கல்கள்
தடங்கல்களை நீக்கி முன்னேறி செல்ல உதவுங்கள்

- Selected