தேவனோடு ஒரு மிக நெருங்கிய உறவை எப்படி உருவாக்கலாம்?
1. தேவனோடு தனிமையாக இருப்பதற்காக தினமும் குறிப்பிட்ட நேரத்தை நீங்கள் ஒதுக்க வேண்டும்:
உங்கள் வாழ்வின் ஆண்டவராக இயேசு இருப்பதால், உங்கள் நேரங்கள் எல்லாம் அவருக்கு உரியது. இருப்பினும், வேதம் வாசிக்க, தியானிக்க, ஜெபிக்க என்று நேரத்தை ஒதுக்க வேண்டும். இது தேவனிடம் பேசவும், கேட்கவும் நீங்கள் விசேஷமாய் ஒதுக்குகிற நேரமாகும். இயேசுவும் கூட தன் பரலோக பிதாவை தேடும்படியாக ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கினார். (லூக்கா: 5:16)
இந்த குறிப்பிட்ட தேவனோடு தனிமையான நேரத்தில் உண்மையாக ஒரு நபரை சந்திக்கிறீர்கள். அவர் தேவன் தாமே. அவர் உங்களை அதிகமாய் நேசிக்கும் தேவன். தேவன் உங்களிடம் பேச ஆசையாயிருக்கிறவர். உங்களை வழி நடத்துவார். உற்சாகப்படுத்துவார். நீங்கள் தவறும்போது கடிந்து கொள்வார். சீர்படுத்துவார்.
ஏனெனில், உங்கள் வாழ்வின் தலைவராக இருக்கும்படியாகக் கேட்டதால், உங்கள் வாழ்வில் நெருங்கிய ஈடுபாடு உடையவராக விரும்புகிறார். நீங்கள் வேதத்தை வாசிக்கும்போது, ஏதோ மற்றுமொரு புத்தகம் என எண்ணாமல் அவருடைய புத்தகமாகிய வேதத்தின் மூலம் உங்களோடு தேவன் பேசும்படியாக எதிர்பாருங்கள்.
2. உங்கள் தொடர்பு வழிகள் எப்போதும் தெளிவாக, சரியாக இருக்க வேண்டும்:
ஒவ்வொரு உறவுகளிலும் - தவறுகளினாலும் தவறால் புரிந்து கொள்ளுதலினாலும் அவ்வப்போது தொடர்பு தடைபடுகிறது. இது தேவனோடுகூடிய உறவிலும் உண்மை. நாம் பாவம் செய்யும்போதெல்லாம், நமக்கும் தேவனுக்கும் நடுவே தடை உண்டாகிறது.
ஆனால், இந்த தடைகளை நீக்கி உறவை திரும்ப சரி செய்வதைப்பற்றி வேதம் கூறுகிறது. உண்மையாக நாம் பாவங்களை விட்டு மனந்திரும்பினால் நம்முடைய பாவத்தை தேவன் மன்னித்தற்கான உறுதியோடும், அந்த தடைபட்ட தொடர்பை சரி செய்து விடலாம்.
"நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநிநயாத்தையும் நீக்கி நம்மை சுத்தகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்" (1யோவான்: 1:9)
தேவனோடு தனிமையாயிருக்கும்போது நாம் செய்ய வேண்டியது என்ன?
1. தேவன் பேசுவதை கேட்க ஆயத்தமாயிருங்கள்:
தேவனுடைய பிரசன்னத்தை வரவேற்று, அவரையும் சத்தியத்தையும் உங்களுக்கு வெளிப்படுத்த கேளுங்கள்.
உங்கள் வாழ்வில் தேவனுடைய சத்தத்தைக் கேட்க முடியாமல் ஏதேனும் பாவமுண்டா என்று கெளுங்கள். அப்படி தேவன் காட்டும்போது உடனே அந்த பாவத்திற்காக மனம் வருந்தி அறிக்கை செய்து விட்டு விடுங்கள்.
- தேவன் உங்களை ஞானத்தின் ஆவியினாலும் உணர்வினாலும் நிரப்பும்படிக் கேளுங்கள்
"தம்மை நீங்கள் அறிந்து கொள்வதற்கான ஞானத்தையும் தெளிவையும் அளிக்கிற தேவன் உங்களுக்குத் தந்தருள வேண்டும்" (எபேசியர்: 1:17)
"உமது வேதத்திலுள்ள அதிசயங்களை நான் பார்க்கும்படிக்கு, என் கண்களைத் திறந்தருளும்" (சங்கீதம்: 119:18)
2. வாசியுங்கள் மற்றும் வேத வசனத்தை சிந்தியுங்கள்:
தேவனுடைய வார்த்தை நமக்கு அவருடைய அன்புக் கடிதம் அதில் நமக்கு அவருடைய அன்பு வார்த்தைகளும், ஆலோசனைகளும் நிறைந்துள்ளது.
அ) (மெதுவாக) நிதானமாக வாசியுங்கள். சத்தமாக வாசியுங்கள்.
ஆ) இன்றைக்கு தேவன் உங்களுக்கு என்ன கூறுகிறார்? தேவன் தம்மைக் குறித்து உங்களோடு கூறுவார்.
* அவர் யார்?
* அவர் எப்படிப்பட்டவர்?
* அவர் என்ன செய்திருக்கிறார்? அல்லது தேவன் உங்களை குறித்து சொல்லுவார்.
* நான் யார்?
* நம்மைக் குறித்து அவர் என்ன நினைக்கிறார்?
அல்லது தேவன் கீழ்காணுபவற்றைக் குறித்து சொல்லுவார்:
- தவிர்க்க வேண்டிய பாவம்
- உரிமை பாராட்ட வேண்டிய வாக்குத்தத்தம்
- இருக்க வேண்டிய குணாதிசயம்
- கீழ்படிய வேண்டிய கட்டளை
- பின்பற்ற வேண்டிய அல்லது தவிர்க்கத்தக்க மாதிரிகள்
3. தேவனுக்கு உங்கள் பதில்:
நீங்கள் வாசிக்கும்போது தானே தேவனுக்கு பதில் கொடுங்கள். உங்கள் சிந்தையில் வருவதை அவரிடம் கூறுங்கள். நீங்கள் வாசித்தவற்றை செயல்படுத்த தீர்மானித்து, அவர் உதவியை நாடுங்கள். பின்பு எஞ்சிய நேரத்தை ஜெபத்தில் செலவழியுங்கள்.
எதற்காக நீங்கள் ஜெபிக்க முடியும்?
(கீழ் வரும் வார்த்தைகள் உங்களுக்கு வழிகாட்டும்.)
* வருந்துகிறேன் - பாவங்களை குறித்து மனம் திரும்புதல், பாவத்தை அறிக்கையிடுதல், தேவ மன்னிப்பைப் பெறுதல்
* நன்றி - எனக்கு அருளிய ஆசீர்வாதங்களுக்காக, வாக்குத்தத்தங்களுக்காக நன்றி
* தயவு செய்து (கேட்டல்) - தேவைக்காக
* நான் உங்களை நேசிக்கிறேன் - துதி பாடல்களோடு உங்கள் நேரத்தை முடித்தல்
4. உங்கள் உரையாடலைக் குறிப்பில் எழுதுங்கள்:
தேவனோடு உங்கள் தினசரி உரையாடலை எழுதி வைப்பது எதிர்காலத்திலும் மிகுந்த விலையேறப் பெற்றதுமாகும். ஒரு குறிப்பேட்டிலோ அல்லது டைரியிலோ எழுதலாம்.
* வாசியுங்கள் - வேதத்தின் அதிகாரம், வசனத்தை எழுதுங்கள்
* யோசியுங்கள் - தேவன் உங்களோடு என்ன பேசினார்?
* பதில் கூறுங்கள் - அவர் பேசியதைக் குறித்து என்ன செய்யப் போகிறேன்?
(உங்கள் செயல்பாட்டை எழுதுங்கள்)
- Selected