மார்ச் 09, 2015

ஏதோமியரின் வரலாறு

Image result for obadiah:1:1


ஏசா என்பது ஏதோமைக் குறிக்கும். ஈசாக்கின் மூத்தமகனாகிய ஏசா அல்லது யாக்கோபின் சகோதரன். ஆதியாகமம்: 25:22-26 - இங்கேதான் இவனுடைய சரித்திரம் ஆரம்பிக்கிறது. இவனுடைய பிறப்பைப்பற்றி எழுதப்பட்டிருக்கிறது. கர்ப்பத்திலே மோதிக் கொண்ட பிள்ளைகள், பிற்காலத்திலும் மோதிக் கொண்டன. 'ஏசா' - "ஏதோம்" என்றும்; 'யாக்கோபு' - "இஸ்ரவேல்" என்றும் மாறினார்கள்.

     பிற்காலத்தில் வம்சங்களின் பேரில் மோதிக் கொண்டனர். மூத்தவன் சிவந்த நிறமுள்ளவன். சிவந்த கூழுக்கு ஆசைப்பட்டு கேட்டு வாங்கி குடித்தான். சிவப்பு நிறத்தை விரும்பினபடியால், 'ஏதோம்' என்கிற பெயர் உண்டாயிற்று.(ஆதியாகமம்: 25:30).

இவர்கள் உயிரோடிருக்கும் நாளெல்லாம் இரண்டு ஜாதிகள், இரண்டு ஜனங்கள் சண்டை இருந்து கொண்டே இருந்தது. (ஆதியாகமம்: 25:23)

ஏதோமியர், இஸ்ரவேலரைத் தங்கள் தேசத்திற்குக்கூட போகும்படி இடங்கொடுக்கவில்லை. (எண்ணாகமம்: 20:18-21).

2இராஜாக்கள்: 8:20,21 - இஸ்ரவேல் இராஜாவாகிய யோசபாத்தின் காலத்திற்குப் பின் இந்த ஏதோமியர் இஸ்ரவேலர்களுக்கு விரோதமாக கலகம் பண்ணினார்கள். தாவீதின் காலம் வரைக்கும் இஸ்ரவேலில் ஏதோமியர் அடிமைகளாக இருந்தார்கள்.

நேபுகாத்நேச்சார் எருசலேமை முற்றிக்கை போட்டபோது ஏதோமியர் அவனோடு சேர்ந்திருந்தார்கள். இதின்நிமித்தம் ஏசாயா, எரேமியா தீர்க்கதரிசிகள் அவர்களைக் கண்டித்தார்கள். (ஏசாயா: 34:5-8; எரேமியா: 49:17).

மல்கியா: 1:3,4 - ஆண்டவர் ஏசாவை வெறுத்தார். ஏசா - உலக ஆசீர்வாதங்களுக்கு ஒப்பிடலாம். தீர்க்கதரிசிகளின் புத்திரர் எல்லாவற்றிலும் ஏதோமின் மீது கர்த்தருடைய கோபத்திற்கு ஏதுவாயிருக்கிறது என்று எழுதப்பட்டிருக்கிறது.

யூதாஸ் மக்கபேயு இவர்களோடு யுத்தஞ் செய்து ஜெயித்தான். அதன்பின் இவர்கள் இஸ்ரவேலரோடு கலந்திருந்து, அவர்களுடைய மார்க்கத்தையும் ஏற்றுக் கொண்டார்கள். 

பிற்பாடு யூதர்மேல் ஆளுகை செய்த ஏரோது குடும்பத்தார் இந்த ஜாதியைச் சேர்ந்தவர்கள்.

Image result for edomites

ஏதோமியரின் குடியிருப்பு

ஏதோமியர் சவக்கடல் அருகில் குடியிருந்தார்கள். சவக்கடலுக்கு தென்கிழக்கே சேயீர் மலைத்தொடர் இருக்கிறது. சேயீரில் குடியிருந்த "ஓரியரைத்" துரத்திவிட்டு அங்கே குடியேறினார்கள். அரணான பாதைகள் நிறைந்த இடம். கற்பாறைகளைக் குடைந்து தங்களுக்கு வீடுகளை உண்டாக்கி வாழ்ந்தார்கள்.

எனவே, எதிரிகள் தாக்காத பாதுகாப்பான நிலையில் வாழ்ந்தார்கள். இவர்கள் சவக்கடலுக்கு தெற்கே நுறு மைல் தூரம்,  சவக்கடலுக்கு கிழக்கே இருபது மைல் பரப்பில் வாழ்ந்தார்கள். செழுமை நிறைந்த பகுதியாக காணப்பட்டது. உலகப்பிரகாரமான அனைத்து பாதுகாப்புகள் இருந்தது என சொல்லலாம். 

எபிரேய பாஷையில் இவர்கள் குடியிருந்தது "சேலா" என்றும், கிரேக்க பாஷையில் "பெட்ரா"  என்றும் இந்தப் பகுதி "வனாந்திரத்தின் அதிசயம்" என்றும் அழைக்கப்பட்டது.

ஏசாவுக்கு கிடைத்த தேசம் "ஏதோம் சீமை" என சொல்லப்பட்டது. (ஆதியாகமம்: 32:3). பின்பு, ஏதோம் சீமை - "சேயீர் தேசம்" என்றும், "இதுமேயா" என்றும் பெயர் பெற்றது.

ஏதோமின்  பூர்வீக தலைநகர் "போஸ்றா". 'ஏலோத்தும்' , 'எசியோன்' - 'கேபேரும்'  அதன் துறைமுகங்கள். 


Image result for edomites

ஏதோமுக்குள் பிரவேசிப்பதற்கு கணவாய் போன்ற பாதை இருந்ததே தவிர மற்றவைகள் அரணப்பான இடமாகும். இருப்பினும், "நாபாத்தீனியர்" என்னும் ஒரு குறிப்பிட்ட ஜாதியினரால் இவர்கள் தெற்கே துரத்தப்பட்டார்கள்.  யூதாவுக்கு தெற்கே குடியிருந்தார்கள்.

கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் இவர்கள் யூதர்களின் ஆளுகைக்கு கீழ் வந்து விருத்தசேதனம் பண்ணப்பட்டார்கள். எனவே, யூத மார்க்கத்தமைந்தவர்கள் ஆனார்கள். கி.பி. 100 வது ஆண்டில் உலக சரித்திரத்தில் அழிந்து போனார்கள். இப்படி வேதம் முழுவதும் ஏதோமைக் குறித்து சொல்லப்பட்ட  தீர்க்கதரிசனங்கள் அனைத்தும் நிறைவேறியது.


ஏதோமியரின் பிரதானமான பாவங்களும், அவர்களுடைய வீழ்ச்சியும்

உலகப்பிரகாரமான செழிப்பைக் கண்டு ஆண்டவரை நிராகரித்தார்கள். இஸ்ரவேல் ஜனங்கள் பகைவர்களால் நெருக்கப்பட்ட காலங்களில் அவர்களுக்கு உதவி செய்யாமல் எள்ளி நகைத்தார்கள். யாக்கோபுக்கு விரோதமாக கலகம் பண்ணினார்கள். யூதாவின் அழிவிலே சந்தோஷப்பட்டார்கள். (ஒபதியா: 12 வசனம்).

கஷ்டத்திலிருந்து தப்பிப்போன யூதர்களை இவர்கள் அழித்தார்கள். இவைகள்தான் இவர்களுடைய பாவங்களும், வீழ்ச்சிக்கான காரணங்களுமாகும்.