மார்ச் 13, 2015

மேய்ப்பர்களே! உங்கள் ஆடுகளை காத்துக் கொள்ளுங்கள்!

Image result for pastors! guard your sheep! 

உண்மையான மேய்ப்பன் 
 (Rev.டேவிட் வாலிஸ் - நியுசிலாந்து)

உண்மையான மேய்ப்பன் தன் ஆடுகளை போஷிக்கிறவனாய் மாத்திரமல்ல. ஆடுகளை ஆபத்திலிருந்து தடுத்து பாதுகாக்கிறவனாகவும் இருப்பான். தன்னை தற்காத்துக் கொள்ள முடியாத மிருகங்களில் ஆடுகளும் ஒன்றாகும். இந்த ஆடுகளுக்கு அடுத்தவர்களை தாக்கவோ, தடுத்து தற்காக்கவோ ஆயுதங்கள் கொடுக்கப்படவில்லை. இவைகளுக்கு கூர்மையான பற்களோ, நகங்களோ கிடையாது. இவைகளால் கடிக்கவோ, பீறிப்போடவோ உதைக்கவோ முடியாது. இவைகளால் ஓடத்தான் முடியும். ஆனால், எதிரியின் வேகத்திற்கு இணையாக ஓட முடியாது.

பாலஸ்தீன மேய்ப்பர்கள் தங்கள் ஆடுகளை கொடிய விலங்குகளாகிய சிங்கம், கரடி, நரி, ஓநாய் போன்றவற்றினின்று பாதுகாக்க வேண்டியதாய் இருக்கும். அது மட்டுமல்ல, மனிதர்கள், திருடர்கள் ஆடுகளை திருடியே பிழைப்பு நடத்தும் வனாந்திரத்தில் சுற்றித் திரிபவர்களின் கரங்களில் இருந்தும் பாதுகாக்க வேண்டியிருக்கும். மிருகங்களால் வருகின்ற ஆபத்துக்கள், இரவு நேரங்களில்தான் அதிகமாக இருக்கும். மேயப்பன் தன் மந்தையை ஒன்றாய் கூட்டி, ஒரு சிறு தாழ்வாரத்தை அமைத்து வாசல் அருகே காவல் காத்துக் கொண்டிருப்பான். (யோவான்: 10:1-4).

Image result for pastors! guard your sheep!     Image result for pastors! guard your sheep

எப்படி இயற்கையாக ஆடுகள் பாதுகாக்கப்பட வேண்டுமோ, அவ்வண்ணமே ஆவிக்குரிய ஆடுகளும் பாதுகாக்கப்பட வேண்டும். மேய்ப்பர்கள் தங்கள் ஆடுகளை பாதுகாத்து அவைகள் மோசம் போகாதபடிக்கும், தவறிப் போகாதபடிக்கும் எச்சரிக்க வேண்டும். இந்த பிரச்சினையைக் குறித்து இயேசு கிறிஸ்து மத்தேயு: 2 ஆம் அதிகாரத்தில் தம்முடைய சீஷர்களை மூன்று வசனங்களில் எச்சரிக்கிறார். கடைசி நாட்களில் திரளான கூட்டம் வஞ்சிக்கப்பட்டு வழிவிலகிப் போவார்கள். (மத்தேயு: 24:3,11,24).

பிலிப்பைன்ஸ் நாட்டில் அநேக குடும்பங்கள் தங்கள் வீடுகளை பாதுகாக்க நாய்களை வளர்ப்பார்கள். இந்த நாய்கள், திருடன் வீட்டிற்குள் பிரவேசிக்க எத்தனிக்கையில், இவைகள் குரைத்து தன் எஜமானின் உடைமைகளை பாதுகாக்க வேண்டும். 

சில வேளைகளில் இந்த நாய்கள் குரைக்காமல் திருடன் விலையுயர்ந்த பொருட்களை திருடிக்கொண்டு தப்பிப்போக விட்டுவிடும். தன் மந்தையை சபை அங்கத்தினர்களை சரியாய் பாதுகாக்காத மேய்ப்பர்களை குறித்து ஏசாயா தீர்க்கதரிசி, "ஒன்றுமறியாத குருடர்கள்" என்றும் "குரைக்காதமாட்டாத நாய்கள்" என்றும் (ஏசாயா: 56:10) சொல்கிறார். உண்மையான மேய்ப்பன், எப்படிப்பட்டதான எதிரிகளின்றும் தன் ஜனங்களை பாதுகாப்பான்.

ஓநாய்கள்:

Image result for guard your sheep

"நான் போன பின்பு, மந்தையை தப்பவிடாத கொடிதான ஓநாய்கள் உங்களுக்குள்ளே வரும்" (அப்போஸ்தலர்: 20:29).   

இந்த ஓநாய்கள், கள்ளப் போதகர்களையும், மதம் என்ற பெயரில் இலாபம் சம்பாதிப்பவர்களையும் குறிக்கும். உலகத்தின் முறைகளை தங்கள் ஊழியங்களில் கலப்படம் செய்பவர்களைக் குறிக்கும். கள்ளத்தீர்க்கதரிசிகளும் ஜனங்களுக்குள்ளே இருந்தார்கள். அப்படி உங்களுக்குள்ளும் கள்ளப்போதகர்கள் இருப்பார்கள். அவர்கள் கேட்டுக்கேதுவான வேதப்புரட்டுக்களை தந்திரமாய் நுழையப்பண்ணி, தங்களை கிரையத்துக்கு கொண்ட ஆண்டவரை மறுதலித்து, தங்களுக்கு தீவிரமான அழிவை வருவித்துக் கொள்வார்கள். (2பேதுரு: 2:1).

நாம் பலிபீடத்தில் பிரசங்கிப்பதற்கு யாரை அனுமதிக்கிறோம்? என்பதைக் குறித்து ஒரு மேய்ப்பன் மிகவும் ஜாக்கிரதை உள்ளவனாய் இருக்க வேண்டும். உங்களுக்கு முன் அறிமுகமான நன்றாய் பழக்கப்பட்ட அல்லது முதிர்ந்த கிறிஸ்தவர்களால் பரிந்துரைக்கப்பட்ட ஊழியர்களையே உங்கள் சபைக்கு அழைத்து அவர்களை பிரசங்கிக்க அனுமதிக்க வேண்டும்.

கள்ளர்களும் கொள்ளைக்காரர்களும்

Image result for pastors! guard your sheep

"மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், ஆட்டுத்தொழுவத்திற்குள் வாசல் வழியாய் பிரவேசியாமல், வேறுவழியாய் ஏறுகிறவன் கள்ளனும் கொள்ளைக்காரனுமாயிருக்கிறான்" (யோவான்: 10:1)

இந்த கள்ளப்போதகர்கள் தங்கள் பொருளாசையினால் உங்கள் பொருட்களை (பணத்தை) தங்களுக்கு ஆதாயப்படுத்திக் கொள்ள எதையும் சொல்வார்கள். (1பேதுரு: 2:3)

அறியாத கிறிஸ்தவர்களிடத்திலிருந்து பொருளாசையினிமித்தமாய் பணத்தை பிடுங்கிக்கொள்ளும் பிரசங்கிமார்களிடத்திலிருந்து தன் மந்தையை ஒரு மேய்ப்பன் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். மேலும், சில கள்ளர்களும், கொள்ளைக்காரர்களும் அவர்களுக்கென்று ஒரு காணிக்கை தொகை நிர்ணயிக்கப்படால் பிரசங்கிக்க வரவே மாட்டார்கள் அல்லது பிரசங்கிக்கவே மாட்டார்கள்.பவுல் இப்படித்தான் கிறிஸ்தவர்களைக் குறித்து தீமோத்தேயுவுக்கு எச்சரிக்கும்போது, "...தேவபக்தியை ஆதாயத் தொழில் என்று எண்ணுகிறவர்களுமாய் இருப்பார்கள்" (1தீமோத்தேயு: 6:5) என்று எழுதுகிறார்.

கூலியாட்கள்

"மேய்ப்பனாயிராதவனும், ஆடுகள் தனக்கு சொந்தமில்லாதவனுமான கூலியாள் ஓநாய் வருகிறதை கண்டு, ஆடுகளை விட்டு ஓடிப்போகிறான். ஆடுகளுக்காக அவன் கவலைப்படான். அப்பொழுது ஓநாய் அவைகளைப் பீறி, அவைகளை சிதறடிக்கும். கூலியாள் கூலிக்காக வேலை செய்கிறபடியினால் ஓடிப்போகிறான். ஆடுகளுக்காக அவன் கவலைப்படான்" (யோவான்: 10:12,13).

கூலியாள் என்பவன் தன் பணிக்காக கூலி பெற்றுக் கொள்ளும் அவனுக்கு, தேவனுடைய பணிக்கான ஒரு இதயம் இருக்காது. இப்படிப்பட்ட மனிதர்கள் தங்கள் அங்கத்தினர்களை மேய்ப்பனற்றவர்களாக விட்டுவிட்டு, தனக்கு மிகுந்த ஆதாயம் கிடைக்கக்கூடிய வேறு ஒரு சபைக்கு ஓடிவிடுவான். ஒரு மேய்ப்பன் இப்படிப்பட்ட மனிதர்களிடத்தில் இருந்து தன் மந்தையை காத்துக் கொள்ள வேண்டும்.

ஆடுகளை நேசிக்கிறவன், அடக்கமுள்ளவர்களையே தலைமைத்துவத்திற்கு பழக்குவிக்க வேண்டும்.  எரேமியா: 23:1,2 - ஆகிய வசனங்களில் ஆடுகளை சிதறடிக்கின்ற கள்ள மேய்ப்பர்களுக்கு வரும் ஆக்கினையை குறித்து நாம் வாசித்து தெரிந்து கொள்ளலாம்.

அந்நியர்கள்

Image result for guard your sheep

அந்நியருடைய சத்தத்தை அறியாதபடியினால் அவைகள் அந்நியனுக்கு பின் செல்லாமல் அவனை விட்டோடிப்போகும் என்றார் (யோவான்: 10:5). ஒரு உண்மையான மேய்ப்பன் தன் ஆடுகளை நிரூபிக்கப்படாத ஊழியங்களை நடத்துகின்ற மனிதர்களிடத்திலிருந்தும் பாதுகாப்பான். பூரண வளர்ச்சியடையாத அல்லது நிலையற்றதான ஊழியங்கள் ஆடுகளுக்கு அந்நிய சத்தமாகவே இருக்கும்.  

இப்படிப்பட்ட சத்தம் ஆடுகளை கலவரப்படுத்தும். சபைகளுக்குள் புதிய அந்நிய ஊழியங்கள் ஆரம்பமாகும்போது, மேய்ப்பர்கள் அப்படிப்பட்ட ஊழியங்களையும், கூட்டங்களையும் கண்காணிக்க வேண்டும். தவறுகள் ஏற்படும்போது அதை சரி செய்வதற்கும், சீர்படுத்துவதற்கும் தங்களுக்குமேலே அதிகாரம் உடையவர்கள் இருக்கின்றார்கள் என்பதை உணர்த்துவிக்க வேண்டும்.

         சபையில் இருக்கும் சிலவகை ஆடுகளும்,    அதன் தன்மைகளும்

                                                                                                      கள்ள ஆடுகள்:


Image result for guard your sheep


கடைசி நாட்களில் வஞ்சகம் மிகவும் பெருத்திருக்கும். ஒரு உண்மையான மேய்ப்பன், தன் மந்தைக்கு வெளியே இருந்து வரும் ஆபத்துகளிலிருந்து மாத்திரம், தன் ஆடுகளை காக்கிறவனாக இல்லாமல், தன் மந்தைக்கு உள்ளேயும் உள்ள எதிரிகளிடமிருந்தும் காப்பாற்ற வேண்டும். 

"கள்ள ஆடுகள்" சில வேளைகளில் சபை அங்கத்தினர் சிலர் வழி தவறி தங்களோடுகூட ஒரு சிலரை அழைத்துக் கொண்டு போக விரும்புவார்கள். "உங்களிலும் சிலர் எழும்பி, சீஷர்களை உங்களிடத்தில் இழுத்துக் கொள்ளும்படி மாறுபாடானவைகளை போதிப்பார்களென்று அறிந்திருக்கிறேன்" (அப்போஸ்தலர்: 20:30).

ஒரு மந்தையின் மத்தியில் விசித்திரமான குணாதிசயம் படைத்த சில ஆடுகள் கண்டிப்பாய் இருக்கத்தான் செய்யும். இவைகளை சரியான கண்காணிப்பின் கீழ் வைக்க வேண்டும். இல்லாவிட்டால், இப்படிப்பட்ட ஆடுகள் சிமித்தம் கண்டிப்பாய் பிரச்சினைகள் உருவாகும். இந்த வித்தியாசமான ஆடுகள் சபையில் உள்ள பிரச்சினைக்குரிய மற்றும் பிரச்சினையை உருவாக்கும் ஜனங்களாக இருக்கலாம். அவர்களைக் குறித்து சில உதாரணங்களைக் காண்போம்.

1. தனிமையான ஆடு:

Image result for pastors! guard your sheep

சில ஆடுகள் வேண்டுமென்றே மந்தையுள்ள மற்ற ஆடுகளை விட்டு பிரிந்து தனியாய் இருக்கும். இப்படி இருப்பதன் மூலம் மற்றவர்களின் கவனத்தை கவர வேண்டும் என்பதும் காரணமாக இருக்கலாம்.

ஒருவேளை உண்மையான ஐக்கியத்திற்கு தங்களை திறந்து கொடுக்க பயப்படுகிறவர்களாகவும் இருக்கலாம். சிலவேளைகளில் மந்தையில் உள்ள மற்றவர்களுடைய ஐக்கியம் தன்னுடைய தகுதிக்கு முழுமையடையவில்லை என்ற சிந்தனையாகவும் இருக்கலாம். காரணம் எப்படியானாலும் நிச்சயமான ஒன்று என்னவென்றால், "தனிமையான ஆடு - ஆரோக்கியமற்ற ஆடு".

ஆரோக்கியமான ஆடுகள் நிச்சயம் கண்டிப்பாக தோழமையை விரும்பும். உங்கள் சபையிலுள்ள அங்கத்தினர்கள் யாராவது சுயாதீனமாய் தனித்து இயங்கிக் கொண்டிருந்தால் அவர்களை உடனே கவனித்து காரணத்தை ஆராய்ச்சி செய்யுங்கள். விசாரியுங்கள். ஏனெனில், எங்கோ தவறு நடக்கிறது?!

2. துறவி ஆடு:

   Image result for pastors! guard your sheep    Image result for pastors! guard your sheep

ஆடுகள் தங்கள் ரோமத்தை வருடத்திற்கு ஒருநாள் இழக்க நேரிடும். சில வேளைகளில் வருடத்திற்கு இரண்டு முறைகூட ஏற்படலாம். ஆடுகளை மயிர்கத்திரிக்கிறவன் தன்னிடமுள்ள கத்திரிக்கோலை கொண்டு, அவைகளை கத்திரித்து எடுப்பான். பண்டைய நாட்களில் நம்முடைய நாட்டு சவரத் தொழிலாளி பயன்படுத்தும் கத்திரியைப்போலவே ஒரு சவரக் கத்தியை பயன்படுத்தி இந்த ரோமத்தை கத்தரிப்பார்கள். 

துறவி ஆடுகள் மந்தையை விட்டு விலகியே இருக்கும். ஏனெனில், இவ்வகை ஆட்டிற்கு ரோமத்தை இழக்க பிரியமிருக்காது. இதனால், ரோமம் அதிகமாக வளர்ந்து கண்களை மூடிக்கொள்ளும். அவைகளின் பார்வை தடைபட்டுப் போய்விடும். இதினிமித்தம் அவைகள் முட்செடிகளில் சிக்குண்டு தங்கள் எதிரிகள் வசம் சிக்கிக்கொள்ளும்.

நம்முடைய சபைகளிலும் இப்படிப்பட்ட துறவி ஆடுகளை  பார்க்கலாம். தேவன் அவர்களது வாழ்க்கையில் இடைபடும்போது, இவர்கள் தேவனை திறந்த மனதுடன் சந்திக்காமல் ஒதுங்கிப் போய் விடுவார்கள். தேவனை சந்திக்க மனதற்றவர்கள் இவர்களே. தாங்கள் பின்மாற்றமாய் போவதுமல்லாமல், சபையிலுள்ள மற்றவர்களையும் பின்மாற்றமான வழிக்கு அல்லது உலகப்பிரகாரமாய் இழுத்துச் சென்று விடுவார்கள். சில வேளைகளில் மந்தையிலுள்ள இப்படிப்பட்ட துறவி ஆடுகளை வெளியே நீக்குவது சாலச் சிறந்தது.

3. சுற்றித்திரியும் ஆடு:

Image result for pastors! guard your sheep

ஒருசிலர் தங்கள் சூழ்நிலைகளில் என்ன நடந்தாலும் திருப்தி அடையவே மாட்டார்கள். கர்த்தர் எவ்வளவு பெரிய காரியங்களை எவ்வளவு வேகமாக செய்தாலும், இவர்கள் திருப்தி அடையவே மாட்டார்கள். இந்த ஆடுகள் மந்தையை விட்டு மந்தை, சபையை விட்டு சபை தாவிக் கொண்டே இருக்கும். 

இப்படிப்பட்டவர்களுடைய ஆவி பரிசுத்தமில்லாதததால் அமைதியற்றதாயிருக்கும். போதகர்கள் மற்றும் மேய்ப்பர்கள் இப்படி சுற்றித்திரியும் ஆடுகளை ஒழுங்குபடுத்த வேண்டும். தங்களை ஒழுங்குபடுத்திக் கொள்ள இவைகள் கீழ்படியா விட்டால், மந்தையில் உள்ள மற்ற ஆடுகளை இவைகள் கெடுப்பதற்குள் இவைகளை அப்புறப்படுத்த வேண்டும்.

4. யூதாஸ் ஆடு:

Image result for pastors! guard your sheep

இந்த ஆடு வேண்டுமென்றே மற்றவைகளை கொலைக்களத்திற்கு அழைத்துச் செல்லும். பன்னிரண்டு சீஷர்களில் ஒருவன் காட்டிக் கொடுக்கிறவனாய் இருந்தான். ஞானமுள்ள மேய்ப்பன் மந்தையை நடத்துகின்ற வழிகளுக்கு புறம்பாகவே எப்போதும் எதிரியாகவே செயல்படும். இந்த ஆட்டையும் கண்டுபிடித்து மந்தையிலிருந்து அகற்ற வேண்டும்.

ஒழுக்கம்:

மேய்ப்பர்களுக்கு மந்தையில் ஏற்படுகின்ற பிரச்சினைகளின் காரணங்களை ஆராய்ந்து அறியும்பொழுது சபையில் உள்ளதான ஒழுக்கக்குறையே காரணமாய் இருக்கும். 

Image result for guard your sheep

மேய்ப்பர்களே!

தேவனை விசுவாசித்து, பரிசுத்தாவியானவரின் துணையோடு ஒரு புதிய தைரியத்தை தரும்படியாய் கேளுங்கள். நீங்கள் உண்மையான மெய்யான மேய்ப்பர்களாய் மாறுவீர்கள். உங்கள் ஜனங்களுக்குள் இருந்தும் வெளியிலிருந்தும் வரும் ஆபத்துகளிலிருந்து உங்கள் மந்தையை பாதுகாத்துக் கொள்ளலாம். தேவன் உங்களை ஆசீர்வதித்து பெருகப்பண்ணுவாராக! ஆமென்!

- Selected