மார்ச் 03, 2015

இலக்குகள் நிர்ணயித்து செயல்படுதல்

Image result for setting targets and goals

இலக்குகள் நிர்ணயித்து செயல்படுதல்

எந்த ஒரு நிறுவனமோ, குழுவோ வளர்ச்சிக்காக செயல்படும்போது, இலக்குகளை நிர்ணயித்து செயல்படும்.

தற்சமயம் இருப்பவற்றை தக்க வைத்துக் கொள்ளவும், எதிர்காலத்தில் தாங்கள் விரும்பும் வளர்ச்சியை இலக்குகளாக திட்டமிட்டு நிறைவேற்றுவார்கள்.

பொதுவாக ஒரு வேலையை  குறிப்பிட்ட அளவில்  அல்லது எண்ணிக்கையில் செய்ய முடியும் என்று தீர்மானித்து திட்டமிடுகிறோம். அந்த திட்டம் செய்து முடிக்க முடியுமா? சாதகமானதுதானா? என்பது, நாம் செயல்பட ஆரம்பிக்கும்போதுதான் தெரிய வரும். 

நம் கண்ணுக்கு தெரியாத அல்லது  நாம் கருத்தில் கொள்ளாத சாதக, பாதக காரணிகள் இருக்கலாம். அதற்கேற்ப வளர்ச்சி திட்டங்களை கூட்டவோ, குறைக்கவோ செய்யலாம். ஒரு குறிப்பிட்ட இலக்கை வைத்து செயல்படுவோம். நம் கிரியைகளை தேவனுக்கு காணிக்கையாக்குவோம்.

அதே நேரம், எதிர்காலத்தை நம்மால் தீர்மானிக்கவோ, கணிக்கவோ இயலாது. இது விசுவாச இலக்கு. நம்முடைய எதிர்பார்ப்பு பணமோ, பலாபலனோ அல்ல. இதன்மூலம் தேவநாமம் மகிமைப்படவும், தேவராஜ்யம் கட்டப்பட்டு, தேவசித்தம் நிறைவேறவுமேயன்றி வேறல்ல.

இலக்குகளில் இரண்டு வகை உண்டு. அவை:

1. அளவிடக் கூடிய இலக்குகள்

2. அளவிடமுடியாத அதே சமயம் உணரக்கூடிய இலக்குகள்

அளவிட முடியாத இலக்குகளில் சில உதாரணங்கள்...

1.மறுரூபமாகுதல், தேவனுடைய நாமம், தேவனுடைய இராஜ்யம், தேவசித்தம் உணரப்படுதல்

2. கிறிஸ்தவர்களைக் குறித்த தவறான எண்ணங்களை மாற்றுதல்

3. அன்பு, சந்தோஷம், சமாதானம், நீதி, பரிசுத்தம், கீழ்படிதல், தாழ்மை, மன்னித்தல், பொறுமை, நற்கிரியைகளை செய்தல், சிறப்பாக செயலாற்றுதல், தியாகம், சுயநலமில்லாத வாழ்வு, நேரம் தவறாமை போன்றவற்றை குழு அங்கத்தினர்கள் அன்றாடக வாழ்வில் வெளிப்படுத்த வேண்டும்.

4. உப்பை போன்று மறைமுகமாகவும், வெளிச்சத்தைப்போல வெளியரங்கமாகவும் செயல்பட்டு மாற்றத்தை ஏற்படுத்தும் கிரியா ஊக்கியாக காரணிகளாக திகழ வேண்டும்.

5. நாம் வாழும் சமுதாயத்தில் கிறிஸ்தவர்களின்  ஈடுபாடு, பங்களிப்பு, பிரசன்னம் இவைகளை உணரச் செய்தல்.

                திட்டமிடும் முன்பு தற்சமயம் உள்ள நிலையை தக்க வைத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும்? திட்டமிட்ட வளர்ச்சிக்கான இலக்கை நோக்கிச் செல்ல என்ன செய்ய வேண்டும்?  என தீர்மானிக்க வேண்டும்.

தக்க வைத்துக் கொள்ள ... 

1. ஜெபத்தில் தேவனை சார்ந்து கொள்ளுதல் (எபேசியர்: 3:20)

2. வேதவசனத்தின்படி தேவன் சொல்வதை செய்வது

3. ஆவியின் ஒருமனப்பாட்டை குழுவில் காத்துக் கொள்வது (எபேசியர்: 4:1-7)

4. தேவன் தந்துள்ள பலத்தின்படி போராடி பிரயாசப்பட வேண்டும் (கொலோசெயர்: 1:29)

5. அவ்வப்போது மேற்பார்வையிட்டு திட்டத்தின்படி செயல்படுவதை கண்காணிக்க வேண்டும்.

இலக்கை அடைய ... (A)

* நிகழ்ச்சிகள், வழிமுறைகள், செயல்பாடுகளை திட்டமிட வேண்டும்

* தரிசனம் தேவை

* தரிசனத்தை நிறைவேற்ற தேவையான அம்சங்கள் வேண்டும்

* அதற்கான வாஞ்சையும், தூண்டுதலும் வேண்டும்

* நம்மை ஊக்கப்படுத்த, சரி செய்ய மேற்பார்வையாளர்கள் தேவை

உதாரணமாக... 18 மாத காலகட்டத்தில் - ஒரு புதிய வீடு கட்டுதல்:

1. கட்டிட வரைபடம்

2. எவ்வளவு செலவாகும் என்ற மதிப்பீடு

3. பல்வேறு வேலைகளின் பட்டியல் (அஸ்திபாரம், செங்கல் வேலை, மரவேலை, மேல் தளம், சுற்றுச் சுவர், மின்சார வேலைகள்,  பூச்சு வேலை, பெயிண்டிங் போன்றவை)

4.   ஒவ்வொரு வேலையை செய்ய தேவையான கால அளவும், செய்ய வேண்டிய முறைகளும்:
                                        ஒரு வேலையை முடித்தால்தான் அடுத்த வேலையை துவங்க முடியும். உதாரணமாக, செங்கல் சுவர் ஒரு குறிப்பிட்ட அளவு உயரம் வராமல் ஜன்னலை பொறுத்த முடியாது. அதற்காக, கட்டிடம் கட்டும் வரையில் ஜன்னல் செய்யாமல் இருப்பதில்லை. அதை தனியாக இன்னொரு வேலையாக செய்து முடிக்கப்படுகிறது.

ஒரு வேலை தாமதமானால், ஒட்டு மொத்த வேலை நிறைவேற  திட்டமிடுவதைவிட நேரம் அதிகமாகும். எனவே, இப்படிப்பட்ட கால தாமதங்கள், எதிர்பாராத தடைகள், இயற்கை தடைகள், வேலையாட்கள் பற்றாக் குறைகள், ஒரு வேலையை செய்து முடிக்க குறைந்தபட்ச நேரம், அதிகபட்ச நேரம் இவைகளை மனதில் கொண்டே திட்டமிடுவார்கள். 

சில வேலைகளுக்கு கட்டாயம் குறிப்பிட்ட அளவு காலம் தேவைப்படும். உதாரணமாக: அஸ்திபாரம், செங்கல் சுவர், மேல்தளம் செட்டாவதற்கான நேரம் கொடுத்தே ஆக வேண்டும்.

தாமதங்கள், தடைகள், பற்றாக்குறைகள் இவைகளின் நடுவிலும் குறிப்பிட காலகட்டத்தில் வீட்டை   பூர்த்தி செய்ய அதிகப்படியான நேரங்கள், வேலையாட்கள், பொருட் செலவுகள் தேவைப்படும்.

5. ஒரு கட்டிடம் அதற்கான வரைபடத்தின்படியும், மதிப்பீட்டின்படியும், கால அளவிற்குள் சிறப்பாக கட்டி முடிக்கப்பட மேற்பார்வையாளர் கட்டாயம் தேவை. மேற்பார்வையாளர் வரைபடத்தின்படி அளவுகளை சரிபார்த்து அவ்வப்போது தேவையான மாற்றங்களை செய்ய, வேலை நடைபெறும்போதே ஆலோசனை கூறுவார். 

பொருட்களின் தரத்தையும், அளவையும் மதிப்பிட்டு, பணம், பொருள், நேரம், வேலையாட்களின் ஒத்துழைப்பு, இவைகளை  கண்காணித்து, தேவையில்லாத நஷ்டத்தை தவிர்த்து ஏற்ற வேளையில் கட்டி முடிக்க உதவி செய்வார்.

 (வருடம்) ……………… ல் நமது பராமரிப்பு குழுக்களின் இலக்கை அடைய


எண்

தற்போது
பின்னர்
1
வீடுகள்


2
அங்கத்தினர்கள்


3
ஞானஸ்நானம்


4
பரிசுத்த ஆவியானவர்


5
பராமரிப்பு குழுக்கள்


6
ஆவிக்குரிய பெற்றோர்


7
உப தலைவர்


8
பராமரிப்புக் குழு தலைவர்


9
செக்‌ஷன் தலைவர்


10
செக்‌ஷன்கள்




தற்போது உள்ளதை தக்க வைத்துக் கொள்ள ...

1. ஜெபம்

2. வேதவாசிப்பு:  தேவன் எப்படிப்பட்டவர்?  என்ன எதிர்பார்க்கிறார்?

3. திருச்சபை ஆராதனை:  பங்கெடுப்பு, ஈடுபாடு, கொடுத்தல் இவைகளில் வளர்ச்சி

4. தேவன் தங்களுக்கு தந்த வரங்களை கண்டு பிடித்து, வளர்ச்சியடைய பயன்படுத்துதல்

5. முறையான, சீரான போதக கவனிப்பு:   சுக, துக்க காரியங்களில் உதவி, ஊக்கம், தைரியம், பயிற்சி, ஆவிக்குரிய குணத்தில் வளர உதவுதல்


எண்

தற்போது
1
வீடுகள்
முறையான வீடு சந்திப்பு
2
அங்கத்தினர்கள்
திருச்சபைக்கும், பராமரிப்புக்குழுவிற்கும் வருவதை கவனித்தல்
3
ஞானஸ்நானம்
அபிஷேகத்திற்குள் நடத்துதல், அடிப்படை பாடங்கள்
4
பரிசுத்த ஆவியானவர்
ஆவிக்குரிய பெற்றோர் பயிற்சி
5
பராமரிப்பு குழுக்கள்
முறைப்படி நடக்கிறதா? என கணித்தல்
6
ஆவிக்குரிய பெற்றோர்
அனுபவ அறிவு பெற நடத்துதல்
7
உப தலைவர்
வாய்ப்புகளை கொடுத்தல்
8
பராமரிப்புக் குழு தலைவர்
வளர்ச்சிக்கு நேராக நடத்துதல்
9
செக்‌ஷன் தலைவர்
மற்றவர்களைக் கண்காணிக்கக் கற்றுக் கொடுத்தல்
10
செக்‌ஷன்கள்
சீரான, முறையான கண்காணிப்புகள்




இலக்கை அடைய ... (B)

1. கண்காணிக்கக்கூடிய, மேற்பார்வை செய்து அறியக்கூடிய அளவில் இலக்குகளை சிறு சிறு பகுதியாக பிரித்துக் கொள்ளுதல்.

2. இலக்குகளை அடைய தேவையான நிகழ்ச்சிகள், செயல்பாடுகள், வேலைகள் எப்போது செய்யப்பட வேண்டும் என்ற நிகழ்ச்சி நிரலை நேரம், தேதி, வாரம், மாதம் என்ற அளவில் காலண்டரில் குறிக்க வேண்டும்.

3. நாம் தீர்மானித்தபடிதான் நடக்கிறதா? என்பதை தொடர்ந்து கண்காணித்து வருதல், கண்காணிப்புக்கு உட்படுத்துதல்.

4. சூழ்நிலைகள், ஒத்துழைப்பு, சாதக, பாதக காரணிகள் இவைகளுக்கேற்ப செய்யப்பட வேண்டிய மாற்றங்களை ஏற்படுத்துதல்

5. நம்முடைய இலக்குகள் ஆவிக்குரியவைகளானதால் இவைகள் நம்முடைய பெலத்தினால் அல்ல;  ஆவியானவரின் பெலத்தினாலும், அபிஷேகம் பெற்றவர்கள் மற்றும் வரம் பெற்றவர்களின் உதவியினாலும் நிறைவேற்றப்பட வேண்டும்.

கண்காணிப்பு, மேற்பார்வையிடல் குறித்த குறிப்புகள்

எந்த ஒரு திட்டமும், பணியும் நிறைவேற கட்டாயம் கண்காணிப்பு தேவை. தொடர்ந்து கண்காணிப்பது அவசியம். விளைவை கண்காணிக்க, தேவையற்ற வழிவிலகலை தவிர்க்க, எதிர்பாரா பிரச்சினைகளை சமாளிக்க, நாம் இடைநிலை இலக்குகளை நிர்ணயிக்க குறிக்க வேண்டும்.

நாம் திட்டமிட்ட இலக்கை நோக்கித்தான் செல்கிறோமா? திட்டமிட்ட காலகட்டத்திற்குள் நிறைவேற்றி விடுவோமா? இலக்கை அடைந்து விடுவோமா? என சீர்தூக்கிப் பார்க்கவும். தேவையான மாற்றங்களை அமல்படுத்தவும், கண்காணிப்பு, கட்டுப்பாடுகள், மேற்பார்வையிடல் தேவை.

ஆரம்பத்திலேயே அதை செய்யா விட்டால் பெரிய நஷ்டங்கள் ஏற்பட்டு விடும். செயல் முடிந்தபின் அல்ல; செயலை தொடங்கி, செயல்பட்டுக் கொண்டிருக்கும்போதே கண்காணிக்க வேண்டும். இந்த வேகத்தில் சென்றால் எப்படி? என்பதை திட்டம் அமல்படுத்தும்போதே ஆய்வு செய்து விட வேண்டும்.

அடிக்கடி நம்முடைய இலக்கையும், நம் செயல்களையும் கண்காணிப்புக்கு உட்படுத்த வேண்டும். உதாரணமாக, ஆகாய விமானத்தில் விமானி, தரக்கட்டுப்பாடு, கவனிக்க வேண்டியவைகள், கண்காணிக்க வேண்டியவைகள் - சரி செய்யத் தவறினால், சேர வேண்டிய இடத்திற்கு போக முடியாது. அத்துடன், சிலசமயம் அவரும், பயணிகளும் அழிந்து போவார்கள்.

கண்காணிப்பு செய்ய விரிவான திட்டமும், செயல்முறையும் முன்கூட்டியே தெரிந்திருக்க வேண்டும். அது எல்லோராலும் அங்கீகரிக்கப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். தவறு நேரிடும்போது, எப்படி? யாரால்? எப்போது சரி செய்யப்படும்? என்பதை முன்னரே தீர்மானிக்க வேண்டும்.

"திட்டம்" என்பது இலக்கை அடைய என்னென்ன செய்ய வேண்டும் என்பதாகும்.

"கண்காணிப்பு" என்பது திட்டமிட்டபடிதான் செயலாற்றப்படுகிறது என்பதை உறுதிப்படுத்துவது.

1. ஒவ்வொன்றையும் அளவிட்டுப் பார்க்க, தரத்தை நிர்ணயித்தல்

2. அளவிட்டுப் பார்த்தல் - நேரடியாக, அறிக்கை வாயிலாக

3. ஒப்பிட்டுப் பார்த்தல்

4. சரி செய்யப்பட வேண்டியவைகள், திருத்தங்கள் செய்தல்

  
கண்காணிப்பின் அவசியம்

1. நம்முடைய சூழ்நிலைகளும், காலநிலைகளும், மனநிலைகளும், அரசியல், சமூக பின்னணிகளும் மாநுபடுகிறவைகளானதால், அவைகள் நமது திட்டத்தை பாதிப்பதால், நம் இலக்கை அடைவதற்கு இடை யூறு பண்ணும் என்பதாலும் - இதன் மத்தியில் நம் திட்டம் சரியாக நடைபெறுகிறதா? என்பதை கண்காணித்தே ஆக வேண்டும். 

2. தவறுகள், வழிவிலகல்கள் சிறியதாக இருக்கும்போதே அல்லது ஆரம்ப நிலையிலேயே அடையாளம் காணப்பட்டு, கண்டு திருத்தப்படா விட்டால், பெரிய இழப்பை ஏற்படுத்தி விடும். பிரச்சினை பெரிதாவதற்கு முன்பே தவறுகள் கண்டுபிடிக்கப்பட கண்காணிப்பு உதவுகிறது.

3. தங்களுக்கு பகிர்ந்தளித்த பொறுப்பை குறித்து கணக்கொப்புவிக்க வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்துகிறது.

4. நம்முடைய ஆதாரங்களை, மனிதர்களை சரியாக பயிற்சிவிக்க, எச்சரிப்படைய, உற்சாகப்படுத்த, ஊக்கப்படுத்த பயன்படும்.

  நாம் நல்ல உக்கிரணாக்காரனாக திகழ வேண்டும்: 

அப்.பரி. பவுல் கூறும்போது, "நான் நிச்சயமில்லாதவனாக ஓடேன்" (1கொரிந்தியர்: 9:26) என்றான்.

தேவன் ஏழு சபைகளையும் வெளிப்படுத்தின விசேஷத்தில் ஆய்வுக்கு உட்படுத்துகிறார். (வெளிப்படுத்தல்: 2,3 அதிகாரங்கள்)

நம்முடைய திருச்சபையின் இலக்குகளை அடைய நாம் செயலாற்ற வேண்டியவைகளும், கண்காணிக்கப்பட வேண்டியவைகளுமான குறிப்புகள்:


செயலாற்ற வேண்டியவைகள்
வீடுகள்
வாரத்திற்கு ஒரு புதிய வீடு சந்தித்தல், குழு அங்கத்தினர்கள் சந்திக்க விரும்பும் வீடுகள், அவர்களின் நண்பர்கள், புதிய நபர்கள் ஜெபத்திற்காக, ஆசீர்வதிப்பதற்காக, சுவிசேஷத்தை அறிவிப்பதற்காக 2 அல்லது 3 பேராக சந்திக்க செல்லுதல்
அங்கத்தினர்கள்
ஒரு குழுவிற்கு ஒரு வாரத்திற்கு ஒரு புதிய ஆத்துமா, ஒவ்வொரு அங்கத்தினரும், ஒரு வருடத்திற்கு 2 பேரையாவது கிறிஸ்துவுக்குள் நடத்த வேண்டும்.
அதற்கு குறைந்தபட்சம் 20 பேரை தெரிந்து கொண்டு, ஜெபித்து, அவர்களில் சிலரோடு பழகி, சுவிசேஷத்தை அறிவித்து, வாஞ்சையுள்ளவர்களை கிறிஸ்துவுக்குள் வழிநடத்தி, பராமரிப்புக்குழுவிற்கு அழைத்து வந்து, திருச்சபைக்கு அறிமுகப்படுத்த வேண்டும். இதை காலண்டரில் திட்டமிட வேண்டும். எப்போது? யார்? யாரை? சந்திக்கப்போகிறோம்? யார்? யாரை? அறிமுகப்படுத்தப்போகிறோம்? என்பதை குழுவாக திட்டமிட வேண்டும்.
ஞானஸ்நானம்
ஞானஸ்நான பாடங்கள் போதிக்கப்பட வேண்டிய நாட்கள், 3 மாதத்திற்கு ஒருமுறை, ஞானஸ்நானம் எடுக்க உற்சாகப்படுத்துதல், ஆயத்தப்படுத்துதல், யார்?யார்? எப்போது என திட்டமிடுதல்.
பரிசுத்த ஆவியானவர்
பரிசுத்தாவியானவரைப் பெற்றுக்கொள்ள வருடத்திற்கு 3 சிறப்புக் கூட்டங்களை ஒழுங்குபடுத்தப்பட வேண்டும். கலந்துகொள்ள வேண்டியவர்கள், .டம், நேரம், சிறப்புச் செய்தியாளர் திட்டமிட வேண்டும்.
பராமரிப்புக் குழுக்கள்
“பராமரிப்புக்குழு பெருகும் நாள்” என்று ஒருநாளை தீர்மானிக்க வேண்டும். அடுத்த குழு எங்கே? யாருடைய வீட்டில் கூட வேண்டும்? என குறித்துவிட வேண்டும். அந்த புதிய குழுவிற்கு யார் தலைவராக இருப்பார்? உப தலைவர், ஆவிக்குரிய பெற்றோர்கள் யாராக இருப்பார்கள்? என முன் குறிக்க வேண்டும். அப்படிப்பட்டவர்களின் பெயர்களை எழுத வேண்டும். அவர்களுக்கு தேவையான பயிற்சிகளுக்காக அவர்களை ஆயத்தப்படுத்த வேண்டும்.
ஆவிக்குரிய பெற்றோர்
ஆவிக்குரிய பெற்றோரை உருவாக்க வருடத்திற்கு 3 பயிற்சி நடத்தப்பட வேண்டும். எங்கே? எப்போது? யார்? யார்? பங்கெடுக்கத் தகுதியுள்ளவர்கள்? அல்லது யார்? யாரை? ஆயத்தப்படுத்த வேண்டும்? என்று குழு அங்கத்தினர் ஒவ்வொருவரைக் குறித்தும் தனிப்பட்ட கால நிர்ணயம் செய்ய வேண்டும்.
அனுபவ பாடம் பெற, எங்கே? எந்த குழுவிற்கு அனுப்ப போகிறீர்கள்? என்பதை முன்கூட்டியே தீர்மானித்து, பயிற்சி பெறுபவர்களை அனுப்பி, கண்காணிக்க வேண்டும்.
உப தலைவர்
பராமரிப்புக்குழுவில் நடைபெறும் நிகழ்ச்சிகள், பராமரிப்புக் குழு கடந்து செல்லும் நிலைகள், குழு அங்கத்தினர்களுக்கு ஏற்பட வேண்டிய மாற்றங்கள் இவைகளை அறிந்து, தலைவருக்கு உதவி செய்தலும், தலைவர் வர இயலாத நேரத்தில் குழுவை நடத்துதலும் அவசியம். புதிய குழு ஆரம்பிக்கும்போது, அக் குழுவிற்கு தலைவராக பொறுப்பெடுத்தல்.
பராமரிப்பு குழு தலைவர்
பராமரிப்புக் குழு தலைவர் பயிற்சி வருடத்திற்கு 3 நடத்த வேண்டும். அதற்கு தகுதியுள்ளவர்களை அடையாளம் கண்டு, பயிற்சிக்கு ஆயத்தப்படுத்த வேண்டும். பயிற்சிகள் எந்தெந்த தேதிகளில் நடைபெறும் என்பதை முன்பே தீர்மானிக்க வேண்டும். யார்?யார்? எந்தெந்த தேதிகளில் பங்கெடுக்கப் போகிறார்கள்? என்பதை முன்பே தீர்மானித்து, அதற்கு அவர்களை ஆயத்தப்படுத்த வேண்டும்.
செக்‌ஷன் தலைவர்
வருடத்திற்கு ஒரு செக்‌ஷன் தலைவர் பயிற்சி, மூன்று பராமரிப்புக் குழுவிற்கு ஒரு செக்‌ஷன் தலைவர்
செக்‌ஷன்கள்
இவைகள் வளர்ச்சி அடையும்போது, நிர்வாகத்தால் தீர்மானிக்கப்படும்.


(வருடம்) ………………………. இலக்குகள்

சோன்:............... செக்‌ஷன்: ......................   பராமரிப்புக்குழு பெயர்: ............................... தலைவர்:................................
எண்
தலைப்புகள்
தற்போது
பிப்
மார்ச்
ஏப்
மே
ஜீன்
ஜீலை
ஆக
செப்
அக்
நவ
டிச
புதிய
மொத்தம்
1
வீடுகள்














2
அங்கத்தினர்கள்














3
ஞானஸ்நானம்














4
பரி.ஆவியானவர்














5
பரா.குழுக்கள்














6
ஆவி.பெற்றோர்














7
உ.தலைவர்














8
ப.குழு தலைவர்

















- Selected