மார்ச் 18, 2015

ஆவியானவருக்குள் உணர்வுகளை கட்டுப்படுத்துதல்

Image result for emotional pictures


"மனுஷனுடைய விவேகம் அவன் கோபத்தை அடக்கும்; குற்றத்தை மன்னிப்பது அவனுக்கு மகிமை" (நீதிமொழிகள்: 19:11)

நம் வாழ்க்கையில் பல முடிவுகளை நாம் அறிவுப்பூர்வமாக எடுப்பதை விட, உணர்வுப்பூர்வமாகவே எடுக்கிறோம்.  ஒவ்வொரு கர்த்தருடைய பிள்ளைகளுக்குள்ளும் "உள்ளுணர்வு" என்ற "பரிசுத்தாவியின் ஏவுதல்" ஒரு நல்ல வழிகாட்டியாக தேவனாகிய கர்த்தர் நமக்கு கொடுத்திருக்கிறார். 

அதோடுகூட சிலவேளைகளில், அந்தந்த நேரங்களில் சூழ்நிலை மற்றும் மனநிலைக்கேற்ப முடிவுகள் எடுக்கப்படுகின்றன. ஆனால், அம்மாதிரியான முடிவுகள் பரிசுத்தாவியானவரின் சித்தப்படியான உணர்வுகளை நாம் சரியாக புரிந்து கொண்டுதான் சரியான முடிவுகளை எடுத்திருக்கிறோமா? அல்லது நம் சுய விருப்பத்தின்படி, உணர்ச்சிவசப்பட்டு முடிவு எடுத்துள்ளோமா? என்பதும் அதன் விளைவுகள் என்ன என்பதை  கிரியைகள் மற்றும் நாட்களானது நமக்கு விளங்கப்பண்ணும்.

நம்முடைய அன்றாட வாழ்வில் பரிசுத்தாவியானவரின் வழிநடத்துதலும், வழிகாட்டுதலும் காணப்படும்படி இடங்கொடுக்கப்பட வேண்டும். நாம் அல்ல; அவரே நமக்கு முன் செல்ல அனுமதிக்க வேண்டும். எல்லாவற்றிலும் தேவசித்தம் நிறைவேற இடந்தர வேண்டும். அப்பொழுது ஆவியானவர் நம் அனுதினவாழ்வில் செயலாற்றுவார். 

நாம் ஒவ்வொரு சமயமும் பரிசுத்தாவியானவர் கிரியை செய்வதற்கு முன்பு, நமது மனித அறிவும், மனித உணர்வும் முந்திக் கொள்வதை பார்த்திருக்கிறோம். அது சிலவேளைகளில் நல்லபடியாகவும், சிலவேளைகளில் தவறாகவும் முடிந்துபோனதையும் அனுபவித்திருப்போம். பல சமயங்களில் சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கும். "கொஞ்சம் அவசரப்பட்டு விட்டோமோ?" அல்லது "கொஞ்சம் பொறுத்திருந்திருக்கலாமோ?" அல்லது "ஆறப்போட்டிருக்கலாமோ?" என்று வருந்தும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கலாம்.

உணர்ச்சிவசப்பட்டு, கோபத்தில் அல்லது மகிழ்ச்சியான தருணத்தில் முக்கியமாக நாம் எடுக்கும் முடிவுகள், அள்ளித் தெளித்து விடும் கொப்பளிக்கும் வார்த்தைகள்,  அடுத்தவர்களை காயப்படுத்தும்போதோ, நமக்கே அவைகள் எதிரிகளாக மாறும்போதுதான் இன்னும் கொஞ்சம் வருத்தம் அதிகரிக்கிறது.

நம்மை மிஞ்சி உணர்ச்சி வசப்படுவதோ, அதை வெளியே காண்பிப்பதோ பலவேளைகளில் நன்மையாக அல்ல... வெகு தீமையாகவே முடிந்துபோகிறது.

*   இஸ்ரவேலின் ஒன்பதாவது நியாயாதிபதியான யெப்தாவின் வாழ்வில் பார்க்கிறோம். புத்தியீனமாக உணர்ச்சி வசப்பட்டு செய்த பொருத்தனையின் நிமித்தம் தன் ஒரே மகளை பலிகொடுக்க வேண்டியதாயிற்று. (நியாயாதிபதிகள்: 11:30 - 40).

*   காயீனின் கோபம் என்கிற உணர்ச்சி சகோதரனாகிய ஆபேலை கொன்றுபோட வைத்தது (ஆதியாகமம்: 4:5-8)

*   மோசே, இஸ்ரவேலரின் விக்கிரகாராதனையை கண்டு  கோபம் கொண்டதினால் கர்த்தருடைய கற்பலகைகளை உடைத்துப்போட்டான் (யாத்திராகமம்: 32:19).

*   கோபத்தினிமித்தம் கன்மலையை மோசே அடித்ததினால் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் நுழைய இயலாமற்போனது (எண்ணாகமம்: 20:11,12).

உணர்ச்சிவசப்படுதல் அதனால் வரும் விளைவுகள் - நன்மையைவிட தீமைகளே அதிகம் என்பதை நாம் அறிய வேண்டும்.

உணர்ச்சிவசப்படுதலின் வகைகள்

1. கவலை
சோர்வு
தனிமை
வெறுப்பு
கோபம்
முறிவு
தொந்தரவு
அதைரியம்
திகைப்பு
நம்பிக்கையின்மை
அக்கறையின்மை
ஏமாற்றம்
கடுப்பு
கசப்பு
மனவேதனை
கவலை

2. சந்தோஷம்

நம்பிக்கை
தாங்குதல்
வசீகரம்
நன்றி
அமைதி
பொழுதுபோக்கு
நன்மை
திருப்தி
சந்தோஷம்
ஆர்வம்
சிலிர்ப்பு
அன்பு
அனுதாபம்
கொண்டாட்டம்
அதிக சந்தோஷம்

3. தீங்கு

தகாத பழக்கம்
மறதி
புறக்கணிப்பு
தீர்ப்பு
அவமதிப்பு
தொந்திரவு
விலகுதல்
சபித்தல்
அழித்தல்
வெறுப்பு



நிந்தித்தல்
தவறான அணுகுமுறை
அடக்குதல்
தீங்கு செய்தல்
சித்திரவதை

4. உதவுதல்

வாஞ்சை
நன்மை செய்தல்
மெச்சத்தக்க
புரிதல்
புகழ்தல்
அதிகாரமளித்தல்
ஒப்புக்கொள்ளுதல்
அதிர்ஷ்டம்
குணப்படுத்துதல்
அன்பு காட்டுதல்
மதித்தல்
கவனித்தல்
நம்பிக்கை ஊட்டுதல்
முழுமையாக்குதல்
காப்பாற்றுதல்

5. ஸ்திரமற்ற நிலை

பலமற்ற
நம்பிக்கையற்ற
சந்தேகமுள்ள
பயம்
விசாரம்
தோல்வி
மதிப்பற்ற
குற்றமுள்ள
விகாரமான
அழுத்தம்
வற்புறுத்தல்
பிரயாசை
கலவரமடைந்த
மன அமைதியற்ற
மனசங்கடம்

6. தன்னம்பிக்கை

பலம்
தைரியம்
நிச்சயம்


உறுதி
ஆயத்தம்
வெற்றி
விலையுயர்ந்த
மன்னித்தல்
அழகான
சுலபம்
தைரியமூட்டுதல்
அமைதி
தளர்த்து
பத்திரமான
ஆறுதல்

7. சோர்வு

அலட்சியம்
அலுப்பு
காலி செய்தல்
நோய்
களைப்பு
ஒளியற்ற
சோர்வு
ஸ்தம்பிப்பு
வலிமையற்ற
அதைரியபடுத்துதல்
ஊக்கமற்ற
நலிவடைதல்
அழுத்தம்
புதுமையற்ற பழமை

8. முயற்சி

நோக்கம்
ஊக்கம்
உருவாக்கும் திறன்
ஆரோக்கியம்
புதுப்பிப்பு
துடிப்பு
விழிப்பு
உற்சாகம்
பலப்படுத்தல்
உந்துதல்
கண்ணோக்குதல்
இளமை ஊட்டு
திடப்படு
சுறுசுறுப்பு
இளைப்பாறு



மேற்கண்ட பட்டியலே உணர்ச்சிவசப்படுதலின் பட்டியலாகும். இப்பட்டியலில் உள்ள உணர்வுகள் நம் மனநிலையில் காணப்படுகிறவைகள். இவைகள் நம்மில் மேலோங்கும்போது, நாமே முடிவெடுத்து செயல்படாமல் பொறுமையோடு பரிசுத்தாவியானவரிடம் காரியங்களை ஒப்புவித்தால் அவர் நம்மில் சரியாக செயலாற்றுவார். "நான் உனக்குப் போதித்து, நீ நடக்க வேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்" (சங்கீதம்: 32:8).

ஆவிக்குள் உணர்வுகளை கட்டுப்படுத்த ...

1. அவசரப்பட்டு பதற்றமாக பேசாதீர்கள்:

இதயத்தின் வெளிப்பாடுகளை வெளிக்கொண்டு வருவதே வாய் மூலமாகத்தான். நமது பேச்சுக்களே நாம் யார் என்பதை மற்றவர்களுக்கு உணர்த்தி விடும். அதுவே நம்மை பெரும் சிக்கலில் மாட்டி விடும். உணர்ச்சி வசப்பட்டு பேச வேண்டிய சூழ்நிலை ஏற்படும்போது, உடனடியாக அதற்கு ஒரு கடிவாளம் போட கற்றுக்கொள்ளுங்கள். "என் நாவினால் பாவஞ்செய்யாதபடிக்கு நான் என் வழிகளைக் காத்து, துன்மார்க்கன் எனக்கு முன்பாக இருக்குமட்டும் என் வாயைக் கடிவாளத்தால் அடக்கி வைப்பேன் என்றேன்" (சங்கீதம்: 39:1).

இப்போது அதீத உணர்ச்சிநேரம். இப்போது சொல்லும் எந்தச் சொல்லும் பிறரை வருத்தமுண்டாக்கும் அல்லது காயமுண்டாக்கும் என்று பதற்ற நேரத்தில் உங்களுக்குள்ளேயே உள்ளுக்குள் சொல்லிக் கொள்ளுங்கள். "... விசுவாசிக்கிறவன் பதறான்" (ஏசாயா: 28:16) என வேதம் கூறுகிறது.

Image result for Do not talk to the tension

சுனாமி போல் பொங்கி வரும் உணர்ச்சிவசப்படுதலை அடக்க தேவகிருபை மிக அவசியம். எதிராளி நம்மை உணர்ச்சிவசப்பட வைத்து, பதற்றமான சூழலை ஏற்படுத்தி, மனம்பதறி தவறான முடிவையோ, தீர்மானத்தையோ, வருத்தமுண்டாக்கும் வார்த்தையையோ நம்மில் வரவைக்க முயற்சிப்பான்.

 இதுபோன்ற தருணங்களில் நமக்கு தேவகிருபை, ஆவியானவரின் ஒத்தாசை மிக தேவை. அவரது வழிநடத்துதல் தேவை. நம் உணர்வுகளை கட்டுப்படுத்த ஆவியானவரால் மட்டுமே முடியும். இனி நமக்கு தேவை நல்லதொரு தீர்வுதான். நீங்கள் எதிர்கொண்டிருக்கும்ஒரு சவால் மற்றும் பிரச்சினை தொடர்பாக பரிசுத்தாவியானவரின் வழிகாட்டுதல் நமக்கு மிக அத்தியாவசியம். சத்துரு என்ன வலை விரித்திருக்கிறான் என நாமறியோம். ஆவியானவர் அறிவார். எனவே, "இது எதிர்பேசப்படாத காரியமாகையால், நீங்கள் ஒன்றும் பதறிச் செய்யாமல் அமர்ந்திருக்க வேண்டும்" (அப்போஸ்தலர்: 19:36).

இப்படியாக பரிசுத்தாவியானவருக்கு இடம் தரும்போது நடப்பது என்ன? 

"பதற்றமுள்ளவர்களின் இருதயம் அறிவை உணர்ந்து கொள்ளும், தெற்றுவாயருடைய நாவு தடையின்றித் தெளிவாய் பேசும்" (ஏசாயா:32:4)  என வசனம் சொல்வதுபோல அற்புதம் நம்மில் நடக்கும்.

உங்களுக்குள் ஏற்பட்டிருக்கும் பதற்றம், அவசரம், கோபம், வேதனை போன்ற உணர்வுகள் படிப்படியாக அதன் வீரியத்தை இழந்து நிதானத்திற்கு வரும்வரை அவசரப்படாமல் காத்திருங்கள். இப்பொழுது, பரிசுத்தாவியானவர் கிரியை செய்ய இடங்கொடுங்கள். அப்பொழுது, ஆவியானவர் உங்களில் இடைபட்டு, 'இதற்காக பெரிய அளவில் அலட்டிக் கொள்ள வேண்டாம்' என உள்ளுணர்வில் உணர்த்துவதை நீங்கள் உணர்வீர்கள். பயமும், திகிலும் உங்களை விட்டு விலகி செல்வதையும், பதற்றம் நீங்கி, அமைதி உள்ளத்தில் ஏற்படுவதையும் உணருவீர்கள்.

அவசரப்பட்டு பதற்றத்தில் பேசியதால் பலபேர், பல நல்ல நட்புகளை , நல்ல உறவுமுறைகளை, நல்ல மனிதர்களை இழந்திருக்கிறார்கள். நல்ல உள்ளங்கள் காயப்படுத்தப்பட்டு, மனமுறிவும், மணமுறிவும், மனப்பிரிவும், மணப்பிரிவும் ஏற்பட்டு, குடும்பங்கள் சீர்குலைந்து, நிலைகுலைந்து கிடப்பதையும் நாம் பார்த்து வருகிறோம். சிலர் குற்றுயிரும், குலைஉயிருமாக விழுந்தவர்கள்,   வார்த்தைகளால் வாதிக்கப்பட்டு மரித்தும் போயிருக்கிறார்கள். எனவே, வார்த்தைகளில் கவனமாயிருங்கள்.

2. எதிரான எண்ணங்களை ஒதுக்குங்கள்:

Image result for Assigning the thoughts

உணர்ச்சி பெருக்கு ஏற்படும்போதுதான் எல்லாவிதமான குறுக்கு எண்ணங்களும், யோசனைகளும் மனதில் தோன்றும். அப்படிப்பட்ட எதிர்மறையான எண்ணங்கள் எப்போதும் மென்மேலும் தீமையையே வருவிக்கும். 

தனக்கு கிடைக்காவிட்டால் வேறு எவருக்கும் கிடைக்கக்கூடாது. தனக்கு ஆகாதவரிடம் வேறு எவரும் தொடர்பு வைத்தால் நமக்கு கோபம், சந்தேகம் வரும். தனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை; எதிராளிக்கு இரண்டு கண்ணும் போக வேண்டும். எனக்கே இல்லையெனும்போது, அவனுக்கு எதற்கு? வேண்டாமென்றால் வேண்டாம்தான். இதுபோன்ற எண்ணங்களே எதிர்மறையானவை. அதில் ஒருவித குரூர சந்தோஷம் கூட ஏற்படலாம். இது ஒருவகை மன விகாரம். மோசமான மனநோயாககூட மாறிவிடலாம். இதெல்லாம் நம்மை விட்டு அறவே அகற்றப்பட வேண்டியவைகள். இக்குணங்கள் பரிசுத்தவான்களுக்கு தகாது. நாம் நல்ல ஆவிக்குரிய தேவனுடைய பிள்ளைகள் என்பதை மறந்துபோய்விடக் கூடாது.

எதிர்மறையான எண்ணங்கள் சகோதர சிநேகத்தை, நல்ல உறவுகளை, நற்பண்புகளை அழித்து நம்மை துன்மார்க்கமான வழியிலே கொண்டு போய்விடும். "... எந்த எண்ணத்தையும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியச் சிறைப்படுத்துகிறவர்களாயிருக்கிறோம்" (2கொரிந்தியர்: 10:5) என அப்.பவுல் கூறுவதுபோல, எதிரான எண்ணங்கள் அனைத்தையும் கிறிஸ்துவின் வசனத்தினால் கீழ்படுத்த வேண்டும்.

எந்தவொரு உணர்ச்சி போராட்டமும் ஏதேனும் காரணத்தோடுதான் நம்மில் ஏற்பட்டிருக்கும். அது எதனால் ஏற்பட்டது? ஏன் இவ்வாறு நடந்தது? எனக்குள் எப்படி இந்த பாதிப்பு வந்தது? இதற்கு யார் காரணம்? சுயத்தினால் வந்ததா? சாத்தானால் வந்ததா? துன்மார்க்க ஆலோசகர்களால் வந்ததா? என நிதானமாக பரிசுத்தாவியானவருக்குள் யோசித்து பார்க்க வேண்டும். ஜெபத்திலே கர்த்தரின் வெளிப்படுத்தலுக்காய் காத்திருக்க வேண்டும். அப்பொழுது உங்களுக்கே இதன் உள்ளர்த்தமும் காரணமும் விளங்கும். விட வேண்டியவைகளை விட்டு விடுங்கள். விலக வேண்டியவைகளை விட்டு விலகுங்கள். களைய வேண்டியவைகளை தாமதமின்றி களைய வேண்டும். இதில் தயவுதாட்சண்யம் பார்க்கக் கூடாது.

"சகல எண்ணங்களையும் சகல செய்கைகளையும் நியாயந்தீர்க்குங்காலம் இனி இருக்கிறபடியால் சன்மார்க்கனையும் துன்மார்க்கனையும் தேவன் நியாயந்தீர்ப்பார்" (பிரசங்கி: 3:17).

உணர்ச்சி பெருக்கை, உணர்ச்சிவசப்படுதலை கட்டுப்படுத்த இயலாதவர்கள்தான் சுயக்கட்டுப்பாட்டை இழந்து பாவச்சேற்றில் விழுந்து விடுகிறார்கள். தகாதவைகளை செய்து தண்டனைக்குள்ளாகிறார்கள். அவமான நிந்தனைக்கேதுவாக சென்று தங்களைத் தாங்களே அழித்துக் கொள்கிறார்கள்.

Image result for forgiveness clipart

உணர்ச்சிவசப்பட்டு சுயக்கட்டுப்பாட்டை இழந்தவர்கள்:

* அம்னோன் - தன் சகோதரியாகிய தாமாரை நிந்தனைக்குள்ளாக்கினான். (2சாமுவேல்: 13 ஆம் அதிகாரம்)

* அப்சலோம் - அகித்தோப்பெலின் தவறான ஆலோசனையினால் தாவீதின்  மறுமனையாட்டிகளோடு பிரவேசித்து நிந்தனைக்குள்ளானான். (2சாமுவேல்: 16:22,23).

* பேதுரு - அவசரப்பட்டு பட்டயத்தை உருவி கழுத்தை வெட்டப்போய், காதை வெட்டினான் (மத்தேயு: 26:51)

இவர்களெல்லாம் கர்த்தருடைய பிள்ளைகள்தான். ஏன் இப்படி நடந்து கொண்டார்கள்? உணர்ச்சிவசப்பட்டதினால்தானே?! தவறாக வழிநடத்தப்பட்டதினால்தானே?!

எனவே, இவற்றிலிருந்து விடுபட தேவஒத்தாசை மனிதனுக்கு அவசியம் தேவை. அதற்காகத்தான் கர்த்தர் தம் ஜனங்களை வழிநடத்த மேய்ப்பர்களை, போதகர்களை நல்ல ஆவிக்குரிய வழிகாட்டிகளாக ஏற்படுத்தினார். நம் வாழ்வில் வரும் ஐயப்பாடுகளை களைய நல்ல ஆவிக்குரிய, நற்சாட்சியுள்ள, முன்மாதிரி ஜீவியமுள்ள தேவமனிதர்களிடம் நல் ஆலோசனை கேட்டு அதனால் பயன் பெறலாம். "ஆலோசனையில்லாத இடத்தில் ஜனங்கள் விழுந்து போவார்கள்; அநேக ஆலோசனைக்காரர் உண்டானால் சுகம் உண்டாகும்" (நீதிமொழிகள்: 11:14).

அவர்கள் நமக்கு பரிசுத்த வேதாகமத்தில் இருந்து நற்போதனை செய்து நல்வழிப்படுத்த தேவனால் அபிஷேகம் பண்ணப்பட்ட தேவமனிதர்கள். அவர்களிடம் உங்கள் மனஐயங்களை கூறி பகிர்ந்து கொள்ளும்போது அவர்களுடைய ஆலோசனை உங்களுக்கு ஒரு புதிய திசையைக்காட்டும்.

"ஆலோசனையில்லாமையால் எண்ணங்கள் சிந்தியாமற்போம்; ஆலோசனைக்காரர் அநேகர் இருந்தால் அவைகள் உறுதிப்படும்" (நீதிமொழிகள்: 15:22).

 "நல்யோசனை செய்து யுத்தம் பண்ணு; ஆலோசனைக்காரர் அநேகரால் ஜெயங்கிடைக்கும்" (நீதிமொழிகள்: 24:6)

3. மன்னிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்:


Image result for forgiveness clipart

ஒரு உண்மையான கிறிஸ்தவனுடைய சிறந்த குணாதிசயங்களில் மிக முக்கியமானது மன்னித்தல். உங்கள் உணர்ச்சி வேகத்திற்கு உங்கள் நண்பரோ, உங்கள் குழந்தைகளோ, உங்கள் மனைவியோ, அலுவலக சகோதரனோ, அல்லது சபையிலுள்ள விசுவாசியோ யார் வேண்டுமானாலும் காரணமாக இருக்கலாம். அந்தக் கொதிப்பான தருணத்தை மறக்க முற்படுவதுபோலவே, அதற்குக் காரணமானவர்களையும் மன்னித்து விடுங்கள். காலம் முழுவதும் இதை மனதில் வைத்துக்கொண்டு என்ன சாதிக்கப் போகிறீர்கள்? கசப்பும், வெறுப்பும், மாம்ச வைராக்கியமும் பெருகிக் கொண்டுதான் போகும்.

"யாவரோடும் சமாதானமாயிருக்கவும், பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கவும் நாடுங்கள்; பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே. ஒருவனும் தேவனுடைய கிருபையை இழந்துபோகாதபடிக்கும் யாதொரு கசப்பான வேர்  முளைத்தெழும்பிக் கலக்கமுண்டாக்குகிறதினால் அநேகர் தீட்டுப்படாதபடிக்கும்... சீர்கெட்டவனாகவும் இராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள்" (எபிரேயர்: 12:14-16).

கசப்புகள், வெறுப்புகள் நீங்க ஒரே வழி - மன்னித்தலே.

"அப்பொழுது பேதுரு அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, என் சகோதரன் எனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்து வந்தால், நான் எத்தனை தரம் மன்னிக்க வேண்டும்? ஏழுதரமட்டுமோ என்று கேட்டான். அதற்கு இயேசு: ஏழுதரமாத்திரம் அல்ல, ஏழெழுபதுதரமட்டும் என்று உனக்குச் சொல்லுகிறேன்" (மத்தேயு: 18:21,22).

உங்களுக்கு விரோதமாக பேசியவர்களை, விரோதமாக செயல்பட்டவர்களை, தூஷித்தவர்களை, நிந்தித்தவர்களை, களங்கப்படுத்தியவர்களை, அற்பமாக எண்ணியவர்களை, நன்மைகளை கெடுத்துப்போட்டவர்களை ... இன்னும்... இன்னும்... அதிகமதிகமாக ... உங்களுக்கு விரோதமதாக எதை செய்திருந்தாலும் மனுஷருடைய தப்பிதங்களை கிறிஸ்துவினிமித்தம் மனப்பூர்வமாக மன்னியுங்கள். அப்பொழுது நீங்கள் மன்னிப்புப் பெறுவீர்கள். மனம் சமாதானம் அடையும். மனம் இயல்பு நிலைக்கு திரும்பி விடும். இளைப்பாறுதல் பெறுவீர்கள். தேவசமாதானம் உங்களை பரிபூரணமாக ஆளுகை செய்யும்.

மனித உணர்வுகள் கண்ணாடி போன்றவை. அதை மிகவும் ஜாக்கிரதையாக கையாள வேண்டும். பத்திரமாக இருந்தால், அதில் உங்கள் அழகான பிம்பம் தெரியும். கீழே விழுந்து உடைந்து போனாலோ, அதை உங்களால் ஒட்ட வைக்கவும் முடியாது... உங்கள் முகப்பிம்பமும் சிதறிப் போகும்.

உணர்வுகளை கட்டுப்படுத்த இயலாதவர்களும், பரிசுத்தாவியானவரின் உதவியால் கட்டுப்படுத்திய பல பரிசுத்தவான்களும் வேதத்தில் திருஷ்டாந்தங்களாக நமக்கு முன் இருக்கிறார்கள். இவ்விரண்டையும் வேதத்தின் வெளிச்சத்தில் தியானித்தோம். நம் வாழ்வில் மேற்கண்ட ஆவியின்கட்டினால் கட்டப்பட்டவர்களாய் கட்டப்பாட்டோடு வாழ்ந்து கர்த்தருக்காய் சாட்சியாக வாழ்ந்து, நம்மை ஆயத்தப்படுத்திக் கொண்டு, பிறரையும் ஆயத்தப்படுத்தி அவரது வருகைக்கு காத்திருப்போம். கர்த்தர் தாமே உங்களனைவரையும் ஆசீர்வதிப்பாராக! ஆமென்! அல்லேலூயா!