குழுவின் நிகழ்ச்சி நிரல்
வகை
|
நோக்கங்கள்
|
செயல்கள்
|
இணைப்பு
|
குழுவில்
தாங்கள் வரவேற்கப்பட்டதாகவும், முக்கியமானவர்களாகவும் உணர உதவி செய்யுங்கள்
அங்கத்தினர்கள்
தாங்கள் அனைவரும் ஒரு குழு என்றும் தாங்கள் எல்லோரும் ஒன்றே என்று உணரச் செய்யுங்கள்
|
இன்பார்மல்
இணைப்பு உண்டாக நல்ல சூழ்நிலையை உண்டாக்குங்கள் (உ.ம்: நல்ல வெளிச்சம், சிற்றுண்டிகள்)
பார்மல்
இணைப்பு: விளையாட்டுகள்
|
மகிமைப்படுத்து
|
தேவனை மகிமைப்படுத்து
தேவனுடைய
மகத்துவத்தைக் காண ஒவ்வொருவரையும் உற்சாகப்படுத்துங்கள்
|
விசுவாசத்தைக்
கட்டும் பாடல்கள்
சாட்சிகள் (திட்டமிட்டதும், உள்ளத்திலிருந்து உடனே வருவதும்)
|
வளர்ச்சி
|
வேத வசனத்தை
நடைமுறையில் அனுதினமும் கடைபிடித்து தங்கள் வாழ்க்கையை மாற்றிக் கொள்ள உதவுங்கள்
தேவனைக்
குறித்தும் இரட்சிக்கப்படாதவர்களைக் குறித்தும் அன்பும் கரிசனையும் உண்டாக்குங்கள்
|
தேவனுடன்
தனிமையான நேரம் – பகிர்ந்து கொள்ளுதல் (உ.ம்: அனுதின ஜெபம், வேத தியானம்)
புத்தகங்களை
பயன்படுத்தி கலந்துரையாடல்களை நடத்துதல்
|
போ
|
அவர்களுடைய
சமுதாயம் இயேசுவை ஏற்றுக் கொள்ளும்படியாக ஆத்துமாக்களை தெரிந்து கொள்ளவும், பரிந்து
பேசவும் அவர்களோடுகூட தொடர்பு கொள்ளவும் ஒவ்வொருவரையும் உற்சாகப்படுத்துங்கள்.
நம்முடைய
முயற்சிகளையும், வரங்களையும் இணைத்து செயல்படுத்துங்கள்
|
ஒய்கோஷ் – சமுதாயத்திற்கு ஜெபியுங்கள்
Ø ஜெப நடை
Ø சால்டிங்
|
ஆயத்தப்படுத்து
|
சபை / குழுவின்
தரிசனத்தையும், போகும் வழியையும் உறுதிப்படுத்துங்கள்
சபை / குழுவின்
தரிசனம், செயல்களுக்கு ஒவ்வொரு நபரையும் உற்சாகப்படுத்துங்கள்
|
v அறிவிப்பு
v
நினைவு
ஊட்டுதல்
|
நினைவு கொள்ளுங்கள்:
1. நிகழ்ச்சி நிரலை தேவைக்கேற்றபடி மாற்றிக் கொள்ளலாம். புதிய காரியங்களை செய்யுங்கள்.
2. ஆயினும், இணைப்பில் ஆரம்பித்து ஆயத்தப்படுத்தலில் முடிய வேண்டும்.
3. மேற்கண்ட ஐந்து காரியங்களும் எப்பொழுதும் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்கு ஏற்ற விதத்தில் அமைத்துக் கொள்ளுங்கள்.
இரண்டு முக்கிய கேள்விகள்:
ஒரு கூட்டத்தின் முடிவில்...
1. அவர்கள் எப்படி உணர்ந்து செல்ல வேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்கள்?
2. ஓர் நோக்கத்தை பெற்றுச் செல்கிறார்களா?
வளர்ச்சி - L.I.G.H.T முறையைப் பயன்படுத்தி நடத்துதல்
L - ஒரு கேள்வியுடன் ஆரம்பியுங்கள்
I - அதற்கு பதில் கேளுங்கள்
G - வேறொரு நபரிடம் கேளுங்கள்
H - பதில்களை சரியாகக் கையாளுங்கள்
T - நேரமெடுத்து அனுதின வாழ்க்கைக்கும் தரிசனத்திற்கும் ஏற்ற விதத்தில் சொல்லி முடியுங்கள்
L - கேள்வியுடன் ஆரம்பியுங்கள்:
- வாழ்க்கையை மாற்றும் கலந்துரையாடலுக்கு கேள்விகளே திறவுகோல்.
சரியான கேள்விகளை எழுப்புவதின் மூலம், நடத்துபவர் அங்கத்தினர்களுக்கு எப்படி உதவுகிறார் என்றால்...:
1. தேவன் தங்களுக்கும் மற்றும் குழுவிற்கும் என்ன சொல்லுகிறார் என்பதைத் தாங்களே கண்டறியவும்
2. தேவன் சொல்லுகிறதை பயன்படுத்தவும் மற்றும் கீழ்படியவும் உதவுகிறார்.
- ஆகவே, தலைவர் சரியான கேள்விகளைக் கேட்க கற்றுக் கொள்வது மிக முக்கியமாகும்.
- சரியான கேள்விகள் கேட்பதற்கு அதிக நேரமும், பயிற்சியும் தேவைப்படும்.
- கேள்விகளை நீங்களே கேளுங்கள். பதில்களை குழுவினர் சொல்லட்டும்.
ஒரு நல்ல கேள்வியானது...
* கலந்துரையாடல் மற்றும் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுதலையும் உண்டாக்கும்
* ஒவ்வொருவரின் பொதுவான எண்ணத்தை நன்கு அறிந்து கொள்ள உதவும்
இந்த கேள்விகள் மூலமாக ஒருவர், என்ன நினைக்கிறார்? எப்படி உணர்கிறார்? அவர் என்ன சொல்ல வேண்டும்? என்பதை அறியலாம்.
தவறான கேள்வியானது ...
* ஆம் அல்லது இல்லை என்ற பதிலைத்தான் கொடுக்கும்
* என்ன பதில் இருக்க வேண்டும் என நீங்கள் விரும்புகிறீர்களோ அதற்கேற்றபடி இருக்கும்.
I - பதில் கேளுங்கள்:
- நீங்களே எல்லாவற்றையும் பேசாமல் மற்றவர்களைப் பேச வைக்கவும்.
- போதிக்கக் கூடாது
- நீங்கள் ஓர் நடத்துபவர்தான். ஆசிரியர் அல்ல
- எல்லோரும் பங்கு கொள்ள உற்சாகப்படுத்துங்கள்
- அவர்களுடைய பதில்களை நீங்கள் எப்படி ஏற்றுக் கொள்கிறீர்கள் என்பது - கலந்துரையாடலை சிறப்பாக்கும் அல்லது மோசமாக்கும்
G - வேறொரு நபரிடம் கேளுங்கள்:
- ஒரு நபர் மாத்திரமே அனைத்தையும் பேச விடாதீர்கள்
- எல்லாரையும் கலந்துரையாடலில் பங்கு பெறச் செய்யுங்கள்
H - பதில்களை சரியாகக் கையாளுங்கள்:
1. கேள்விகள் மூலம் தெளிவுபடுத்தலாம்:
* நீங்கள் கூறுவதன் அர்த்தம் என்ன?
* விளக்கிக் கூற முடியுமா?
* நீங்கள் கூறும் அர்த்தம் இதுதானா?
2. கடினமான கேள்விகளை கையாள்வது:
- உங்களுக்கு பதில் தெரியாவிடில் அதை மறைக்க முயற்சிக்க வெண்டாம்
- அடுத்து வரும் வாரத்தில் நீங்கள் சரியான பதிலோடு வரலாம். சரியான பதிலை தெரிந்து கொண்டு வரும்படி வேறு யாரையாவது நியமிக்கலாம். ஏதாவதொரு வழியில் பதிலைத் தர வேண்டும்.
3. "தவறான" பதில்களைக் கையாள்வது:
* முழு குழுவின் முன்பாக ஒருவரின் தவறான பதிலை "அது தவறு" என சொல்லக்கூடாது
* அவருடைய பதிலை ஏற்றுக் கொள்ளுங்கள். "இது நல்ல முயற்சி" .
"... மேரி... நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?" - என வேறொருவரிடம் கேட்டு, பதிலைப் பெறலாம்.
4. சம்பந்தமில்லாத கேள்விகளை கையாண்டு திரும்பவும் சரியான வழிக்கு வருதல்:
- கேள்வியை ஏற்றுக் கொள்ளுங்கள். "இது ஒரு நல்ல கேள்வி"; ஆனால், "கலந்துரையாடலுக்கு இது சம்பந்தப்பட்டதல்ல. வேறு எப்பொழுதாவது இதைக் குறித்து கலந்துரையாடலாம்" என சொல்லுங்கள்.
5. மௌனத்தைக் கையாள்வது:
* பதில் சொல்லாமல் மௌனமாயிருக்கிறவர்களைக் குறித்து பயப்படாதீர்கள். ஜனங்கள் யோசிக்க நேரம் கொடுங்கள்.
* தேவையானால் கேள்வியை வேறுவிதமாக மாற்றிக் கேளுங்கள்.
6. எல்லா பதில்களையும் ஒருங்கிணைத்துச் சொல்லுங்கள்:
- பகிர்ந்து கொள்ளப்பட்ட எல்லா நற்கருத்துக்களையும் சேர்த்து மற்றும் பகிர்ந்து கொள்ளப்படாத வேறு சில நல்ல கருத்துக்களையும் சேர்த்து சொல்லுங்கள்.
- குழுவில் யார் என்ன சொன்னார்கள் என்பதைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். அது எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து தெளிவாக சொல்ல உதவும்.
T - நேரமெடுத்து அனுதின வாழ்க்கைக்கும் தரிசனத்துக்கும் ஏற்ற விதத்தில் சொல்லி முடியுங்கள்:
"நடைமுறைக்கு ஒவ்வாத காரியங்கள் வேதனை உண்டாக்கும்" - லாறி பர்க்கெட்
1. நடைமுறை கேள்வியைக் கேளுங்கள்:
(உ.ம்) தேவனை மகிமைப்படுத்த ஒரே மனம் அவசியம் என்ன என்பதைப் பார்த்தோம். அப்படி ஒரே மனமாக இருக்க உங்கள் வாழ்க்கையில் என்ன மாற்றங்கள் செய்யப் போகிறீர்கள்?
2. தேவனை மகிமைப்படுத்துவதில் குழுவில் உள்ள அனைவரையும் ஒரே மனதோடு இருந்தால் எப்படி இருக்கும் என படமாக வரையுங்கள்.
3. ஒருவருக்கொருவர் பகிர்ந்து ஜெபிக்க செய்யுங்கள். இதை இருவராகவோ, மூவராகவோ அல்லது குழுக்களாகவோ செய்யலாம். நல்ல பாடல் ஒன்றை பாடி முடிக்கவும்.
கலந்துரையாடலை நடத்துவதற்கு உதவிகள்
கேள்விகளின் வகைகள்:
வாழ்க்கையை மாற்றும் கலந்துரையாடல்களுக்கு நல்ல கேள்விகள் ஒரு திறவுகோலாக இருக்கின்றன. நீங்கள் அநேகவிதமான கேள்விகளை ஒரு கலந்துரையாடலை நடத்தும்போது கேட்கலாம். இந்தக் கேள்விகள் மூன்று வகையாகும்.
- ஆரம்பக் கேள்விகள்
- வழி நடத்தும் கேள்விகள்
- நடைமுறைப்படுத்தும் கேள்விகள்
1. ஆரம்பக் கேள்விகளின் பயன்கள்:
* இவை அர்த்தமுள்ள கலந்துரையாடலை ஆரம்பித்து வைக்கும்.
* இவை அங்கத்தினர் பதில் கொடுக்கச் செய்யும் மற்றும் அதனிமித்தம் கலந்துரையாடல் சிறந்த முறையில் மேலும் நடத்த உதவும்.
2. வழிநடத்தும் கேள்விகளின் பயன்கள்:
- இவை கலந்துரையாடலை திறந்த மனதுடன், ஆழமாக, எடுத்துக்காட்டுடன் நடத்த உதவும்.
- அவை ஒவ்வொரு நபரும் ஆழமாக கலந்துரையாடல் செய்ய உதவும்
3. நடைமுறைப்படுத்தும் கேள்விகளின் பயன்கள்:
* அவை வேத அறிவையும் அதன் தினசரி வாழ்வில் கடைபிடிப்பதையும் இணைக்கும். அது நமது வாழ்க்கையை மாற்றிக் கொள்ள உதவும்.
* நடைமுறைப்படுத்தும் கேள்விகள் மூலமாக தேவனுடைய வார்த்தையையும், கிறிஸ்தவ வாழ்க்கையையும் இணைத்து - அனுதின வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றும். இல்லையெனில் கலந்துரையாடல் பயனற்றதாகிவிடும்.
* "உங்களையே கேட்டுக் கொள்ளுங்கள்" பகுதியில் காணப்படும் கேள்விகளே நடைமுறைப்படுத்தும் கேள்விகளுக்கு உதாரணம்.
கேள்விகளைக் குறித்த மேலும் விளக்கம்:
* அவை வேத அறிவையும் அதன் தினசரி வாழ்வில் கடைபிடிப்பதையும் இணைக்கும். அது நமது வாழ்க்கையை மாற்றிக் கொள்ள உதவும்.
* நடைமுறைப்படுத்தும் கேள்விகள் மூலமாக தேவனுடைய வார்த்தையையும், கிறிஸ்தவ வாழ்க்கையையும் இணைத்து - அனுதின வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றும். இல்லையெனில் கலந்துரையாடல் பயனற்றதாகிவிடும்.
* "உங்களையே கேட்டுக் கொள்ளுங்கள்" பகுதியில் காணப்படும் கேள்விகளே நடைமுறைப்படுத்தும் கேள்விகளுக்கு உதாரணம்.
கேள்விகளைக் குறித்த மேலும் விளக்கம்:
- நல்ல கேள்விகள்
- நல்ல கேள்விகள் எளிமையான, சுருக்கமான மற்றும் எளிதில் புரிந்து கொள்ளக் கூடியவைகளாக இருக்கும்.
- கேள்விகள் உணர்வுகளையும், உண்மைகளையும் ஆராயக்கூடியவைகளாக இருக்க வேண்டும்.
- கேள்விகள் கலந்து கொள்கிறவர்களுடைய உண்மையான ஆர்வத்திற்கு ஏற்றபடி இருக்க வேண்டும்.
- நீங்கள் ஒரு கேள்விக்கு வேறொரு கேள்வியினால் பதில் சொல்லலாம்.
- பதில்கள் இப்படியும் இருக்கலாம், அப்படியும் இருக்கலாம் என தீர்மானிக்கிற கேள்விகளைத் தவிர்த்து விடுங்கள்.
- Selected