ஆகஸ்ட் 07, 2012

கூகிளின் தமிழ் எழுதி மென்பொருள்

அதிரடியாக கணினிக்கான கூகுளின் தமிழ் எழுதி
கணினியில் தமிழில் எழுத்து பல்வேறு தமிழ் எழுதிகள் இருந்தாலும் கூகுளின் தமிழ் எழுதி வரவேற்பை பெற்றுள்ளது. கூகிள் தமிழ் எழுதி குறித்து ஏற்கனவே பல இடுகைகள் எழுதி உள்ளேன். கூகிள் தமிழ் எழுதியின் பெரிய பின்னடைவு இணைய தொடர் இணைப்பின்றி அதனை உபயோகிக்க இயலாது. Notepad, Word போன்றவற்றில் கூகிள் தமிழ் எழுதியை உபயோகிக்க இயலாது.

இப்போது இந்த பின்னடைவும் நீக்கப்பட்டு உள்ளது. இனி கூகிள் தமிழ் எழுதியை உபயோகிக்க இணைய இணைப்பு தேவை இல்லை. உங்கள் கணினியில் வேண்டுமென்ற இடத்தில் கூகிள் தமிழ் எழுதி மூலம் தமிழில் தட்டச்சலாம்.

இதற்கு கூகுளின் ஐஎம்ஈ(IME) எனும் மென்பொருளை தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவி கொண்டால் போதுமானது. இது விண்டோஸ் எக்ஸ்பி, விண்டோஸ் விஸ்டா, விண்டோஸ் 7 இயங்குதளங்களில் வேலை செய்யும்.

இதனை தரவிறக்க 'Choose your IME Language' என்பதில் தமிழ் என்பதனை தேர்வு செய்து தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவி கொள்ளுங்கள்.



அடுத்து உங்கள் கணினியில் 'Start' மெனுவை கிளிக் செய்து Control Panel சென்று கொள்ளுங்கள். அங்கு Region and Language என்பதனை கிளிக் செய்து கொள்ளுங்கள்.



தோன்றும் விண்டோவில் Keyboards and Languages என்பதில் Change Keyboards என்பதை கிளிக் செய்து கொண்டு Google Tamil Input என்பதனை தேர்வு செய்து கொள்ளவும். விளக்கத்திற்கு கீழே உள்ள படத்தை பார்க்கவும்.



அவ்வளவுதான் இனி நீங்கள் கணினியில் இனி எங்கு வேண்டுமானாலும் தமிழில் தட்டச்சு செய்து கொள்ளலாம். ஆங்கிலத்திற்கும் தமிழுக்கும் மாறிக் கொள்ள F12 விசையை (F12 Key) அழுத்தி கொள்ளவும்.

இனி நீங்கள் தமிழில் தட்டச்சும் போது எல்லாம் தொடர்ந்து இணைய இணைப்பில் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

இந்த தமிழ் மென்பொருளை கணினியில் பதிந்த பிறகு
vanakkam என்று தட்டச்சு செய்யுங்கள். vanak என்று தட்டச்சு செய்வதற்குள்... தானாகவே நீங்கள் தட்டச்சு செய்ய விரும்பும் வார்த்தை (வணக்கம்) இதுவா? என்று உங்களை அன்புத்தொல்லை செய்கிறது இந்த கூகுள் தமிழ் மென்பொருள்!

தறவிறக்க சொடுக்கவும்

நன்றி டிவிஎஸ்50.பிளாக்ஸ்பாட்.காம்