ஆகஸ்ட் 02, 2012

“பழைய ஏற்பாடு”


“மோசேயின் நியாயப்பிரமாணத்தில் தீர்க்கதரிசிகளின் ஆகமங்களிலும் சங்கீதங்களிலும் என்னைக் குறித்து எழுதியிருக்கிறவைகளிலெல்லாம் நிறைவேறவேண்டியதென்று, நான் உங்களோடிருந்தபோது உங்களுக்கு சொல்லிக் கொண்டு வந்த விசேஷங்கள் இவைகளே” - என்று இயேசு கூறினார். (லூக்கா: 24:14).

இ‌‌யேசு கிறிஸ்துவின் வாத்தைகளின் அடிப்படையில், பழைய ஏற்பாடு பொதுவாக 3 பெரும் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

1. நியாயப்பிரமாணம்: (The Law)

ஆதியாகமம், யாத்திராகமம், லேவியராகமம், எண்ணாகமம், உபாகமம்

இந்த 5 புத்தகங்களும் “பஞ்சாகமம்” (Pentateuch) என அழைக்கப்படுகிறது. இது “தோரா” (Torah) என்று அழைக்கப்படுகிறது. The Law - அதாவது “சட்டபுத்தகம்” - “நியாயப்பிரமாணம்” என எபிரேய பாஷையில் அழைக்கப்படுகிறது.

2. தீர்க்கதரிசிகள்: (The Prophets):

தீர்க்கதரிசிகள் - 2 பகுதி உண்டு.

1. முந்திய தீர்க்கதரிசிகள் (Former)
2. பிந்தைய தீர்க்கதரிசிகள் (Latter)

முந்திய தீர்க்கதரிசிகள்:

யோசுவா, நியாயாதிபதிகள், சாமுவேல், இராஜாக்கள்

பிந்திய தீர்க்கதரிசிகள்:

பிந்திய தீர்க்கதரிசிகளில் 2 பிரிவாக பிரிக்கலாம்.

அ) பெரிய தீர்க்கதரிசிகள்
ஆ) சிறிய தீர்க்கதரிசிகள்

அ)பெரிய தீர்க்கதரிசிகள்:

ஏசாயா, எரேமியா, எசேக்கியேல்.

ஆ) சிறிய தீர்க்கதரிசிகள்:

ஓசியா, யோவேல், ஆமோஸ், ஒபதியா, யோனா, மீகா, நாகூம், ஆபகூக், செப்பனியா, ஆகாய், சகாியா, மல்கியா.

தீர்க்கதரிசிகள் எபிரேய பாஷையில் (Nebhim) “ந‌ெபீம்” என அழைக்கப்பட்டனர்.


3. எழுத்துப்படைப்புக்கள்: The Writings:

கவிதை வடிவில் சார்ந்தவை:

சங்கீதங்கள், நீதி மொழிகள், யோபு

ஐந்து சுருள்கள்: மகிலோத் (Megiloh):

உன்னதப்பாட்டு, ரூத், புலம்பல், எஸ்தர், பிரசங்கி

சரித்திரம் சார்ந்தவை:

தானியேல், எஸ்றா, நெகேமியா, நாளாகம புத்தகங்கள்.

இவைகள் எபிரேய மொழியில் “கெத்துபீம்” (Kethubim) என அழைக்கப்படுகிறது.