ஆகஸ்ட் 19, 2012

எண்ணாகமம் விளக்கவுரை தொடர் - 7


  யூதா அல்லது துதிப்பவனின் குணாதிசயங்கள்:


1.  துதிப்பவன் கொடுப்பான்:

 எண்ணாகமம்: 1:20-44 - ல் "20 வயது முதல் யுத்தத்திற்குப் புறப்படப்படத்தக்கவர்களின் எண்ணிக்கையைப் பார்க்கும்போது  ... (பட்டியலைப் பார்க்க - தொடர்: 1) - 74,600 பேர் உள்ளனர்.

யுத்த வீரர்கள் எதற்கு?

1. எதிரிகளிடமிருந்து ஜனங்களைப் பாதுகாக்க
2. தேவன் வாக்குப்பண்ணின தேசத்தை சுதந்தரிக்க

மொத்த இஸ்ரவேலர்களின் யுத்த வீரர்கள் (6,03,150) பற்றிய தேவனுடைய திட்டமும் நோக்கமம் இதுதான்:

தேவன்:  தமது ஜனத்தை தொடர்ந்து வழிநடத்த அந்த காலகட்டத்தில் ஒவ்வொருவிதமான ஆட்களை தெரிந்தெடுக்கிறார். உதாரணமாக: கோத்திரப்பிதாக்கள், பிரதான ஆசாரியர், லேவியர், நியாயாதிபதிகள், தீர்க்கதரிசிகள், இராஜாக்கள், அப்போஸ்தலர்கள், மேய்ப்பர்கள், சுவிசேஷகர்கள், போதகர் என்ற இந்த நீண்ட பட்டியலில் "யுத்த வீரர்களும்" அடங்குவர்.

தென் தமிழகத்தில் ஒரு கிராமம் இன்றும் தங்கள் இளைஞர்களை இந்திய இராணுவத்திற்கென்று ஆதியில் இருந்து இன்றுவரை அனுப்பித்தந்து கொண்டிருக்கிறது என ஏதோ ஒரு பத்திரிக்கையில் வாசித்த ஞாபகம் நினைவுக்கு வருகிறது.

வட மாநிலத்தில் பஞ்சாப் மிக சிறப்பு வாய்ந்தது. இந்திய இராணுவத்தில் அதிகமானோரை அனுப்பி தரும் மாநிலமாக அது திகழ்கிறது.


  • தேவனால் வாக்குப் பண்ணப்பட்ட கானான் தேசத்தையும், தேவ ஜனத்தையும் காப்பதில் யூதா கோத்திரத்திற்கு அவ்வளவு அர்ப்பணிப்பும் கரிசனையும் இருந்தது.

  • கானானைக் காப்பதிலும்,  அதற்காக தங்கள் கோத்திரத்து இளைஞர்களை யுத்த வீரர்களாக அதிகளவில் அனுப்பி வைப்பதில் அதிக ஆர்வம், பொறுப்புணர்வு, கரிசனை உள்ள யூதா கோத்திரத்தை தேவன் தெரிந்து கொண்டதில் வியப்பேதும் இல்லை.


ஆசரிப்புக்கூடாரத்தின் முன்பகுதியிலே யூதா கோத்திரத்தை நிறுத்த இதுவே காரணம்.

யூதா கோத்திரத்தின் கொடியின் சின்னம் - சிங்கம்.

யூதா வீரத்தில் சிங்கம் போன்றவன். (ஆதியாகமம்: 49:9).


துதிப்பவன் - கொடுப்பவனாயிருப்பான்:


யூதா கோத்திரத்திரம் தேவனுக்கு யுத்தவீரர்களை அதிகளவில் கொடுத்தது.

யூதா கோத்திரத்தில் வந்த தாவீது, சாலமோன் ஆலயம் கட்டுவதற்கு, பொன், வெள்ளி, வெண்கலம் திரளாக கொடுத்தான். (1இராஜாக்கள்: 7:47-51;  1நாளாகமம்: 23:5). 

கர்த்தருக்கு துதி செய்ய 4000 பேரை தாவீது நிறுத்தினான். (1நாளாகமம்: 16:4).