ஆகஸ்ட் 12, 2012

தேனீ விடும் சவால்

ஒரு டீ ஸ்பூன் அளவு தேனை எடுக்க 12 தேனீக்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் உழைக்க வேண்டும்.
ஒரு முறை தேன் எடுக்க தேனீக்கள் 12 கீ.மீ தூரம் வரை பறந்து சென்று வரவேண்டும்,இது போன்று ஒரே நாளில் அவை பல முறை செல்லும்.

அரை கிலோவுக்கு குறைவான ஒரு பவுண்டு தேனை எடுக்க ஒரு தேனீ 75,000கீ.மீ தூரம் பறந்துசென்று வரவேண்டும்.இது உலகை இரு முறை சுற்றி வருகிறதற்கு சமமாகும்!

தேன் சுவையை தருகிறது, அதை சேகரிக்க தேனீக்கள் எடுக்கிற சிரமம் நமக்கு சுமையாக தெரிகிறது! ஆனால் தேனீக்கள் தேனை எடுக்க ஓய்வறியாது உழைக்கிறது.

மனித மூளையை விட 15லட்சம் அளவு சிறியதாக தேனீக்கள் மூளை காணப்படுகிறது.ஒரு தேனீயின் மூளையில் 950,000 Neuronகள் உள்ளன,அனால் மனித மூளையிலோ 100 முதல் 200 பில்லியன் வரை Neuron கள் உள்ளன.

தேனிக்கள் உழைப்பு நிச்சயம் மனிதனுக்கு ஒரு சவாலாக இருக்கிறது,தேனீ தேனை சேகரிக்க கடுமையாக உழைக்கும் போது,இந்த உலகத்தின் பாவத்திலும்,சாபத்திலும் சிக்கி தவித்து கொண்டிருக்கும் ஆத்துமாக்களுக்கு இயேசுவை பற்றி சொல்லி அந்த ஆத்துமாக்களை இயேசுவுக்காக சேகரிக்க அயராது உழைக்க வேண்டியது நமது கடமை அல்லவா?

" விசுவாசிகள் எல்லா இடங்களிலும் பரவியிருந்தனர். விசுவாசிகள் சென்ற இடங்களில் எல்லாம் மக்களுக்கு நற்செய்தியைக் கூறினர்" அப்போஸ்தலர் 8:4.