ஆகஸ்ட் 11, 2012

"சிட்சை"

'சிட்சை'  என்பது பிற்காலத்தில் நமது முன்னேற்றத்துக்கோ மேம்பாட்டுக்கோ வழி வகுக்கக் கூடிய எந்த விதமான துன்பம் அல்லது வேதனையைக் குறிக்கும்.

பெற்றோர் தங்கள் பிள்ளைகள் நல்வாழ்க்கை செய்யத்தக்கதாக அவர்களைப் பயிற்றுவிக்கவும் அவர்களுக்குக் கற்பிக்கவும் சிட்சிக்கின்றனர். அதைப் போலவே, தேவனும் கிறிஸ்துவில் விசுவாசிகளானவர்களைப் பயிற்றுவித்து சிட்சிக்கிறார்.

நாம் எல்லோருமே சபாவங்களில் பெலவீனம் உள்ளவர்கள். குணத்தில் குறைவு பட்டவர்கள். இந்தப் பலவினங்களையும், குறைகளையும் நீக்கி நம்மைப்  பூரண சற்குணர்களாக்க தேவன் விரும்புகிறார். எனவே, நம்மைப் பரீட்சித்து அறியவும், நமது விசுவாசத்தைப் பலப்படுத்தவும், நமது தவறுகளைத் திருத்தவும் அவர் நமக்கு துன்பங்களை வர விடுகிறார்.

தேவன் தாமே சோதனையையோ தீமையையோ அனுப்ப மாட்டார். ஆனால், சாத்தான், பிசாசானவன் நம்மைச் சோதிக்க அனுமதிக்கிறார். கூடவே, நமது பாவங்களும் நமக்குத் துன்பங்களைக் கொண்டு வருகின்றன.

தேவனால் சிட்சிக்கப்படும்போது நாம் களிகூர வேண்டும். காரணம், அந்த சிட்சை நாம் தேவனுடைய பிள்ளைகள் என்பதற்கு அத்தாட்சியாய் இருக்கிறது. (எபிரேயர்: 12:5-12;  யாக்கோபு: 1:2-4;  1பேதுரு: 1:6,7).