****** குரங்கின் குணம் ******
ஆப்ரிக்கா கண்டத்தின் காடுகளில் ஜுலு என்னும் ஒருவகை சாதி மக்கள் வாழ்கின்றனர்.அவர்கள் தங்கள் உணவுக்காக அந்த காட்டில் உள்ள பல மிருகங்களை வேட்டையாடி உண்பார்கள் அதில் சுருண்ட வால் குரங்கு என்னும் ஒரு வகை குரங்கின் இறைச்சியை அவர்கள் மிகவும் விரும்பி உண்பார்கள்.
அந்த வகை சுருண்ட வால் குரங்கு மிகவும் தந்திரம் உள்ளது. ஜுலு வேட்டைகாரர்களின் வேட்டையாடும் திறனை நன்கறிந்து அதிக வேகமாக ஓடியும் மரங்களில் தாவியும் மறைந்துவிடும். அக்குரங்குகளை அம்பெய்து கொல்லவ, வலை வைத்து பிடிக்கவோ இவர்களால் முடியாது.
எனவே, இந்த வகையான சுருண்ட வால் குரங்கை பிடிக்க அந்த மக்கள் ஒருவகையான தந்திரத்தை கையாளுகின்றனர். அது என்னவென்றால்; இக்குரங்குகளுக்கு முலாம் பழ விதைகள் மீது மிகவும் பிரியம். ஆகவே அந்த மக்கள் ஒரு பெரிய முலாம் பழத்தை எடுத்து அக்குரங்கின் கை மட்டும் உள்ளே செல்லும் அளவிற்கு ஒரு சிறிய துளை இட்டு காடுகளில் அந்த பழங்களை வைத்து விட்டு பதுங்கி ஒளிந்து கொள்வார்கள்.
அக்குரங்குகள் அந்த பழங்களை கண்டதும் ஓடி வந்து அந்த சிறு துவாரத்தின் வழியாக தங்கள் கைகளை விட்டு முலாம் பழத்தின் விதைகளை கை நிரம்ப எடுத்துக்கொண்டு, கைகளை மூடிய வண்ணம் விதைகளை வெளியே எடுக்க முயலும். ஆனால் மூடிய கை அந்த சிறு துவாரத்தை விட அதிக அகலமாய் இருப்பதால் கையை வெளியே எடுக்க முடியாமல் தவிக்கும். எனினும் கைகளில் உள்ள விதைகளை விட்டு விட்டு, வெறும் கையை வெளியே எடுக்க அந்த குரங்கிற்கு மனம் வராது. அந்த நேரத்தில் அந்த மக்கள் ஓடி வந்து கைகளை வெளியே எடுக்கமுடியாமல் தவித்து கொண்டிருக்கும் அந்த குரங்குகளை பிடித்து கொன்று, அதன் இறைச்சியை மிகவும் மகிழ்ச்சியுடன் சாப்பிடுவார்கள்.
நண்பர்களே ! மனிதனும் இந்த குரங்கை போலவே நித்திய வாழ்வை பற்றி சிந்திக்காமல் பல சிற்றின்பங்களையும் பாவங்களையும் பற்றிக்கொண்டு அவற்றிலிருந்து விடுதலை பெற மனமில்லாமல் தங்களின் உடலுக்கு தீமையையும், ஆன்மாவிற்கு நித்திய அழிவையும் தேடிக்கொள்கின்றனர்.
"அவனவன் தன் தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு சோதிக்கப்படுகிறான். பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து பாவத்தை பிறப்பிக்கும்" (யாக்கோபு 1 : 14,15).
இயேசு கிறிஸ்துவின் இரத்தம் நம்முடைய எல்லாவிதமான பாவங்களையும் நீக்கி நம்மை சுத்தம் செய்யும்.

நன்றி: முகநூல்