ஆகஸ்ட் 12, 2012

எண்ணாகமம் புத்தகம் விளக்கவுரை - பக்கம்: 1


 எண்ணாகமம் புத்தகத்தின் விளக்கவுரை

 அதிகாரம்: 1


     "இஸ்ரவேலர் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்ட இரண்டாம் வருஷம் இரண்டாம் மாதம் முதல் தேதியில், கர்த்தர் சீனாய் வனாந்தரத்திலிருக்கிற ஆசரிப்புக் கூடாரத்திலே மோசேயை நோக்கி: நீங்கள் இஸ்ரவேல் புத்திரரின் முழுச்சபையாயிருக்கிற அவர்கள் பிதாக்களுடைய வீட்டு வம்சங்களிலுள்ள புருஷர்களாகிய சகல தலைககளையும் பேர்பேராக எண்ணித் தொகையேற்றுங்கள். இஸ்ரவேலிலே இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்துக்குப் புறப்படத்தக்கவர்கள் எல்லாரையும் அவர்கள் சேனைகளின்படி நீயும் ஆரோனும் எண்ணிப்பார்ப்பீர்களாக" (எண்ணாகமம்: 1:1-3) என்று தேவனாகிய கர்த்தர் கட்டளையிட்டார்.


 இஸ்ரவேலின் கோத்திரங்களைப் பற்றி தேவனுடைய திட்டம்:

 எண்ணாகமம்: 1:4 - "ஒவ்வொரு கோத்திரத்துக்கு ஒவ்வொரு மனிதன் உங்களோடே இருப்பானாக; அவன் தன் பிதாக்களின் வம்சத்துக்குத் தலைவனாயிருக்க வேண்டும்"

எண்ணாகமம்: 1:5 - "உங்களோடே நிற்க வேண்டிய மனிதருடைய நாமங்களாவன:..."

எண்ணாகமம்: 1:16 - "இவர்களே சபையில் ஏற்படுத்தப்பட்டவர்களும், தங்கள் தங்கள் பிதாக்களுடைய கோத்திரங்களில் பிரபுக்களும், இஸ்ரவேலில் ஆயிரவர்களுக்குத் தலைவருமாயிருப்பவர்கள் என்றார்."

எண்ணாகமம்: 1:52 - "இஸ்ரவேல் புத்திரர் தங்கள் தங்கள் பாளையத்தோடும், தங்கள் தங்கள் சேனையின் கொடியோடும் கூடாரம் போடக்கடவர்கள்"

... 20 வயது முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்கவர்கள்: (எண்ணாகமம்: 1:20-44)

அதிகமான அளவில் யுத்தத்திற்கு அனுப்பிய கோத்திரங்கள் வரிசைப்படி...

(எண்ணாகமம்: 1:20-44   /   ஆதியாகமம்: 29:32 முதல் 30:6-14)


  எண்
கோத்திரம்
எண்ணிக்கை
பெயரின் பொருள்
ஆதியாகமம்:29:32 முதல் ஆதியாகமம்: 30:6-14
யாருடைய மகன்?

   1

யூதா

74,600

துதி

29:35
லேயாளின் மகன்

2



தாண்

62,700

நியாயாதிபதி

30:6

பில்காளின் மகன்

3

சிமியோன்

59,300

கேட்குதல்

29:31
லேயாளின் மகன்

4

செபுலோன்

57,400

குடியிருப்பு

30:20
லேயாளின் மகன்

5

இசக்கார்

54,400

பிரதியுபகாரம்

30:18
லேயாளின் மகன்

6

நப்தலி

53,400

மல்யுத்தம்

30:8
பில்காளின் மகன்

7

ரூபன்

46,500

இதோ ஒரு மகன்

29:32
லேயாளின் மகன்

8

காத்

45,650

ஒரு கூட்டம்

30:11
சில்பாளின் மகன்

9

ஆசேர்

41,500

பாக்கியவான்

30:13
சில்பாளின் மகன்

10

எப்ராயீம்

40,500

பலுகு

41:52
யோசேப்பின் மகன்

11

பென்யமீன்

35,400

வலதுகரத்தின் மகன்

35:18
ராகேலின் மகன்

12

மனாசே

32,200

மறதி

41:51
யோசேப்பின் மகன்


ஃ ஆக மொத்தம் 6,03,150 யுத்த வீரர்கள் இஸ்ரவேல் கோத்திரங்களில் இருந்தனர். (ஆறு லட்சத்து மூவாயிரத்து நூற்றி ஐம்பது பேர்)

* லேவி - கோத்திரம் - "இணக்கம்" - (ஆதியாகமம்: 29:34).  லேயாளின் மகன்.

** லேவிக் கோத்திரத்தில் யுத்த வீரர்களை தேவன் தெரிந்து கொள்ளாமல்...  தனக்கு பணிவிடை செய்து பாக்கியம் பெறும் ஊழியத்தை அவர்களுக்கு கொடுத்து விட்டார்.