சங்கை வேதநாயகம் சாஸ்திரியார்.
சங்கை வேதநாயகம் சாஸ்திரியார் 1774 ஆம் ஆண்டு புரட்டாசி மாதம் 7ஆம் தேதி
ஞானப்பூ அம்மையாருக்கும்,கவிஞர் தேவசகாயம்பிள்ளைக்கும் மகனாக பிறந்தார்.
வேதநாயகம் சாஸ்திரியார் நெல்லையை சார்ந்தவர் என்றாலும்,பொதுவாக மக்கள் சாஸ்திரியாரை,அவர் வளர்ந்ததும்,வாழ்ந்ததுமான தஞ்சாவூரையே அடையாளமாய் வைத்து இன்றும் அவரை தஞ்சை வேதநாயகம் சாஸ்திரியார் என்றே அழைக்கின்றனர்.
வேதநாயகத்திற்கு அவர்களுடய பெற்றோர் வைத்த பெயர் "வேதபோதகம்" என்பதாகும்.ஆனால் அந்நாளில் அவருடைய சபையின் குருவுனுடைய பெயரும் "வேதபோதகம்" என்றிருந்ததால் குருவின் பெயரை உச்சரிக்க கூடாது என்று குரு பக்தியின் அடிபடையில் அவரை வேதபோதகம் என்று அழைக்காமல் "வேதநாயகம்"என்று அழைத்தனர்.
ஒரு நாள் வேதநாயகன் தன் பள்ளியில் சக மாணவர்களுடம் பாடம் படித்துகொண்டிருந்தார்,அப்ப ொழுது
ஒரு ஆள் உயரத்தில் காணப்பட்ட ஒரு சிலுவை ஆகாயத்திலிருந்து இறங்கி
வேதநாயகனுக்கு சமீபமாய் வருவதை கண்டார்.இந்த தரிசனத்தை காணும் போது
அவருக்கு வயது 9.
அந்த தரிசனத்தை பற்றி தன் பாட்டியிடம் வேதநாயகன் சொன்னபோது , "இது எல்லோருக்கும் கிடைக்க கூடிய தரிசனம் அல்ல,இது இயேசு ஸ்வாமியினுடைய தரிசனம் ;உன் வாழ்கையில் பெரிய அதிசயங்கள் நடக்கும் என்றார்கள்,அன்று முதல் வேதநாயகனுடைய வாழ்கை மாறியது.
ஒரு நாள் வேதநாயகனுடைய தந்தை தன் மகனின் படிப்பை பற்றி அவன் ஆசிரியரிடம் விசாரித்த போது "எமனுக்கு படிப்பு வந்தாலும் உன் மகனுக்கு படிப்பு வராது என்று சொல்லிவிட்டார்,ஆனால் பிற்காலத்தில் அவருடைய ஆசிரியர் சொன்ன வார்த்தை வேதநாயகனுடைய வாழ்கையில் பொய்யாகிவிட்டது.பழமொழிகள் அறிந்த பண்டிதனாகவும்,சாஸ்திரங்கள் பல கற்ற சாஸ்திரியகவும் சர்வ வல்லமையுள்ள தேவன் வேதநாயகனை உருவாக்கினார்.
ஒரு முறை ஸ்வார்ட்ஸ் ஐயர் அவர்கள் தஞ்சைக்கு செல்லும் பொது வேதநாயகத்தின் மேல் வைத்திருந்த பிரியத்தால் "நீ என்னுடன் தஞ்சைக்கு வருகிறாயா உன்னை ஒரு சிறந்த மனிதனாக்குவேன் என்றார்" நல்லது ஐயா நான் உங்களுடன் வருகிறேன் என்றான்.சில நாட்கள் கழித்து தன் தந்தையின் அனுமதியோடு வேதநாயகன் தஞ்சை புறப்பட்டார்.
ஸ்வார்ட்ஸ் ஐயர் மூலம் வேதநாயகத்திற்கு மனதிலும்,ஆன்மாவிலும் உறுதியான அஸ்திபாரம் போடப்பட்டது.
வேதநாயகன் தரங்கம்பாடியில் இருக்கும்போது தாமே ஒரு பாடலை இயற்றி பாடினார் இதை கேட்ட ஸ்வார்ட்ஸ் ஐயரின் உள்ளம் பூரித்தது,அப்பொழுது அவருக்கு வயது 15.
இயேசுவுக்கு அடுத்ததாக ஸ்வார்ட்ஸ் ஐயருக்கே இடம் கொடுத்து வாழ்க்கை நடத்தியவர் வேதநாயகன்.
1809ஆம் ஆண்டு ஞானதீப கவிஞர் என்ற பட்டதை சென்னை சீர்திருத்த சபையினரால் அவருக்கு வழங்கப்பட்டது.
வேதநாயக சாஸ்திரியாரை பணம் கொடுத்து யாரும் வாங்கமுடியாது என்பதில் தெளிவாக இருந்தார்.
சாஸ்திரியார் தன் 21வது வயதில்,தன் சொந்த அத்தை மகளான "வியாகமாள்" என்பவரை திருமணம் செய்தார்,ஆனால் அந்த அம்மையார் கர்ப்பவதியாகி மருவருடதிலேயே மரித்துபோனார்கள்.எனவே வேதநாயகர் தன் 22வது வயதிலேயே தனது முதல் தாரத்தை இழந்து போனார்.
ஒரு முறை இலங்கையிலுள்ள யாழ்ப்பாணத்திற்கு செல்ல நினைத்து,நாகப்பட்டினம் வந்து யாழ்ப்பாணம் செல்லும் தோணியில் ஏறி அமர்ந்தார்,வெகுநேரம் ஆகியும் தோணி புறப்படாததினால் தோணி ஏன் புறப்படவில்லை என்று கேட்டார்.அதற்கு தோணி ஓட்டுபவர் "எப்பொழுது வடகாற்று வீச துவங்குதோ அப்போதான் தோணி புறப்படும் என்றார்",அதற்கு வேதநாயகன் தோணி ஓட்டுபவரை பார்த்து "வடகாற்று எப்போது வரும் என்று கேட்டார்.அதை சொல்ல தெரியாது "என் குல தெய்வத்திற்கு கோழி வெட்டி,கோடாங்கி அடித்து கேட்க வேண்டும் என்றார்,அதற்கு வேதநாயகன் அதற்கு எல்லாம் நேரம் இல்லை என்று சொல்லி வடபுறம் திரும்பி ஆண்டவரை நோக்கி ஒருபாடலை பாடதொடங்கினர்,அவர் பாடிகொண்டிருக்கும் போதே வடகாற்று வீச துவங்கிவிட்டது.இந்த காட்சியை கண்ட படகோட்டி அப்படியே பிரம்மித்து ஆண்டவரை விசுவசித்து படகை செலுத்தினர்.
1864ம் ஆண்டு ஜனவரி மாதம் 24 தேதி தன் ஊழியகாரனாகிய சாஸ்திரியாரை தேவன் இம்மையிலிருந்து,மறுமைக்கு எடுத்துக்கொண்டார்.அந்த நாள் ஒரு Easter நாள் என்பது குறிப்பிடத்தக்கது.
அவரது உடல் தஞ்சையில் உள்ள St.Peter's சர்ச் பின்புறத்திலுள்ள கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
"அவன் மரித்தும் இன்னும் பேசுகிறான்" (எபிரெயர் 11:4 ) என்ற வசனத்திற்கு ஏற்றது போல்,சங்கை தே.வேதநாயகம் சாஸ்திரியார் மரித்தும் தன் பாடல்கள் மூலம் இன்றும் பேசிக்கொண்டே இருக்கிறார்.
வேதநாயகம் சாஸ்திரியார் நெல்லையை சார்ந்தவர் என்றாலும்,பொதுவாக மக்கள் சாஸ்திரியாரை,அவர் வளர்ந்ததும்,வாழ்ந்ததுமான தஞ்சாவூரையே அடையாளமாய் வைத்து இன்றும் அவரை தஞ்சை வேதநாயகம் சாஸ்திரியார் என்றே அழைக்கின்றனர்.
வேதநாயகத்திற்கு அவர்களுடய பெற்றோர் வைத்த பெயர் "வேதபோதகம்" என்பதாகும்.ஆனால் அந்நாளில் அவருடைய சபையின் குருவுனுடைய பெயரும் "வேதபோதகம்" என்றிருந்ததால் குருவின் பெயரை உச்சரிக்க கூடாது என்று குரு பக்தியின் அடிபடையில் அவரை வேதபோதகம் என்று அழைக்காமல் "வேதநாயகம்"என்று அழைத்தனர்.
ஒரு நாள் வேதநாயகன் தன் பள்ளியில் சக மாணவர்களுடம் பாடம் படித்துகொண்டிருந்தார்,அப்ப
அந்த தரிசனத்தை பற்றி தன் பாட்டியிடம் வேதநாயகன் சொன்னபோது , "இது எல்லோருக்கும் கிடைக்க கூடிய தரிசனம் அல்ல,இது இயேசு ஸ்வாமியினுடைய தரிசனம் ;உன் வாழ்கையில் பெரிய அதிசயங்கள் நடக்கும் என்றார்கள்,அன்று முதல் வேதநாயகனுடைய வாழ்கை மாறியது.
ஒரு நாள் வேதநாயகனுடைய தந்தை தன் மகனின் படிப்பை பற்றி அவன் ஆசிரியரிடம் விசாரித்த போது "எமனுக்கு படிப்பு வந்தாலும் உன் மகனுக்கு படிப்பு வராது என்று சொல்லிவிட்டார்,ஆனால் பிற்காலத்தில் அவருடைய ஆசிரியர் சொன்ன வார்த்தை வேதநாயகனுடைய வாழ்கையில் பொய்யாகிவிட்டது.பழமொழிகள் அறிந்த பண்டிதனாகவும்,சாஸ்திரங்கள்

நன்றி: முகநூல்