ஆகஸ்ட் 14, 2012

எண்ணாகமம் - விளக்கவுரை தொடர்:- 3.

 2. பன்னிரு கோத்திரங்களில் 20 வயது முதல் யுத்தத்திற்கு அதிக எண்ணிக்கையில் யுத்த வீரர்களை அனுப்பித் தந்த கோத்திரம்  யூதா கோத்திரம் தான். காரணம் என்ன?

 'யூதா' என்றால் 'துதி' என்று பொருள்.  யூதா ஒரு துதி வீரன்.

துதிப்பவன் நிச்சயம் தேவனுக்கு தருபவனாக இருப்பான். கர்த்தரை துதியாதவன் - தேவனை அறியாதவன்.

துதிக்கிற யூதாவிற்கு  கீழ்க்கண்ட திவ்விய சுபாவங்கள் இருக்கும்:

*பன்னிரு கோத்திரங்களையும் சத்துருக்களிடமிருந்து பாதுகாக்க அக்கறையும் கரிசனையும் நிறைந்த பாரமுள்ள படை வீரர்கள் வேண்டும்

* தேவன் தரும் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தைக் காக்கும் தேச பக்தி நிறைந்த யுத்த வீரர்கள் வேண்டும்.

*ஆசரிப்புக் கூடாரத்தை பாதுக்காக்க வேண்டும்.

* தம் சொந்த ஜனங்களை நேசிக்க வேண்டும்.

              இப்படிப்பட்ட பாரம் இருந்தாலொழிய யுத்தத்திற்கு அதிக எண்ணிக்கையில் ஆட்களை அனுப்ப இயலாது.

* யூதாவிற்கு இப்படிப்பட்ட சுபாவங்கள் இயற்கையாகவே இருந்தது. (ஆதியாகமம்: 43:8,9).  

யூதா, யாக்கோபுக்கு நான்காவது மகனாக பிறந்திருந்தாலும் கர்த்தருடைய யுத்தத்திற்கு அதிக எண்ணிக்கையில் வாலிபர்களை  அனுப்பித்தந்தது, தனக்குள்ள தங்களுக்குள்ள ஆத்தும பாரத்தையும், கரிசனையையும் காட்டுகிறது. 74,600 வாலிபர்களை அனுப்பித் தந்து முதலிடம் பெற்றான் யூதா.

* கர்த்தரைத் துதிப்பவர்களும், தேவனுக்கு அதிகமாக கொடுப்பவர்களும் - வாழ்வில் பின்னனியத்திலிருந்தாலும், தேவனாகிய கர்த்தர் அப்படிப்பட்டவர்களை அதி சீக்கிரமாய் முன்னனிக்கு கொண்டு வருவார் என்பதில் எவ்வளவேனும் சந்தேகமில்லை.

* இப்படிப்பட்டவர்கள் ஒருவருக்கும் தெரியாமல், அறியாமல் மறைவாக இருப்பினும், ஒருநாள் தேவன் அவர்களை வெளியே கொண்டு வந்து அனைவரின் கண்காண கனப்படுத்துவார்.

*  இப்படிப்பட்டவர்கள் முன்னேற முடியாமல் பல தடைகள், போராட்டங்களில் சிக்குண்டிருந்தாலும் சீக்கிரத்தில் அப்படிப்பட்டவர்களின் போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வந்து முன்னேறச் செய்வார்.

பயப்படாதிருங்கள்! கலங்காதிருங்கள்! உங்கள் நன்மைகள் ஒருபோதும் தேவனால் மறக்கப்படுவதில்லை. உங்கள் கிரியைகளுக்கேற்ற பலன் அவரோடே கூட வருகிறது.