ஆகஸ்ட் 02, 2012

பரிசுத்த வேதாகமம்

வேதாகமம்”

வேதாகமம்” என்னும் வார்த்தை "Biblios" என்னும் கிரேக்க வார்தையிலிருந்து வருகிறது. "Biblios" என்றால் “புத்தகம்” என்று பொருள்.

அப்போஸ்தலனாகிய பவுல் ரோமர்:1:4 - “பரிசுத்த வேதாகமங்கள்”, 2தீமோத்தேயு: 3:15 - பரிசுத்த வேத எழுத்துக்கள்” என்றும், ரோமர்: 3:2 - “தேவனுடைய வாக்கியங்கள்” என்றும் அழைக்கிறார்.

பல வசனங்களில் வேதாகமம் “பரிசுத்த வேத எழுத்துக்கள்” என்று பொருள்படும். “வேத வாக்கியங்கள் என்னும் பெயரினாலும் அழைக்கப்படுகிறது. (மத்தேயு்: 22:29; மாற்கு: 12:24; லூக்கா: 24:27; யோவான்: 5:39; அப்போஸ்தலர்: 17:11; ரோமர்: 1:2; மற்றும் பல...)

“இரண்டு உடன்படிக்கைகள்”

வேதாகமம் இரண்டு பெரும் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

1. பழைய ஏற்பாடு
2.புதிய ஏற்பாடு

பழைய ஏற்பாட்டில் 39 புஸ்தகங்கள் உள்ளன.
புதிய ஏற்பாட்டில் 27 புத்தகங்கள் உள்ளன.
இரண்டும் சோ்த்து முழ வேதாகமத்தில் மொத்தம் 66 புத்தகங்கள் உள்ளன.

“ஏற்பாடு என்ற வார்த்தையின் உண்மையான மொழிப்பெயர்பபு “உடன்படிக்கை” என்பதாகும். பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாடு ஆகிய இரண்டும் தேவன் தம் மக்களோடு செய்த ஒரு உடன்படிக்கைக்கு அடையாளமாக உள்ளன.

பழைய ஏற்பாட்டு நியாயப்பிரமாணம் அல்லது உடன்படிக்கைக்குப் பதிலாக இப்போது கிறிஸ்துவினால் உறுதிப்படுத்தப்பட்ட (எபிரேயர்: 8:6 - 10:18) புதிய “உடன்படிக்கை” (ஏற்பாடு) பின்பற்றப்படுகிறது.

பழைய ஏற்பாடு நீக்கப்படவில்லை. ஆனால் கிறிஸ்துவின் கிரியை நிறைவேற்றப்பட்டதினால் அது “முக்கியப்படுத்தப்படுகிறது”.