ஆகஸ்ட் 27, 2012

யூத நாள் காட்டி

யூத நாள் காட்டி (காலண்டர்)


யூதர்கள் இரு வகை காலண்டரை பயன்படுத்தினர்:


1. அரசாங்கக் காலண்டர்: 

இராஜாக்களுடைய அதிகாரப்பூர்வமானது; குழந்தைப் பிறப்பு, ஒப்பந்தங்கள் இவற்றிற்கு பயன்படுத்தப்பட்டது.

2. மதக் காலண்டர்: 

 பண்டிகைகள் முதலானவ‌ைகள் கணக்கிடப்பட்டன.

யூதர்களின் மாதங்கள் - ஆங்கில மாதங்கள் - நாட்கள் - அரசு மாதம் - மதமாதம்:
1. ட்டிஷ்ரி - செப்டம்பர் - அக்டோபர் - 30 - 1 - 7

2. கெஸ்வான் - அக்டோபர் - நவம்பர் - 29 (அ) 30 - 2 - 8

3. ஜிஸ்லெவ் - நவம்பர் - டிசம்பர் - 29 (அ) 30 - 3 - 9

4. ட்டிபெத் - டிசம்பர் - ஜனவரி - 29 - 4 - 10

5. ஷீபெத் - ஜனவரி - பிப்ரவரி - 30 - 5 - 11

6. ஆதார் - பிப்ரவரி - மார்ச் - 29 (அ) 30 - 6 - 12

7. நிசான் - மார்ச் - ஏப்ரல் - 30 - 7 - 1

8. ஐயார் - ஏப்ரல் - மே - 29 - 8 - 2

9. சிவான் - மே - ஜூன் - 30 - 9 - 3

10. ட்டம்மூன் - ஜூன் - ஜூலை - 29 - 10 - 4

11. ஆபிப் - ஜூலை - ஆகஸ்ட் - 30 - 11 - 5

12. எலூல் - ஆகஸ்ட் - செப்டம்பர் - 29 - 12 - 6


எபிரேய மாதங்கள் ஒன்று 30, அடுத்தது 29 நாட்களாக மாறிவரும்.

நமது ஆண்டைவிட அவர்களுடைய ஆண்டு குட்டையானது (வருடத்திற்கு 354 நாட்கள்).

எனவே, ஒவ்வொரு 3 ஆண்டுகளிலும் (19 ஆண்டுகளில் 7 முறை) இன்னொரு 29 நாட்களைக் கொண்டு மாதம் சோ்க்கப்படும். அப்படி சோ்க்கப்படும் ஆண்டில் “வேதார்” என்னும் மாதம் “ஆதார், நிசான்” மாதங்களுக்கிடையே சோ்க்கப்படும்.