பிப்ரவரி 15, 2015

சபையில் எழுப்புதல்

Image result for Revival in the church

சபையில் எழுப்புதல் வருவதற்கு போதகர்கள் செய்ய வேண்டியவை:

  • நீங்கள் ஒரு மேய்ப்பராக (Pastor) இருப்பீரானால், அதிகாலையில் அல்லது மதிய நேரத்தில் அல்லது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நீங்கள் மட்டுமே ஆலயத்திற்கு சென்று ஜெபியுங்கள்.

  • "என் சபையில் ஆவியானவரின் அசைவாடுதல் கண்கூடாக வெளிப்பட வேண்டும்" என்று ஜெபியுங்கள்.

  • பரிசுத்த ஆவியானவருக்கு கீழ்ப்படிய, அவர் பேசும்போது, அவரோடு இணைந்து செயல்பட ஆயத்தமாயிருங்கள்.

  • ஆவியானவரின் ஆளுகைக்கு உங்கள் வாழ்வை ஒப்புக் கொடுங்கள்.

  • கர்த்தரின் வழிநடத்துதல் எப்படியிருக்குமென கற்றுக் கொள்ளுங்கள்.

  • கர்த்தருக்காக தாகத்தோடு காத்திருப்பதே எழுப்புதல்.

  • எழுப்புதல் உங்கள் சபையில் வேண்டுமென்று நீங்கள் தாகத்தோடு அழுது ஜெபிக்கும்போது கர்த்தர் நிச்சயம் எழுப்புதலைத் தருவார்.

  • கர்த்தர் எழுப்புதலைத் தரும்வரை ஜெபிப்பதை விட்டுவிட வேண்டாம்.

* கர்த்தர் சபையை மிகவும் நேசிக்கிறார். இயேசுவே பிரதான மேய்ப்பர். அவர் உண்மையாகவே சபையை நேசிக்கிறார். எல்லாவிதமான அற்புதமான செயல்களும், எல்லா நேரங்களிலும் சபையில் நடைபெற வேண்டுமென விரும்புகிறார்.


* ஜெபிக்கிற ஒரு சபையை சாத்தானால் ஒருபொதும் எதிர்த்து நிற்க முடியாது. அவனுடைய வேலை தடுத்து நிறுத்தப்படுகிறது என்பதை அவன் அறிவான்.


* நீங்கள் தேவனைத் தேடும்போது உங்கள் சபைக்கும், உங்கள் பட்டணத்திற்கும், உங்கள் ஊருக்கும் எழுப்புதல் வேண்டுமென மறவாமல் ஜெபியுங்கள்.


* எழுப்புதல் இல்லாவிடில் நீங்கள் வாழும் ஊர் மற்றும் பட்டணம் நரகத்திற்கு போய்விடும். நரகத்திற்கு மக்கள் போகும் காட்சி உங்கள் கண்முன் அல்லது மனதில் தோன்றாவிட்டால், அவர்களை மீட்க நீங்கள் எதையுமே செய்ய மாட்டீர்கள்.


* எழுப்புதல் அக்கினி உங்களுக்குள் பற்றி எரியட்டும். கர்த்தருக்காக (பசி) தாகமாயிருங்கள்.


எழுப்புதலானது சபைக்கு வல்லமையை கொண்டு வருகிறது. எழுப்புதல் - சபையை ஆசீர்வதிக்கிறது. சபைக்குள் எழுப்புதல் வரும்போது மூன்று காரியங்களை அது செய்கிறது. அவை:

1. முதலாவது சபை உயர்த்தப்படுகிறது. சபை சுத்திகரிக்கப்படுகிறது. சபை தனது அழைப்பை தெரிந்து கொள்கிறது.

2.  சபையானது பாவிகளை ஈர்த்து பரிசுத்தாவியானவரின் வல்லமையால் அவர்கள் இரட்சிப்பு அடையும்படி செய்கிறது.

3. விசுவாசிகளை மீண்டும் இயேசுவின் மீது அளவற்ற அன்பு கொள்ளச் செய்கிறது.

ஒரு சபையானது ...

  • ஜெப வீடாக இருக்க வேண்டும்.

  • வெற்றியின் வீடாக இருக்க வேண்டும். 

  • அன்பின் வீடாக இருக்க வேண்டும்.

  • ஆறுதலின் வீடாக இருக்க வேண்டும்.

  • தேவனுடைய வீடு - ஒரு வைத்தியசாலை போல இருக்க வேண்டும். (Healing Center) 

  • பரிசுத்த ஆவியின் வரங்கள் செயல்பட வேண்டும்.

  • அற்புத அடையாளங்கள் நடைபெற வேண்டும்.

  • எழுப்புதல் மூலமாக, "இயேசுவில் பாதுகாப்பு" மக்களுக்கு உண்டாக வேண்டும்.

ஜெபம்:-   ஆண்டவரே! என் சபையில் இப்போதே எழுப்புதலைத் தாரும்!


-  Selected