பிப்ரவரி 16, 2015

குடும்ப எழுப்புதல்

Image result for family revival

கிறிஸ்தவ குடும்பங்கள் இல்லாமல், கிறிஸ்தவ சபைகள் செழிக்க முடியாது. ஏனென்றால், கிறிஸ்தவ குடும்பங்கள் சபையின் முதுகெலும்பைப் போன்றவைகள்.


கிறிஸ்தவ குடும்பம் என்றால் என்ன?

கர்த்தருக்குப் பயந்த தகப்பன், கர்த்தருக்குப் பயந்த தாய் மற்றும் கர்த்தருக்கு பயந்த பிள்ளைகள் கொண்டதுதான் கிறிஸ்தவ குடும்பம். கடின உழைப்பும், கர்த்தரை நேசிப்பதுமே அக் குடும்பத்தின் சொத்து.

கிறிஸ்தவ குடும்பத்தில் பெற்றோர்களின் பங்களிப்பு:

" பின்வரும் சந்ததியான பிள்ளைகளுக்கு நாங்கள் அவைகளை மறைக்காமல், கர்த்தரின் துதிகளையும் அவருடைய பலத்தையும், அவர் செய்த அவருடைய அதிசயங்களையும் விவரிப்போம் " (சங்கீதம்: 78:4)

* குழந்தைகளை கர்த்தருக்குள் வளர்த்து, அவருடைய இராஜ்யத்திற்குரிய காரியங்களை கற்றுக் கொடுங்கள்.

* பிள்ளைகளுக்கு ஜெபிக்கக் கற்றுக் கொடுங்கள்.

* ஆராதிக்க, வேதம் வாசிக்க, தியானிக்க, அபிஷேகத்தில் நிலைத்திருக்கக் கற்றுக் கொடுங்கள்.

* 12 வயதில் வேத பண்டிதர்களை திணறடித்த இயேசு கிறிஸ்துவைப்போல், எட்டு வயதில் கர்த்தருடைய சத்தம் கேட்டு கர்த்தரின் வார்த்தையை கீழே விழவொட்டாதிருந்த  பக்தியுள்ள சாமுவேலைப்போல் மாற்றுவது உங்கள் கடமை.

* சபையில் நடக்கும் சண்டே ஸ்கூலில் தவறாது பங்கெடுக்க உற்சாகப்படுத்துங்கள்.

* சபையில் நடக்கும் வாலிபர் கூடுகையில் முதண்மைபெற உந்தி தள்ளுங்கள்.

* சபையில் நடக்கும் எந்தவொரு நிகழ்வானாலும் முதன்முதலில் ஆர்வமெடுப்பதில் உங்கள் பிள்ளைகளாயிருக்க வையுங்கள்.

* சபையில் உள்ள மற்ற பிள்ளைகளோடு பழகவும், ஐக்கியமாயிருக்கவும் ஊக்குவியுங்கள்.

* சபையில் கர்த்தருக்காய் ஏதாகிலும் பணிவிடை செய்ய பழக்குவியுங்கள். அது கர்த்தருக்கு செய்யும் அரும்பணி என்பதை கூறுங்கள்.

* கீழ்படிதலையும், பெரியோரை கனம் பண்ணவும் கற்றுக் கொடுங்கள்.

* கர்த்தருக்கு ஊழியம் செய்யவும், ஊழியத்திற்கு செல்வோருடன் அனுப்பி வைக்கவும் தயங்காதீர்கள்.

* பிள்ளைகளின் கைகளில் கனத்திற்குரிய வகையில் காணிக்கைகளை கொடுத்து கர்த்தருக்கு செலுத்த பழக்குவியுங்கள். கர்த்தருக்குக் கொடுப்பதின் ஆசீர்வாத மேன்மையை அறியும்படி கற்று தாருங்கள்.

* ஆவிக்குரிய தரமான நல்ல புத்தகங்களை மட்டும் படிக்க ஊக்குவியுங்கள். மிஷினெரி சவால் நிறைந்த ஆவிக்குரிய நூல்களை வாங்கி கொடுத்து வாசிக்க உற்சாகப்படுத்துங்கள்.

* ஊழியவாஞ்சையுள்ள பிள்ளைகளை பயமுறுத்ததாபடி, உலக வேலையின் ஆசீவாதத்தைவிட கர்த்தருக்கு செய்யும் ஊழியம் மகாமேன்மையானது என்பதை எடுத்துச் சொல்லி அர்ப்பணிப்பில் நிலைக்க வழிகாட்டுங்கள்.

* பிள்ளைகளுக்குள் இருக்கும் தாலந்துகள், வரங்கள் இவைகளை கண்டறிந்து அதில் வளர கர்த்தருக்கு பயன்படுத்தப்பட வழி நடத்துங்கள்.

* குடும்ப ஜெபம் தவறாது நடக்கவும்,  குடும்ப அங்கத்தினர்கள் பங்குபெற வலியுறுத்தவும் வேண்டும். குடும்ப ஜெபத்தின் மேன்மையை பிள்ளைகள் அறியும்படி கோத்திரப்பிதா  ஊழியத்தை தகப்பனாகிய நீங்கள் நிறைவேற்றுங்கள் .

* குடும்ப ஜெபங்களில் - சபை ஆராதனை நேரங்களில் பாடுகின்ற பாடல்களை பாடி ஆராதியுங்கள். புதுப்பாடல்களை பாடவும், சி.டி.க்களை வாங்கி கற்றுக்கொள்ளவும் வழிவகை செய்யுங்கள்.

* சபையில் சொல்லப்பட்ட அறிவிப்புகளை குடும்பஜெபத்தின்போது நினைவுபடுத்துங்கள். அதில் நம் குடும்பத்தின் பங்களிப்பு என்ன என்பதையும் பக்திவிருத்திக்காக கூறுங்கள்.

* பிள்ளைகளின் முன்பு எப்போதும் பக்திவிருத்தியில், பக்தி வைராக்கியத்தில், விசுவாசத்தில் உற்சாகமாயிருங்கள். ஆர்வமெடுங்கள்.

* நாம் இரட்சிக்கப்பட வேண்டியதின் அவசியத்தை போதியுங்கள். இரட்சகரின் தியாக பலியின் நோக்கத்தை சொல்லி தாருங்கள்.

* கிறிஸ்தவ அறநெறி மற்றும் கிறிஸ்தவ கலாச்சாரத்தை, நற்பண்புகளை போதித்து, அதில் நிலைத்திருக்கவும் கடைபிடிக்கவும் வழி காட்டுங்கள்.

* பிள்ளைகளின் முன்பு பக்திவிருத்திக்கேதுவான  நலமானவைகளை பேசுங்கள். எந்தவொரு ஊழியரையும், ஊழியத்தையும் குறைகூறி பிள்ளைகள் முன்பு பேசிவிடாதீர்கள். 

* பிள்ளைகளுக்கு நல்ல முன்மாதிரி பெற்றோராகவும், விசுவாச வீரர்களாகவும், விசுவாச வார்த்தை பேசுகிறவர்களாகவும், நல்ல முன்னோடிகளாகவும் இருக்க பிரயாசப்படுங்கள்.

* கிறிஸ்தவ பண்டிகையின் உட்கருத்தை விவரித்து கூறுங்கள்.

* போலி உபதேசங்களுக்கு விலகி ஜீவிக்க போதியுங்கள்.

* சபையின் தரிசனம், அத்தரிசனம் நிறைவேற நமது பங்களிப்பு என்ன? என்பதை தெளிவாக எடுத்துக் கூறுங்கள். 

* பலிபீடத்தில் ஒப்புக் கொடுத்த ஈசாக்கைப்போல அர்ப்பணிப்புள்ள ஆவிக்குரிய பிள்ளைகளாக உருவாக்குங்கள்.

" அந்த விசுவாசம் முந்தி உன் பாட்டியாகிய லோவிசாளுக்குள்ளும் உன் தாயாகிய ஐனிக்கேயாளுக்குள்ளும் நிலைத்திருந்தது; அது உனக்குள்ளும் நிலைத்திருக்கிறதென்று நிச்சயித்திருக்கிறேன் " (2தீமோத்தேயு: 1:5).

"இனிப் பிறக்கும் பிள்ளைகளாகிய பின் சந்ததியார் அதை அறிந்து கொண்டு, அவர்கள் எழும்பித் தங்கள் பிள்ளைகளுக்கு அவைகளைக் சொல்லும்படிக்கும்; தேவன்மேல் அவர்கள் தங்கள் நம்பிக்கையை வைத்து, தேவனுடைய செயல்களை மறவாமல், அவர் கற்பனைகளைக் கைக்கொள்ளும்படிக்கும்... இவைகளைக் கட்டளையிட்டார்"  (சங்கீதம்: 78:6-8)

 ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு , "கர்த்தரின் அக்கினி" கடந்து போக வேண்டும். அது உங்கள் பொறுப்பு