பராமரிப்புக்குழு
(Care Cell)
சபையில் கூடிவரும் விசுவாசிகள், தங்கள் அருகாமையில் இருந்து சபைக்கு வரும் விசுவாசிகளுடன் இணைந்து, ஜெபத்திற்கும், வேதவாசிப்பிற்கும், ஆலோசனைக்கும், உதவிக்கும் அந்த பகுதியில் சுவிசேஷம் அறிவிக்கப்படுவதற்கும் ஏதுவாக கூடிவரும் ஒரு கூட்டமே "பராமரிப்புக்குழு" என அழைக்கிறோம்.
*ஒரு சபை ஆரம்பிக்கும்போது ஒரு 'பராமரிப்புக்குழு' என்ற நிலையில்தான் ஆரம்பிக்கிறது என்று சொல்லலாம்.
சபை
"சபை" என்றால் - இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்பட்டு அவரால் அழைக்கப்பட்ட மக்கள். இயேசு கிறிஸ்துவை தங்கள் இராஜாவாகவும், ஆண்டவராகவும், இரட்சகராகவும் விசுவாசித்து, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றவர்கள் நிறைந்த கூட்டம். சபை என்பது கட்டிடமல்ல; சபை என்பது மக்கள் கூட்டம். இது ஒரு சமுதாயம்; சபை என்பது ஒரு குடும்பம்; ஒரு சரீரம்; ஒரு மந்தை.
சபையின் நோக்கம்
* தேவனை ஆராதித்து அவரை மகிமைப்படுத்துதல்
* வேதத்தை கற்று அதற்கு கீழ்படிதல்
* ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டு அன்பு கூறுதல்
* சமுதாயத்திற்கு இயேசுவை அறிவித்து ஊழியம் செய்தல்
* உலக சமாதானத்திற்காக ஜெபித்தல்
பராமரிப்புக்குழு செயல்பாடுகள்
1. தரிசனமும் வேலையும்: (மத்தேயு: 28:19,20)
தேவனுக்காகப் புறப்பட்டுப் போகுதல். சகல ஜாதியாரையும் சீஷராக்குதல், கற்பனைகளைக் கற்றுக் கொடுத்தல், பயிற்சியளித்தல், சமுதாயத்தை மறுரூபப்படுத்துதல்
2. செயல்முறை: (2கொரிந்தியர்: 5:14-18)
ஒப்புரவாக்குதலின் ஊழியம் (2தீமோத்தேயு: 2:2) மற்றவர்களுக்கு போதிக்கத்தக்க உண்மையான மனிதர்களை உருவாக்கி ஒப்புக் கொடுத்தல்.
3. மூலதனம்:
பரிசுத்த ஆவியானவர் (அப்போஸ்தலர்: 1:8) / வேதப்புத்தகம் (1தீமோத்தேயு: 3:15-17)
4. அமைப்பு: பராமரிப்புக்குழு:
சிறுகுழுக்கள், பக்திவிருத்தியடைதல், விடுதலை செய்தல், சமுதாயத்தை மறுரூபப்படுத்துதல், விசுவாசிகள் யாவரும் இராஜாக்களாகவும், ஆசாரியர்களாகவும், தீர்க்கதரிசிகளாகவும் செயல்பட விடுவிக்கப்படுதல்.
5. இரண்டு முக்கிய நோக்கங்கள்:
அ) இரட்சிக்கப்படாத மக்கள் இரட்சிக்கப்பட வேண்டும்.
ஆ) இரட்சிக்கப்பட்ட மக்கள் தலைவர்களாக தகுதி பெற வேண்டும்
- இரட்சிக்கப்படாத மக்களை பெருக்கி, அதனிமித்தம் பெருக்கத்திற்கு வழிகாட்டுவதற்கு ஒரு குழு.
- இரட்சிக்கப்பட்ட மக்களை தலைவர்களாக உருவாக்கி தகுதிப்படுத்த மற்றொரு குழு
பயிற்சி
1. பராமரிப்புக்குழு குறித்த தரிசனம், இலக்கு, நோக்கம், அடிப்படை உண்மைகள் அவசியம். முக்கியத்தவம், அமைப்பு, நிர்வாகம் இவைகளைக் குறித்த பாடங்கள்.
2. பராமரிப்புக்குழுவில் கற்றுக் கொடுக்கப்பட வேண்டிய பாடங்கள், அதை பயன்படுத்தும் முறைகள், வேதத்தைக் கற்றுக் கொடுப்பது எப்படி?
3. ஜெபம் செய்தல், ஆராதனை நடத்துதல், பாடல் பாடுதல், ஜெபத்திற்குள் மக்களை நடத்துதல்
4. பராமரிப்புக்குழு கடந்து செல்லும் நிலைகள்:
* ஆரம்ப நிலை
* மாறும் நிலை
* சமுதாய நிலை
* செயல்படும் நிலை
* பெருகும் நிலை
I. குழுவினரின் எதிர்பார்ப்புகள்:
- வியாதி பிரச்சினை
- பல்வேறுபட்ட வகையான மக்களும், அடிப்படை தேவைகளைக்குறித்த எதிர்பார்ப்பு
- உறவு பிரச்சினைகள், சமாதானம் அற்ற நிலை
- பிசாசின் தொல்லைகள்
- தனிப்பட்ட மனநிலை பிரச்சினை: குழப்பம், மனப்போராட்டம், தூக்கம் இல்லை, பயம், குற்ற உணர்வு
II. குழு நடத்த வேண்டிய முறை:
1. இணைப்பு: நல்ல ஐக்கியம், நல்ல உறவு, நல்ல மனநிலை உள்ள நிலையை ஏற்படுத்துதல், இறுக்கத்தை தளர்த்துதல்
2. மகிமைப்படுத்துதல்: ஆரம்ப ஜெபம், துதி, ஆராதனை பகுதி, பாடல்கள், சாட்சி பகுதிகள்
3. வேத பாடம்: தேவையின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட பாடங்கள் அல்லது தனிப்பட்ட முறையில் தேவனோடு நேரம் செலவழித்தபோது, தேவன் இடைப்பட்ட சத்தியங்கள்
4. ஊழியம்: இரட்சிக்கப்படாதவர்களுக்காக ஜெபம், சமுதாயத்தை மறுரூபமாக்கப்படும் முயற்சிகள்
5. அறிவிப்பு; நிறைவு; மற்ற பராமரிப்புக்குழு, பெரிய (தலைமை)சபையின் அறிவிப்புகள், அடுத்தக் கட்ட வளர்ச்சிக்கு ஆயத்தப்படுத்துதல், பயிற்சி வகுப்புகளுக்கு ஆயத்தபடுத்துதல், அறிவிப்பு கொடுத்தல்.
III. ஒரு விசுவாசி கடந்து செல்லும் பயிற்சிகள்:
* சுவிசேஷம்
* ஞானஸ்நான வகுப்பு
* ஆவிக்குரிய பெற்றோர்
* பராமரிப்புக்குழு தலைவர் வகுப்பு
* மூப்பர் பயிற்சி
5. தலைமைத்துவ பண்புகள், குழு மனப்பான்மைகள், உறவுகளைப் புரிந்து கொள்ளுதல், ஆவியின் கனிகள், இராஜ்ய மனப்பான்மைகள்.
6. பராமரிப்பு பணிகள்: வீடு சந்திப்பு, வியாதியில் உள்ளோரை விசாரித்தல், பிரச்சினையில் உள்ளோருக்கு ஆலோசனை கூறுதல், வியாதியஸ்தரை குணமாக்குதல், ஆவியின் வரங்களை கண்டு பிடித்தலும், பயன்படுத்துதலும்.
7. ஆத்து ஆதாயம் செய்வது எப்படி? பின் தொடர்பு பணி செய்வது எப்படி? சாட்சியை பகிர்ந்து கொள்வது எப்படி? ஒருவரை இரட்சிப்பிற்குள் நடத்துவது எப்படி? ஞானஸ்நானத்தை சொல்லிக் கொடுப்பது எப்படி? ஆவிக்குரிய பெற்றோராக்குவது எப்படி? ஆவிக்குரிய தலைவராக்குவது எப்படி? பரிசுத்தாவியின் அபிஷேகத்திற்குள் வழி நடத்துவது எப்படி?
8. பராமரிப்பு குழுவை நடத்துவது எப்படி? அங்கத்தினரை புரிந்து கொள்வதும், அவர்களை உருவாக்குவதும் எப்படி? திட்டமிட்டு உருவாக்கும் பணியை செய்வது எப்படி? குழு பெருக்கத்திற்கு திட்டமிட்டு வேலை செய்வது எப்படி?
6. பராமரிப்பு பணிகள்: வீடு சந்திப்பு, வியாதியில் உள்ளோரை விசாரித்தல், பிரச்சினையில் உள்ளோருக்கு ஆலோசனை கூறுதல், வியாதியஸ்தரை குணமாக்குதல், ஆவியின் வரங்களை கண்டு பிடித்தலும், பயன்படுத்துதலும்.
7. ஆத்து ஆதாயம் செய்வது எப்படி? பின் தொடர்பு பணி செய்வது எப்படி? சாட்சியை பகிர்ந்து கொள்வது எப்படி? ஒருவரை இரட்சிப்பிற்குள் நடத்துவது எப்படி? ஞானஸ்நானத்தை சொல்லிக் கொடுப்பது எப்படி? ஆவிக்குரிய பெற்றோராக்குவது எப்படி? ஆவிக்குரிய தலைவராக்குவது எப்படி? பரிசுத்தாவியின் அபிஷேகத்திற்குள் வழி நடத்துவது எப்படி?
8. பராமரிப்பு குழுவை நடத்துவது எப்படி? அங்கத்தினரை புரிந்து கொள்வதும், அவர்களை உருவாக்குவதும் எப்படி? திட்டமிட்டு உருவாக்கும் பணியை செய்வது எப்படி? குழு பெருக்கத்திற்கு திட்டமிட்டு வேலை செய்வது எப்படி?
பராமரிப்புக்குழுவில் வரும் பிரச்சினைகள்
* பராமரிப்புக்குழுவில் வரும் பிரச்சினைகள் எவை? அதை எப்படி கையாள்வது?
* மனஸ்தாபங்கள், மனவருத்தங்களை கையாள்வது எப்படி? கருத்து வேறுபாடுகள் மற்றும் தவறான கருத்துக்களை கையாள்வது எப்படி?
* தலைவர், பராமரிப்புக்குழு நடக்கும் வீட்டுக்காரர் மற்றும் அவர்கள் குடும்பத்தார், மற்ற முதிர்ச்சி பெற்ற விசுவாசிகள், உதவி தலைவர்கள், அவிக்குரிய பெற்றோர், புதிய நபர்கள் - இவர்களுக்கு இடையில் ஏற்படும் உரசல்கள், விரிசல்கள், தகவல்கள் - இவைகளைக் கையாண்டு நல்ல முறையில் குழுவை நடத்தி அதைப் பெருக்கத்திற்குள் நடத்தி, ஒரு குழு மூலமாக பல குழுக்களை ஆரம்பித்து பெருக வேண்டும்.
குழுவுக்கும் அதன் தலைவருக்கும் இருக்க வேண்டிய குணாதிசயங்கள்
1. தேவனை நேசிக்கவும், அவரை அறிகிற எல்லா அறிவிலும் வளர வேண்டும். எல்லாரைக் காட்டிலும் அவரை அதிகம் நேசிக்கிறவனாக இருக்கிறவன். (மாற்கு: 12:29-31)
2. கற்றுக்கொள்ளவும், கீழ்படியவும் ஆர்வமாய் இருக்க வேண்டும். (பிலிப்பியர்: 3:1-14). அவரை அறிகிற அறிவின் மேன்மைக்காக எல்லாவற்றையும் விட்டு வெறுக்கிறவனாக இருக்க வேண்டும்.
3. வேதத்தை தியானிக்கிறவனாக அதை பகிர்ந்து கொள்ள அறிந்தவனாக இருக்க வேண்டும். (2தீமோத்தேயு: 3:14-17)
4. ஜெபிக்கிறவனாக இருக்க வேண்டும். மன்றாட்டு ஜெபம், ஆசீர்வதிக்கும் ஜெபம், விடுதலைக்காக ஜெபம். (பிலிப்பியர்: 4:4-7)
5. நல்ல உறவை கட்டி எழுப்புகிறவனாக இருக்க வேண்டும். (கொலோசெயர்: 2:2-4)
6. பிறருக்கு ஆறுதலும், ஆலோசனையும் கொடுக்கத்தக்கவனாக இருக்க வேண்டும். (ரோமர்: 12:1,2,10)
7. நாம் ஒருவருக்கொருவர் பொறுப்புள்ளவர்களாக இருக்கிறோம். பிறரை உற்சாகப்படுத்தவும், புத்தி சொல்லவும், பயிற்றுவிக்கவும் கடனாளிகளாக இருக்கிறோம். (எபிரெயர்: 10:24,25)
8. தேவனை ஆராதிப்பதிலும், கூடிக் கொண்டாடுதலும் தேவையான ஒன்று. அன்பை பகிர்ந்து கொள்ளுதல், ஐக்கியப்படுதல், விசாரித்தல். (2கொரிந்தியர்: 2:14,15; 8:23,24)
9. தலைவர்கள் உருவாக்கப்பட வேண்டும். அதனால், குழுக்கள் பெருக்கமடைய வேண்டும். உருவாக்குதல் தொடர்ந்து நடைபெற வேண்டிய ஒன்று. (அப்போஸ்தலர்: 20:20)
10. சந்திக்கப்படாதோரை கிறிஸ்துவின் சுவிசேஷத்தினால் சந்திக்கவும், சந்திக்கப்பட்டோரை வேதாகமத்தை கற்றுக் கொடுத்து அவர்களை கிறிஸ்துவின் சரீரமாகிய சபையில் நல்ல செயல்படும் பொறுப்புள்ள அங்கத்தினராக மாற்றி, சந்திக்கப்படாதோரை சந்திக்கத்தக்கவராக பயிற்சி கொடுத்து, சமுதாயத்தை மறுரூபப்படுத்த வேண்டும். (1பேதுரு: 3:15)
தலைவர்கள் கடமை
ஒரு தலைவன் ஆற்ற வேண்டிய கடமைகள்:
1. தூண்டுகோலாக இருப்பவர்
2. மேய்ப்பர்
3. தலைவர்
4. உருவாக்குபவர்
5. இயக்குநர்
சுவிசேஷத்தை அறிவிக்கும் முறை
- ஏதாவது இருவருக்கும் உறவு ஏற்படத்தக்கதாக பேசுங்கள்.
- பாராட்டக்கூடிய ஒன்றைக் கண்டு பிடித்துப் பேசுங்கள்
- மார்க்க சம்பந்தமாக, குடும்ப சம்பந்தமாக, சபை சம்பந்தமாக கேள்விகளைக் கேளுங்கள்
- அவர்கள் சொல்வதை அக்கறையாய் கவனியுங்கள்
- உரையாடலை கிறிஸ்துவுக்கு நேராக திருப்ப அறிந்திருங்கள்
- சுவிசேஷத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
- Selected -