பிப்ரவரி 16, 2015

தனித்தாள் ஊழியம்

Image result for personal evangelism

தனிநபர் ஊழியம் (அ) தனித்தாள் ஊழியம்

தனி ஒரு நபருக்கு சுவிசேஷம் அறிவித்தல்

'ஆத்தும ஆதாயம்' என்பது  -  கிறிஸ்துவை அறியாத ஒருவருக்கு, கிறிஸ்துவை அறிவித்து அவரை கிறிஸ்துவுக்கென்று ஆதாயம் செய்வதே - 'ஆத்தும ஆதாயம்' என்பது.

* முழுமையான ஆத்தும ஆதாயம் என்பது வெறுமனே நற்செய்தியைச் சொல்வதுடன் முடிவடைந்து விடுவதில்லை.

 முதலில் -  * நற்செய்தி அறிவிப்பது  -  ஆத்தும ஆதாயம் செய்வது   -   சீஷராக்குவது

அடுத்து -  * விதைப்பது  -  அறுவடை செய்வது  -  களஞ்சியம் சேர்ப்பது

Image result for personal evangelism

 சுவிசேஷம் அறிவித்தலுக்கான பயிற்சி...


1. அறிந்தபடி அல்லது தெரிந்தபடி  சொல்ல ஆரம்பியுங்கள்:

சரியாக சொல்ல வேண்டும் என்பது நல்ல விருப்பம்தான். ஆனால், நற்செய்தி ஊழியத்தில் அது ஒரு கட்டாய நிபந்தனையல்ல.  எனவே, உங்களுக்கு தெரிந்தபடி, அல்லது அறிந்தபடி நற்செய்தியை சொல்ல ஆரம்பியுங்கள்.

பிலிப்பு, நாத்தான்வேலைக் கண்டு, "நியாயப்பிரமாணத்திலே மோசேயும் தீர்க்கதரிசிகளும் எழுதியிருக்கிறவரைக் கண்டோம்; அவர் யோசேப்பின் குமாரனாயும், நாரேத்தூரானுமாகிய இயேசுவே... என்றார்" (யோவான்: 1:45).

* பிலிப்பு ஆதாயம் செய்தது -  நாத்தான்வேலை;  அவன் இயேசுவைப் பற்றி கூறினதோ...  அரைகுறையான விதத்தில்தான். அதாவது, தேவ குமாரனை - யோசேப்பின் மகன் என்கிறான். பெத்லகேமில் பிறந்து சிலகாலம் நாசரேத்தில் வளர்ந்தவர் என்று சரியாக சொல்லியிருந்தால்...  நாத்தான்வேல், "நாசரேத்திலிருந்து யாதொரு நன்மையும் பிறக்கக்கூடுமோ?" என்று கேட்டிருக்க மாட்டான் (யோவான்: 3:41).

***ஆயினும், அந்த தவறான செய்தி ஒரு ஆத்தும ஆதாயத்தை தடுத்தி நிறுத்தி விடவில்லை*** 

2. "வந்தபடி சொல்லி" விடுங்கள்:

* துவங்குவதுதான் பிரச்சினையென்றால், 'அறிந்தபடி' - 'வந்தபடி' என்ற இந்த இரண்டு முறைகளில் பயன்படுத்தி ஆரம்பித்து விடுங்கள்.

* பிரச்சினையுள்ள தேவையுள்ள மக்களைச் சந்திக்கும்போது அவர்களுடைய வேதனையான கேள்விகள் ஏற்படுத்தும் நிர்பந்தத்திற்கு பதில் கூறும் வண்ணமாக 'தெரிந்தபடி - வந்தபடி' சொல்ல துணிவு கொள்ளுங்கள்.

* 'நான் செய்த எல்லாவற்றையும் எனக்குச் சொன்னார்' என்று சாட்சி சொன்ன அந்த ஸ்திரீயினுடைய வார்த்தையினிமித்தம் அந்த சமாரியாவினர் அநேகர் அவர்மேல் விசுவாசமுள்ளவர்களானார்கள். (யோவான்: 2:1;  5:39)

ஆத்துமாதாயம் செய்வது...

* எந்த முறையில் சொன்னாலும் இரட்சிப்பில் நடத்துவதே காரியம் என்பதை அறிந்துகொள்ள வேண்டும். எனவே, இரட்சிப்பின் அனுபவத்தை விபரமாக அறிந்து கொள்ள வேண்டும்.

*  இரட்சிப்பின் நிச்சயத்திற்குள் நடத்துவது என்பது தேவனோடுள்ள உறவில் ஒரு துவக்கமே. ஆனால், தொடர்ந்து வளர அவருடன் எப்போதும், எந்நாளும் ஐக்கியம் கொள்வது அவசியம். அதை இரட்சிக்கப்பட்டவர்கள் உணர வேண்டும். நடத்தியவர்களும் உணர வேண்டும். அப்போதுதான் பின் தொடர்பு பணி நடைபெறும்.

சீஷராக்குவது...

ஆழமான பிரதிஷ்டைகளை இங்கு நாம் குறிப்பிடவில்லை. நற்செய்தி ஊழியப் பார்வையில் சீஷர் என்று சொல்வது.

* இயேசுவை மட்டும் இனி வணங்குவது

* இரட்சிப்பின் அனுபவத்தில் நிலைத்திருப்பது - வளருவது

* ஆலயத்திற்கு தானாகவே வரத் துவங்குவது

* சாட்சியாக வாழ ஆரம்பிப்பதுடன், பிறருக்கு இரட்சிப்பின் செய்தியைக் கூறுவது

ஆத்தும ஆதாயம் செய்வோருக்கு எழும்பும் ஐந்து கேள்விகள்:

1. நான் தகுதியானவனா? (யாத்திராகமம்: 3:11; மத்தேயு: 4:19)

2. யாரிடம் போவேன்?  (மத்தேயு: 4:19; சங்கீதம்: 4:7)

3. என்ன சொல்வேன்?  (யாத்திராகமம்: 3:15)

4. என்னை நம்புவார்களா?  (யாத்திராகமம்: 4:10)

5. வேறு யாரையாவது அனுப்பி விடக் கூடாதா? (யாத்திராகமம்: 4:13/  ஏசாயா: 6:8)

யாரிடம்? எப்போது? - என்ற முக்கிய  கேள்விக்கு  உரிய பதில்:

* திரளான மக்களுக்கு நேரம் எடுத்து உபதேசித்தார். அவர்கள் யாரென்றால், மேய்ப்பனில்லாத ஆடுகளும், தொய்ந்துபோன ஜனங்களுமே (மத்தேயு: 9:36,37)

* வாஞ்சையோடு பார்க்க ஆசைப்பட்ட, சகேயுவிடம் மட்டுமே தமது நேரத்தை செலவழித்தார். (லூக்கா: 19:3-10)

* வேத வசனத்தில் தாகம் கொண்ட மரியாளிடம் பேசிக் கொண்டிருந்தார். (லூக்கா: 10:39-42)

* உள்நோக்கத்தோடு, வேறு ஆசைகளோடு இருந்த மக்கள் வாஞ்சையோடு தேடினதாக நாடகமாடினபோது, அவர்களை சாமார்த்தியமாக ஒதுக்கி விட்டார். 9யோவான்: 6:15)

* 'இந்த இடத்தை விட்டு அகன்றுபோம்' என்று சொன்னபோது, எனக்கு உரிமை உண்டு என வாதிடாமல்... அமைதலாக கடந்து சென்றார். (மாற்கு: 5:17,18)

* சிலுவையின் மரணத்தின் போது  கூட, வாதம் செய்த கள்ளனிடம் பேசி, தனது பொன்னான நேரத்தை இழந்து விடாமல் தனது வார்த்தையை நம்பின கள்ளினிடமே பேசினார். (லூக்கா: 22:39-43)

* அதேசமயம் எதிர்வாதம் செய்த மக்களிடம் ஓடிஒளிந்து விடவில்லை. அவர்களிடம் சத்தியத்தைப் பேச நேரம் எடுக்கவில்லை என்பதை மட்டும் நினைவில் வையுங்கள்.

-  Selected - Thanks: TOE