நேசரின் தோட்ட வாசகர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்.
எங்கள் நாமகிரிப்பேட்டை நேசரின் தோட்டம் ஏ.ஜி.சபையின் ஊழிய தரிசனம், இலக்குகள், செயல்பாடுகள் நிறைவேற உங்களது தனி ஜெபங்களில், குடும்ப ஜெபங்களில் அனுதினமும் ஜெபித்துக்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
நாமகிரிப்பேட்டையில் உள்ள மொத்த மக்கள் தொகை: 1,09,963 பேர். நம் சபைக்கு தசமபாகமாக தேவையான மக்கள்: 10,907 பேர்.
நாமகிரிப்பேட்டை மையப்பகுதியில் மட்டும் உள்ள மொத்த மக்கள் தொகை: 12,675 பேர். நம் சபைக்கு தசமபாகமாக தேவையான மக்கள்: 2007 பேர்.
2015 முதல் 2020 க்குள் நாம் கேட்பதோ 2000 பேர்.
நாமகிரிப்பேட்டையில் உள்ள மொத்த மக்கள் தொகை: 1,09,963 பேர். நம் சபைக்கு தசமபாகமாக தேவையான மக்கள்: 10,907 பேர்.
நாமகிரிப்பேட்டை மையப்பகுதியில் மட்டும் உள்ள மொத்த மக்கள் தொகை: 12,675 பேர். நம் சபைக்கு தசமபாகமாக தேவையான மக்கள்: 2007 பேர்.
2015 முதல் 2020 க்குள் நாம் கேட்பதோ 2000 பேர்.
நமது தரிசனம்
நாமகிரிப்பேட்டை மக்கள் அனைவரும்
இரட்சிக்கப்பட வேண்டும். அனைவருக்கும் சுவிசேஷம் அறிவிக்கப்பட வேண்டும். 76 கிராமங்கள்
சந்திக்கப்பட வேண்டும். அனைத்து தரப்பினரும் மீட்கப்பட வேண்டும். எந்த ஒரு ஆத்துமாவும்
கிறிஸ்துவை அறியாமல் மரிக்கக்கூடாது. 2015 முதல் 2020 க்குள் 2000 பேர் இரட்சிக்கப்பட்டு
ஆராதனைக்கு வரவேண்டும். எங்கு பார்த்தாலும், எங்கு திரும்பினாலும் கர்த்தருடைய பிள்ளைகளாக
காணப்பட வேண்டும். ஒவ்வொரு வீடுகளிலும் கர்த்தரைத் துதிக்கிற துதியும், துதிப்பாடலும்,
ஜெப சத்தமும் காணப்பட வேண்டும். அனைத்து வீடுகள், கடைகள் மற்றும் அரசு அலுவலகங்களில்
கர்த்தருடைய காலண்டர்கள், வசனங்கள் காணப்பட வேண்டும். ஜனங்கள் கர்த்தரை ஆராதிக்க, குடும்பம் குடும்பமாக, ஜாதிஜாதியாக, வம்சம் வம்சமாக வாஞ்சையோடும்,
தாகத்தோடும் அணியணியாக, திரள் திரளாக நமது ஆலயத்தை நோக்கி படையெடுத்து வர ஆவியானவர்
உதவி செய்ய வேண்டும். டூவீலர், கார்கள் மற்றும் வேன், பஸ்களில், ரயில்களில், விமானங்களில்
ஏறி மக்கள் ஆராதிக்க வர வேண்டும்.
நமது இலக்குகள்
(2015 – 2020)
தரிசனத்தை செயல்படுத்த -
இலக்கு தேவை; தரிசனம் இலக்காக மாற வேண்டும்
1. வருடத்திற்கு
400 புதிய ஆத்துமாக்கள் ஆராதனைக்கு வர வேண்டும். (இரண்டு ஆராதனை 200 + 200 = 400)
2. 2020 ல்
2000 பேர் இரட்சிக்கப்பட்டு ஆராதனை அங்கத்தினர்களாக இருக்க வேண்டும்.
3. வருடத்திற்கு
ஒன்று அதிகபட்சம் இரண்டு கிளை சபைகளை நிறுவுதல்
4. 2020 க்குள்
76 கிராமங்களுக்கும் சுவிசேஷத்தை முழுவதும் அறிவிக்க வேண்டும்.
5. ஆவிக்குரிய
தலைவர்கள், ஜெபக்குழு தலைவர்கள் 100 பேரை உருவாக்குதல்
6. வருடத்திற்கு
50 ஜெபப் பங்காளர்கள், ஜெபக்குழுக்கள் 10
7. ஊழிய வளர்ச்சி
நிதி, ஆலயநிலம் மற்றும் கட்டிட விஸ்தரிப்பு நிதி இலட்சங்களில் சேகரித்தல்
செயல்பாடு
(செயல்பாடு என்பது - "தரிசனத்தை நிறைவேற்றப் பாடுபடுவது" )
“என் பின்னே வாருங்கள், உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன்” (மாற்கு: 1:17)
-: இலக்கு செயல்பாடாக மாற வேண்டும் :-
(செயல்பாடு என்பது - "தரிசனத்தை நிறைவேற்றப் பாடுபடுவது" )
“என் பின்னே வாருங்கள், உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன்” (மாற்கு: 1:17)
-: இலக்கு செயல்பாடாக மாற வேண்டும் :-
1.
ஆண்கள் நற்செய்திக்
குழு, பெண்கள் நற்செய்திக் குழு, வாலிபர் நற்செய்திகுழு ஆரம்பித்தல்
2. 25,000 கைப்பிரதிகளை விநியோகித்து சுவிசேஷம் அறிவித்தல்,
தெருப்பிரசங்கம் செய்தல்
3. நற்செய்தி கூட்டங்கள், எழுப்புதல் கூட்டங்கள் மூலம்
சுவிசேஷம் அறிவித்தல்
4. ஜெபக்குழுக்கள், வீட்டுக்கூட்டங்கள், பராமரிப்பு குழுக்கள்
மூலம் ஆத்துமாக்கள் சந்திக்கப்படுதல்
5. 16 ஆம் தேதி நடக்கும் சுவிசேஷ கூடுகையில் புது ஆத்துமாக்களை
வழிநடத்துதல்
6. இரத்தக் கோட்டை ஜெபத்தின் மூலம் ஆத்துமாக்களை விடுவித்தல்
7. கிளை சபைகள் மூலம் தேவனுடைய இராஜ்யத்தை நிறுவுதல்
8. தனித்தாள், பின்தொடர், கடித ஊழியம், SMS
ஊழியம், மருத்துவமனை, வீடு சந்திப்பு செய்தல்
9. உபவாச ஜெபம், இரவு ஜெபம், ஜெப நடை, காத்திருப்பு ஜெபம்,
ஜாமக்கார முழு இரவு ஜெபம் செய்தல்
10. ஒய்கோஷ் ஜெபம், 40 நாள் உபவாசம், 30 நாள் உபவாசம்,
21 நாள் உபவாச ஜெபம் செய்தல்
தேவ திட்டத்தை செயல்படுத்த ஆட்கள் வேண்டும்
பெயர்: …………………………………………………………………………………… வேலை:……………………………………………………………………
ஓய்வு நேரம்: காலை:………………............ மாலை:…………………………….
ஓய்வு நேரம்: காலை:………………............ மாலை:…………………………….
செல்: ……………………………………………………………………….., ……………………………………………………………………………., மின்னஞ்சல்: ......................................................
1.............................................. 2............................................... 3..................................................
4............................................. 5............................................... 6...................................................
பொறுப்பெடுக்கும்
செயல் திட்டம்:
1.............................................. 2............................................... 3..................................................
அர்ப்பணிப்பு ஜெபம்:
ஆண்டவரே! எங்கள் சபையின் தரிசனமும், இலக்குகளும் செயல்படுத்தும்படிக்கு, தேவதிட்டத்தை நிறைவேற்ற சபையின் நடுவே, வேலையாட்களை எழுப்பும். "அறுப்பு மிகுதி; வேலையாட்களோ கொஞ்சம், அறுப்புக்கு எஜமான் வேலையாட்களை எழுப்பும்படிக்கு வேண்டிக் கொள்ளுங்கள்" என்றீரே! இதோ, வேண்டுகிறேன். வேலையாட்களை எழுப்பும்! என்னையும் உமது தேவ சேவைக்காக வேலையாளாய் மாற்றும்! அர்ப்பணிக்கிறேன்! எடுத்து உபயோகப்படுத்துமையா! இயேசுவே! எடுத்து உபயோகப்படுத்தும்! மேலே உள்ள ஊழிய செயல்பாடுகளில் எனக்கான ஊழிய பொறுப்புகளை எடுக்க உதவி செய்யும். ஆமென்!