பிப்ரவரி 12, 2015

யாரால் உதவ முடியும்?


யாரால் உதவ முடியும்? 
 (Who can help?)

நிக்கோலஸ் என்ற இராஜா தன்னுடைய படை முகாமிட்டிருந்த இடத்தை, இரவு நேரத்தில் பார்வையிட வந்தார். 

இராணுவ வீரர்கள் தங்கியிருந்த எல்லா கூடாரங்களும் அமைதலாகவும், இருளாகவும் இருந்தன. நடு இரவாயிருந்ததால் எல்லா வீரர்களும் தூங்கிக் கொண்டிருந்தனர். 

இராஜா முகாமைச் சுற்றி வந்தபோது ஒரு கூடாரத்தில் மட்டும் விளக்கு எரிந்து கொண்டிருந்தது.  உடனே இராஜா தன் குதிரையை விட்டு இறங்கி, அந்த கூடாரத்திற்குள் நுழைந்தார்.

அங்கு ஒரு மேஜையின் மீது விளக்கு எரிந்து கொண்டிருந்தது.  மேஜையில் சாய்ந்தபடி ஒரு இராணுவ வீரன் உறங்கிக் கொண்டிருந்தான். அந்த விளக்குத்தண்டின் கீழே ஒரு கடிதம் இருந்தது. அது அந்த இராணுவ வீரனின் தாயார் எழுதிய கடிதம் ஆகும்.

அதில் அவனுடைய தாயார், தனக்கு இருக்கும் ஏராளமான கடன்களைக் குறித்தும் அவற்றைத் திரும்ப செலுத்த முடியாமல் தவிப்பதாகவும், தனக்கு உதவி செய்ய வேண்டும் என்றும் எழுதியிருந்தார்கள்.

அதைப் படித்த அந்த இராணுவ வீரன், 'இவ்வளவு பெரிய கடனை என்னால் எப்படி அடைக்க முடியும்? எனக்கு யாரால் உதவ முடியும்?' என்று அந்த கடிதத்தின் கீழே எழுதிவிட்டு, சோகத்தோடு தூங்கியிருந்தான்.

அதைப் படித்த இராஜா, உடனே எழுதுகோலை எடுத்து, 'யாரால் உதவ முடியும்?' என்ற வார்த்தைக்கு கீழே நிக்கோலஸ் என்று எழுதி விட்டுச் சென்றார்.  அந்த இராணுவ வீரனின் கடனும் அடைந்தது.

Image result for Who can help

அருமையானவர்களே!

இன்றும் அநேகர், 'எனக்கு யார் உதவி செய்வார்கள்?' என்று ஏங்கித் தவித்துக் கொண்டிருக்கின்றனர். பாவம், சாபம், வியாதி, வறுமை, கஷ்டம், கடன் மற்றும் தோல்வி ஆகியவற்றிலிருந்து - 'யார் என்னை விடுவிப்பார்?' என்ற கேள்விக்குஇராஜாதி இராஜா, கர்த்தாதி கர்த்தர், தேவாதி தேவன் தரும் பதில் - அவர் "இயேசு கிறிஸ்து" என்பதாகும்.

இவ்வாண்டில் உங்கள் வாழ்வில் பல இன்னல்கள் மற்றும் துன்பங்களை சந்தித்திருக்கலாம். எதிர்பாராத நிகழ்வுகளால் சோர்ந்திருக்கலாம். அல்லது எதிர்காலத்தின் நம்பிக்கையை இழந்திருக்கலாம். உங்களுக்கு உதவி செய்யவே, உங்களுக்கு வாழ்வளிக்கவே இயேசுகிறிஸ்து உலகத்தில் வந்தார் என்பதை நினைவு கூறுங்கள்.

அவரால் எல்லாம் கூடும் என்பதை விசுவாசியுங்கள். அவருக்கு உங்களை அர்ப்பணியுங்கள். தேவன் புதிய காரியங்களை செய்து, உங்களை ஆசீர்வதிப்பார்!

"கர்த்தர்  மேல் நம்பிக்கை வைத்து, கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன்  பாக்கியவான்" (எரேமியா: 17:7)

- Selected