பிப்ரவரி 16, 2015

கிறிஸ்துவை அறியாதோருக்கு


பொதுவான அறிவுரைகள்

சுவிசேஷம் அறிவித்தல்

* "புறஜாதி" என்ற பதத்திற்குப் பதிலாக "கிறிஸ்தவரல்லாதோர்" என்ற பதத்தை பயன்படுத்த வேண்டும்.

* புறமத அடையாளச் சின்னங்களைக் குறித்த விமர்சனங்களைத் தவிர்க்க வேண்டும்

* புறமத அடையாளச் சின்னங்கள்  (படம், சிலை வார்ப்புகள்) உள்ள வீடுகளில் உள்ள மக்களைச் சந்திக்கும்போது அதை அகற்றும் நிபந்தனையை சுவிசேஷம் அறிவித்தலுக்கு முன்னர் கொண்டு வரக்கூடாது

* "எங்கள் மதங்களிலும் இதுபோல் இருக்கிறது" என்போரிடம் "அப்படியா! சந்தோஷம்!"  அதை மற்றொரு நாள் உங்களிடமிருந்து தெரிந்து கொள்கிறேன். "இன்று நான் சொல்ல வந்ததை கூறும்படி அனுமதிக்கிறீர்களா?" என்று சொல்லி உரையாடலைத் தொடர முயற்சிக்க வேண்டும்.

* எந்த ஒரு கட்டத்திலும் வாக்குவாதத்திற்கோ, வலியுறுத்தலுக்கோ இறங்கி விடாமல், வேதாகம முறையில்... "அனுமதிப்போருக்கு சுவிசேஷம்" என்ற விதத்தில் கூற வேண்டும்.

* சத்தியத்தைக் கூறுவதுடன், விளக்கிக் கூறுவது அவசியம். (அப்போஸ்தலர்: 8:31; கலாத்தியர்: 2:2)

* எந்த முறையில் சொன்னாலும், சொந்தமாக சொல்வதுபோல் அறிவிப்பது அவசியம்


ஒப்புக் கொடுத்தல்

* தனியாள் ஊழியத்திலும் அர்ப்பணிப்புச் செய்ய அழைப்புக் கொடுக்க வேண்டும்

* தனியாள் ஊழியத்தில் அழைப்புக் கொடுக்கும் நேரத்தில் திடீரென்று வேறொரு புதிய நபர்  வந்தால்...  ஒரு குழப்பம் உண்டாகும். திரும்ப முதலில் இருந்து துவங்குவதா? அல்லது அவரை புறக்கணித்து, சட்டை செய்யாமல், ஏற்கனவே பேசிக் கொண்டிருந்தவரிடம் மட்டும் பேசி முடித்து விடுவதா?

* அதுபோன்ற சமயத்தில் சமயோசிதமாக முடிவெடுக்க ஆவியானவரைச் சார்ந்திருக்க வேண்டும். 

* பெரும்பாலும் அப்படிப்பட்ட சூழ்நிலையில், புதியவருக்கும், கேட்டுக் கொண்டிருப்பவருக்கும் இடையே உள்ள உறவை அறிந்து கொள்வது நல்லது. ஒருவேளை ... ........  கேட்பவரின் வாழ்வில் முடிவைத் திணிக்கும் உரிமை பெற்றவர் என்றால் "எந்த இடத்தில் நிறுத்தினோமோ அதிலிருந்து  தொடராமல் புதியவரிடம் சிலநிமிடம் பேசி நட்பு ஏற்படுத்தி, அவரிடமும் தெளிவுபடுத்தி, ஒரு இதமான சூழ்நிலை ஏற்பட்ட பிறகே... விட்ட இடத்தில் இருந்து ஆரம்பிக்க வேண்டும்.

* புதியவரின் குறுக்கீடு , ஏற்கனவே கேட்டுக் கொண்டு இருப்பவரிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாத பட்சத்தில் ... வெறுமனே 'ஹலோவுடன்' முடித்து இடைவெளியின்றி தொடர்வது நல்லது.

பின் தொடர் ஊழியம் (அல்லது) பின்தொடர் பணி:

*இயேசுவை ஏற்றுக் கொள்வதாக அவர் ஜெபித்து முடித்த உடனேயே நீங்கள் அவரை  மீண்டும் சந்திக்க வேண்டியதின் அவசியத்தையும் கூறிவிட வேண்டும்.

* மீண்டும் சந்திப்பதற்கான அனுமதியையும் பெற வேண்டும்.

* மீண்டும் சந்திக்கும் நேரம் பொருத்தமாய் இருக்க வேண்டும். எரிச்சலூட்டக் கூடியதாக இருக்கக் கூடாது.

*  பின் தொடர்புப் பணியில் மீண்டும் மீண்டும் சந்திப்பு என்பது அலுப்புத்தட்டுவதாகி விடக்கூடாது. எனவே, ... ஒவ்வொரு சந்திப்பிற்கும் ஒரு புது காரணமும் , ஒவ்வொரு சந்திப்பிலும் சொல்ல ஒரு புதுச் செய்தியும் வேண்டும்.

பின் தொடர்பு பணியின் நோக்கம்


  • இரட்சிப்பின் அனுபவத்தை விளக்கிக் கூறுவது
  • புதியவர்களுக்கு ஏற்படும் சந்தேகத்தை நிவர்த்தி செய்வது
  • அவர்களுடைய சூழ்நிலைக்குரிய அணுகுமுறை தேவை
  • ஆலயத்திற்கு நடத்தும் வரை விசேஷித்த கவனிப்பு தேவை

* எத்தனை சந்திப்பு என்பதற்கு விதிமுறை கிடையாது........  அவர்கள் இரட்சிப்பின் சத்தியத்தை முழுமையாக அறியுமட்டும், சபைக்கு அழைப்பில்லாமல் தாங்களாகவே வருமட்டும் - புதிய மக்களை சந்தித்துக் கொண்டு இருக்க வேண்டும்

சபைக்கு நடத்துவது

1. விதைத்தல்                                      -    வசனத்தை அறிவிப்பது

     அறுவடை செய்தல்                    -    இரட்சிப்பிற்குள் நடத்துவது

     களஞ்சியத்தில் சேர்த்தல்        -     சபைக்குள்  நடத்தப்படுவது

2. சபைக்கு நடத்தப்படாத எந்த ஒரு நற்செய்தி ஊழிய முயற்சியும், பாதிக் கிணறு தாண்டுவது போன்றதே. ஆகாயத்தில் சிலம்பம் பண்ணியதைப் போன்றதே.

3. சபைக்கு நடத்தப்படுவது என்பது, சபை அங்கத்துவம் பெறுவதற்கே என்று தவறாக புரிந்து கொள்ளக் கூடாது. சீஷத்துவ நோக்கத்துடன் அவர்களை சபைக்கு நடத்துகிறோம் - என்பதே காரியம்.

4. சபைக்குள் புதிய விசுவாசிகளை நடத்துவதற்கு முன்பு, கி.மு.விசுவாசிகளை தயார் செய்து விட வேண்டும். (இல்லாவிடில் அவர்களே புதியவர்களை துரத்தி விடுவார்கள்)

5. நற்செய்தியாளர்களுக்கும்  -  புதிய ஆத்துமாக்களை  சபைக்கு நடத்துவதற்கு விசேஷித்த பயிற்சி உண்டு. பயிற்றுவிப்பாளர்களை சபையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும். பயிற்சி வகுப்புகளை சபைகளில் தொடங்கி முறையான பயிற்சி கொடுக்கப்பட வேண்டும்.

-  Selected - Thanks: TOE