1. உண்மையான ஆன்மீகத் தலைவன் ஒருபோதும் உயர்வுக்காக பிரச்சாரம் செய்ய மாட்டான்.
2. திருச்சபை தலைவனாயிருப்பதற்கு வெறும் மனிதத்தன்மைக்கு மேலான பலமும், ஞானமும் தேவையாயிருக்கிறது.
3. பணிவிடை ஆவி உடையவனாயிருப்பான். (லூக்கா: 22:27)
4. பலவீனமான மனிதனை கட்டி எழுப்பும் அக்கறையுள்ளவன்.
5. கடவுளின் சிறந்த ஊழியன் உலகின் மோசமான மனிதனின் வாழ்க்கையையும் பிரகாசிக்கச் செய்ய வேண்டும்.
6. பிரச்சினைகளின் போது கட்டுப்பாட்டை இழக்கும் தலைவன் மரியாதையை இழந்து, பாதிப்பை அடைவான். மாறாக, அமைதியும், வளைந்து கொடுப்பதும் உகந்தது.
7. தாழ்மையான தலைவன் தன்மேல் சொல்லப்படும் சிறுசிறு குறைகள் மற்றும் சதித்தனமான குறைகளிலிருந்தும் கற்றுக் கொள்வான். தப்பிக் கொள்வான்.
8. உண்மையான ஆன்மீக தலைமைத்துவத்தின் செயல்பாட்டிற்கு வெளிப்புறமான அதிகாரமோ அல்லது அழுத்தமோ தேவைப்படாது.
9. உங்களால் ஒரு இரகசியத்தை காப்பாற்ற முடியவில்லையென்றால் தலைவனாக முயற்சி செய்யாதீர்கள்.
10. அதிகாரத்திற்கு எதிராக கலகம் செய்பவரும் , சுய கட்டுப்பாட்டை வெறுப்பவரும், தியாகத்திற்கும், கடின உழைப்பிற்கும் விலகியிருப்பவரும் தலைமையேற்க தகுதியற்றவர்கள்.
11. ஆன்மீகத்தலைவன் தனது வாக்கில் வாய்மையும், கடமையில் உத்தமும், பணத்தில் நேர்மையும், சேவையில் நாணயமும், பேச்சில் உண்மையும் உள்ளவராய் இருக்க வேண்டும்.
12. பிறருடைய பலகீனங்களைக் கண்டு பொறுமையற்றவராய் இருப்பவர் தலைமைத்துவத்தில் குறையுள்ளவராயிருப்பர்.
13. எனக்கு 'நேரமில்லை' என்று சாக்குப்போக்கு சொல்லுகிறவன் சிறப்பாக செயல்பட முடியாதவன்.
14. சிலுவையில்லாமல் தலைமைத்துவம் இல்லை.
15. தழும்புகள்தான் உண்மையான (சீஷன்) தலைமைத்துவத்தின் அதிகாரப்புர்வமான சின்னங்கள் ஆகும்.
16. குற்றச்சாட்டுக்கள் வரும்போது தலைவனின் தாழ்மை சோதிக்கப்படுகிறது. (பெரும்பாலும் ஒரு தலைவன் இழந்துபோகும்வரை மக்கள் அவரைக் கண்டு கொள்வதில்லை. அவர் உயிரோடு இருக்கும்போது அவர்மேல் எறிந்த கற்களைக் கொண்டு அவருக்கு நினைவுக் கட்டிடம் கட்டுவார்கள்)
17. குறை சொல்லும்' குணத்தை விட தாழ்மையே அதிகத்தை சாதிக்கும்.
18. "தான் தவறே செய்யாதவன்" என்று நினைக்கும் தலைவன்மேல் அவனைப் பின்பற்றுபவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கை குறைந்து விடும்.
19. வெற்றி பெற்றால் - கூவாதே; தோல்வியுற்றால் - முனகாதே.