"உமது ஜனங்கள் உம்மில் மகிழ்ந்திருக்கும்படி நீர் எங்களைத் திரும்ப உயிர்ப்பிக்க மாட்டீரோ" (சங்கீதம்: 85:6)
தனிநபரின் எழுப்புதல் என்றல் என்ன?
* ஆவிக்குரிய வாழ்க்கைக்கு மறுபடியும் திரும்புதல்
* தெளிவடைந்த மனநிலைக்கு வருதல்
* மீண்டும் கிறிஸ்துவுக்காக சுறுசுறுப்பாக செயல்படுதல்
* பாவியாகிய ஒரு மனிதனை இயேசு கிறிஸ்துவிடம் வரச் செய்வது.
* பாவத்திற்கு மரித்து, மறுபடியும் பிறக்கிற ஒரு அனுபவத்தைப் பெறுவது.
* மறுபடியும் பிறந்த அனுபவமுடைய விசுவாசிக்கு கிடைப்பது.
* பின்மாற்றம் அடைந்த கிறிஸ்தவனை மறுபடியும் ஆவிக்குரிய வாழ்க்கைக்கு அழைத்துச் செல்வது.
* பாவத்தைக் குறித்து ஆழ்ந்த உணர்வடைதல்.
* தேவாதி தேவனுக்கு கீழ்படியத் தொடங்குவது.
* தேவனின் பிரசன்னம், மகிமை, அதிசயங்களை குறித்த ஆழ்ந்த உணர்வை பெற்றுக்கொள்தல் (லூக்கா: 14:25-33).
எழுப்புதல் எப்போது தேவை?
"நியாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டிலே துவக்குங்காலமாயிருக்கிறது; முந்தி நம்மிடத்திலே அது துவக்கினால் தேவனுடைய சுவிசேஷத்திற்குக் கீழ்படியாதவர்களின் முடிவு என்னமாயிருக்கும்?" (1பேதுரு: 4:17)
* நாம் ஒருவர் மீது ஒருவர் காட்டும் அன்பு குறையும்போது எழுப்புதல் தேவை.
* கசப்பு, பொறாமை, விரோதம், புறங்கூறுதல் இவைகள் பெருகி இருப்பின் நிச்சயம் எழுப்புதல் அவசியம்.
* உலகப்பிரகாரமான வாழ்க்கையில் அதிக ஈடுபாடு இருப்பின் எழுப்புதல் தேவை.
உதாரணம்: அதிகநேரம் டி.வி.பார்ப்பது, வேதத்தை வாசிக்காமல் பிறபுத்தகங்களை படிப்பது, அதிகநேரம் தூங்குவது, சினிமா பார்ப்பது, அரட்டை அடிப்பது, கேளிக்கை விடுதிகள், விளையாட்டு அரங்குகள் இவைகளால் அதிகம் ஈர்க்கப்படுவது...
* பொய் சொல்லுதல், புறங்கூறுதல், திருடுதல், கீழ்படியாமை அதிகம் இருந்தால் எழுப்புதல் தேவை.
* தேவனை ஆராதிப்பது, தேவனுக்கென்று நேரம் செலவழிப்பது மிகக் குறைவாக இருக்கும்போது எழுப்புதல் தேவை.
- எழுப்புதல் அடைந்த கிறிஸ்தவ விசுவாசி, அதிக ஆத்மபாரம் உடையவனாய் இருப்பான்
- பின்மாற்றமடைந்த கிறிஸ்தவன், பாவத்தில் உள்ள மக்கள் நரகத்திற்கு போனாலும் அதைக்குறித்து கவலைப்படவே மாட்டான்.
தனிநபர் எழுப்புதலுக்கு உதாரணம்:
லூக்கா: 19:1 - 11 - சகேயுவின் மனந்திரும்புதல்
லூக்கா: 14:25 - 33 - தன் ஜீவனை வெறுக்கும் சீஷனாக இருத்தல்
இக்கடைசி காலத்தில் தனிநபர் எழுப்புதல் மிக அவசியம்
"தாகமுள்ளவன்மேல் தண்ணீரையும், வறண்டநிலத்தின்மேல் ஆறுகளையும் ஊற்றுவேன்; உன் சந்ததியின்மேல் என் ஆவியையும், உன் சந்தானத்தின்மேல் என் ஆசீர்வாதத்தையும் ஊற்றுவேன்" (ஏசாயா: 44:3)
"என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம் பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளை விட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு சேமத்தைக் கொடுப்பேன்" (2நாளாகமம்: 7:14)
"தாகமுள்ளவன்மேல் தண்ணீரையும், வறண்டநிலத்தின்மேல் ஆறுகளையும் ஊற்றுவேன்; உன் சந்ததியின்மேல் என் ஆவியையும், உன் சந்தானத்தின்மேல் என் ஆசீர்வாதத்தையும் ஊற்றுவேன்" (ஏசாயா: 44:3)
"என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம் பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளை விட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு சேமத்தைக் கொடுப்பேன்" (2நாளாகமம்: 7:14)
பாவத்தின் பிடியிலிருந்து விடுதலை
சிறிய, பெரிய, மறைமுகமான, வெளியரங்கமான பாவங்கள், பொய் கூறுதல், பொறாமை, கசப்பு, விரோதம், பகைமை, வைராக்கியம், கோபம், சண்டை, சபித்தல், வாக்குவாதம், மாய்மாலம், அவிசுவாசம், கவலை, குடிவெறி, புகை, போதை பொருள் பழக்கம், சூதாட்டம், பிறரை வஞ்சிப்பது, பில்லி சூனியம், ஏவல் போன்றவற்றில் ஈடுபடுவது, புறங்கூறுதல், வதந்திகள் பரப்புவது, பொருளாசை, திருடுதல், லஞ்சம் வாங்குவது, கொடுப்பது, விபச்சாரம், வேசித்தனம், கொலை செய்தல், பழிவாங்குதல் இவைகள் பேர் முதலாய் இருக்கக்கூடாது. முழுவதும் இவைகளை விட்டொழிக்க வேண்டும் இயேசுவின் நாமத்தில். ஆண்டவர் இயேசு தரும் பாவ மன்னிப்பின் நிச்சயத்தைப் பெற்றுக் கொண்டு, பரிசுத்தமாக, சாட்சியாக வாழ அர்ப்பணிக்க வேண்டும்.
தனி நபர் எழுப்புதலை வாஞ்சியுங்கள்!
சபை எழுப்புதல் ஆகும்!
தேசம் மறுமலர்ச்சி பெறும்!
தேவ நாமம் மகிமை அடையும்!
சபை எழுப்புதல் ஆகும்!
தேசம் மறுமலர்ச்சி பெறும்!
தேவ நாமம் மகிமை அடையும்!
- Selected